இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக கொந்தளித்த மக்கள்! அவசர அவசரமாக கோட்டாபயவை சந்திக்கவுள்ள மகிந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசரமாக இன்று இரவு  சந்திக்கவுள்ளார்.  நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், இதன்போது பிரதமர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, சர்வகட்சிகளை இணைத்து இடைக்கால  அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விடுத்த கோரிக்கைக்கு அரச தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பொருட்கள் பற்றாக்குறை, அதிகரித்த … Read more

கொழும்பின் மற்றுமொரு பகுதியில் மக்கள் போராட்டம்: பொலிஸார் குவிப்பு (Video)

கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த பகுதியில் தற்பொழுது பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவண்ணம் பதாதைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source link

ஜனாதிபதி வீட்டின் முன் நபர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவே 55 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த போது தற்கொலை செய்துக்கொண்ட நபர் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.     Source link

டீசலுக்காக காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மின் உற்பத்திக்காக நாளொன்றுக்கு 3500 மெற்றிக் தொன் டீசல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இருப்புக்களை விநியோகிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எண்ணெய் தட்டுப்பாட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது, அத்துடன் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  Source link

ஊரடங்கு நடைமுறைப்படுத்தியமைக்கான காரணத்தை வெளியிட்ட அரசாங்கம் (Photo)

அவசரச் சட்டத்தை அரசு அறிவித்தது அமைதி, பொது வாழ்க்கை மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை, பொது ஒழுங்கு மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Source link

சமூக வலைத்தளங்களை முடக்கிய அரசு – பதவியை ராஜினாமா செய்த தலைவர்

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க இராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் சமூக ஊடகங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ராஜினாமா அறிவித்தல் வெளியாகி உள்ளது. இன்று காலை அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சமூக ஊடக வலையமைப்புகளை அணுகும் அனைத்து இணையத்தளங்களையும் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு தனது அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நேற்று தெரிவித்திருந்தார். … Read more

ஊரடங்கு சட்டத்தை மீறிய பெருமளவானோர் பொலிஸாரினால் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் … Read more

ஏடிஎம் இடையூறுகள் குறித்து தனியார் வங்கிகள் எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று பல தனியார் வங்கிகள் எச்சரித்துள்ளன. இது குறித்து இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகள் தமது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ATM/CRM/CDM இயந்திரங்களில் சேவைத் தடங்கல்களை சந்திக்க நேரிடலாம் என்பதையும், மின்சார விநியோகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமாக எங்கள் சில கிளைகள் மூடப்படலாம் எனவும் வங்கிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திரங்களுக்கான தற்காலிக மின்பிறப்பாக்கிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய டீசல் … Read more

இலங்கை அரசின் கோரிக்கையை மறுத்த புலம்பெயர் அமைப்புகள்!

இலங்கையில் முதலீடு செய்ய முன்வருமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை புலம்பெயர் அமைப்புகள் மறுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனடா, பிரித்தானியா, மற்றும் அமெரிக்காவில் செயற்படும் புலம்பெயர் அமைப்புகள் இவ்வாறு மறுப்பு வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இந்த நிலையில் முதலீடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்று புலம்பெயர் அமைப்புகள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள … Read more

7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்த தயாராகும் அரசாங்கம்! – முக்கிய பிரபலம் தகவல்

நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள நிலையில், 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்க முடியாத காரணத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள … Read more