இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி! எரிபொருள் இறக்குமதி விண்ணப்பங்களை புறக்கணிக்கும் வெளிநாடுகள்

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திறந்த கேள்விப்பத்திரங்களுக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் எந்தவொரு நாடும்  விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, 20-25 நிறுவனங்கள் மாத்திரம் கேள்விப்பத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவற்றில் மிகவும் பொருத்தமான 10 விண்ணப்பங்கள் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தரகு நிறுவனங்களின் எரிபொருள் இறக்குமதி இருப்பினும் அவற்றில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எவையும் உள்வாங்கப்படவில்லை எனவும் அவை அனைத்தும் முகவர் நிறுவனங்கள் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது. எனவே, முகவர் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதிப்பதா, வேண்டாமா … Read more

இலங்கையிலிருந்து இரகசியமாக வெளியேறும் வைத்தியர்கள்!

இலங்கையிலிருந்து கடந்த 8 மாதங்களில் சுமார் 500 வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து வைத்தியர்கள் வெளிநாடு செல்வது பாரதூரமான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடு செல்லும் வைத்திய நிபுணர்கள் கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற வைத்தியர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, பதவி விலகலை அறிவித்துள்ள … Read more

யாழில் மூத்த சகோதரனின் இழிவான செயல்: உயிரை மாய்த்த 20 வயது யுவதி

யாழில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரனால் வன்புணர்வுக்கு உள்ளாகிய இளம் பெண் மனவிரக்திக்கு உள்ளாகி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளார். போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட பாதிப்பு போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியுள்ளதாகவும் அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக … Read more

மனித உரிமைகள் பேரவையில் நம்பிக்கையை வெல்ல முயற்சிக்கும் இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் நாளை ஆரம்பமாகும் நிலையில், இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க நாடுகள் தயாராகின்றன. எனினும் இந்த முறை இலங்கைக்கு தண்டனையில் இருந்து விலக்களிக்கும் காரணம் கிடைத்திருக்கின்றது. வழமையாக ஏதாவது காரணங்களை கூறி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை ஏமாற்றி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைக்கு எதிராக முக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளன. இலங்கையில் நிலவும் பொருளாதார கீழ்நிலை அத்துடன் மனித உரிமைகள் பேரவையும் கடும் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.இந்த … Read more

போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இருவர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த ஈரான் மற்றும் சோமாலிய பிரஜைகள் இருவர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் பிரான்ஸ் மற்றும் தென்னாபிரிக்காவிற்கு செல்ல முயற்சித்த போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டு அவர்களது கடவுச்சீட்டுகள் போலியானவை என சந்தேகத்தின் பேரில் குடிவரவு அதிகாரிகள் சோதனையிட்டதையடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் … Read more

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் பங்கேற்க அமெரிக்கா தயார் : சமந்தா பவர் (Video)

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முற்படுகையில், அமெரிக்கா கடனளிப்பவராகவும் பாரிஸ் கிளப்பின் உறுப்பினராகவும் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் பங்கேற்க தயாராக இருப்பதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி உதவி திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,  கடன் மறுசீரமைப்பு “இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களும், குறிப்பாக சீன மக்கள் குடியரசு இந்தச் செயன்முறைக்கு வெளிப்படையாக ஒத்துழைக்க வேண்டியது … Read more

கொழும்பில் ATM அட்டை பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 8 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான ATMகளுக்கு பலமுறை வந்து நுட்பமான முறையில் பலரின் ATM அட்டைகளில் பணம் திருடியவர் கடுவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில் உள்ள ATMகளில் நபர் ஒருவர் பல்வேறு நபர்களின் ATM அட்டைகளை மோசடியான முறையில் திருடுவதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அதற்கமைய, அந்தந்த வங்கிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிஸார் … Read more

மின் கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ள பல நிறுவனங்கள்

வீடுகள், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் பாரிய அரச நிறுவனங்கள் உட்பட மொத்த நுகர்வோர், இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஜூன் மாத 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் ரூபா கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளனர். இதில் 9.56 பில்லியன் ரூபா கட்டணங்கள், சாதாரண வீட்டுப்பாவனையாளர்களின் கட்டணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் கோரிக்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் இந்த நிலுவைத் தொகையை வசூலிப்பது இன்றியமையாதது. எனவே மின்சார நுகர்வோர் தங்கள் நிலுவைத் தொகையை விரைவில் … Read more

ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2022 ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கை வலைப்பந்தாட்ட அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் ஏனைய வீரர்களின் ஒற்றுமை மற்றும் மகத்தான அர்ப்பணிப்பினால், சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை அணிக்கு இந்த சிறந்த வெற்றியைப் பெற முடிந்ததாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் செய்தி  சர்வதேச விளையாட்டு ரசிகர்கள் உள்ளிட்ட விளையாட்டை விரும்பும் அனைவரது கவனத்தையும் இலங்கையின் பக்கம் ஈர்த்த இந்த வெற்றி, … Read more

மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பிரித்தானிய தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்மு, உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை சந்தித்து, இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை, உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ளார். இரங்கலை குறிப்பேட்டில் பதிவு செய்த ஜனாதிபதி  இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவு குறிப்பேட்டிலும் இரங்கல் குறிப்பு ஒன்றை எழுதிய ஜனாதிபதி, இரண்டாவது எலிசபெத் மகாராணி 7 தசாப்தங்களாக உலக மக்களுக்காக ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டியுள்ளார். … Read more