தூத்துக்குடி: சொத்தை பிரித்துக் கேட்ட மகன்; கொலைசெய்து உடலை கிணற்றில் வீசிய கொடூரத் தந்தை!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். டேங்கர் லாரியில் குடிநீர் சப்ளை செய்து வரும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது மகன் சுபாஷ். இவருக்கு 2 வயதாக இருக்கும் போது காளியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து பாலசுப்பிரமணியன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட சுபாஷ் இதனையடுத்து பாலசுப்பிரமணியனின் மகன் சுபாஷ், தனது தாய்மாமா சவுந்தரராஜன் என்பவர் வீட்டில் வசித்து … Read more

What to watch on Theatre & OTT: DeAr, ஆவேஷம், வர்ஷங்களுக்கு சேஷம் – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ரோமியோ (தமிழ்) ரோமியோ விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரோமியோ’. விஜய் ஆண்டனி, விருப்பமில்லாமல் தன்னைத் திருமணம் செய்துகொண்ட மனைவியைக் காதலித்து, அவரது மனதை கவர நினைப்பதுதான் இதன் கதைக்களம். இன்றைய தலைமுறையினரின் திருமண வாழ்வை காமெடியாகப் பேசும் இத்திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. DeAr (தமிழ்) DeAr ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் … Read more

அரை டன் பழமாலை முதல் `ஷிஹ் சூ' வகை நாய் பரிசு வரை… களைகட்டும் தென்சென்னை தேர்தல் பிரசாரம்!

தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்தனும், பா.ஜ.க சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாகி இருக்கிறது தென்சென்னை. அதன்படி, தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்கள் மக்களை கவர, விதவிதமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரசாரத்தில் தமிழச்சி இந்நிலையில், தி.மு.க வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன், தான் தத்தெடுத்திருந்த சோழிங்கநல்லூர்- சித்தாலப்பாக்கம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதி தி.மு.க சார்பில், அரை டன் எடைகொண்ட பழங்கள் அடங்கிய மாலையை அணிவித்து … Read more

பிரதமரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்த மஸ்க்! ரிலையன்ஸ் பார்ட்னர்ஷிப்; குஜராத்துக்கு வருமா டெஸ்லா?

டெஸ்லா எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கின் இந்திய வருகை, ஒரு சிலரால் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. மஸ்க் இந்தியாவுக்கு வந்தால் –  டாடா, மஹிந்திரா, பிஒய்டி போன்ற பல நிறுவனங்களுக்கு ரிஸ்க் இருக்கிறது. ‛அதனால், நீ அமெரிக்காவிலேயே இருந்துடு சிவாஜி’ என்று இன்னொரு பக்கம் நம் ஊர் கம்பெனிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் சில ஆட்டோமொபைல் ஆர்வலர்கள், டெஸ்லாவைத் தமிழ்நாட்டுக்கு வரவேற்பதில் அவ்வளவாக உற்சாகம் காட்டுவதில்லை. இந்த நிலையில் எலான் … Read more

”அன்று ஜெயலலிதா, இன்று மோடி… கேள்வி கேட்கிறார்கள்; திமுக வாய் திறக்கவில்லை” – நிர்மலா சீதாராமன்

தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொண்டார். மேலவீதி மூல அனுமார் கோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் சிவகங்கை பூங்கா வரை வாகனத்தில் சென்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்து ஓட்டு கேட்டார். இதற்காக வந்த நிர்மலா சீதாராமனுக்கு பாஜகவினர் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். அத்துடன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் பிரசார வாகனத்தில் இருந்தபடியே … Read more

`இரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் தற்போது செல்ல வேண்டாம்' – வெளியுறவுத்துறை அறிவிப்பின் பின்னணி என்ன?

பாலஸ்தீனம் மீது கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர்தொடுத்து வரும் இஸ்ரேல், போர்நிறுத்தம் வேண்டுமென்று தொடர்ச்சியாகக் கூறிவரும் நாடுகளில் ஒன்றான இரான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது. அந்த வரிசையில், ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவிலிருக்கும் இரான் தூதரகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரான் ராணுவத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி – நெதன்யாகு இந்தத் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் தான் எனக் குற்றம்சாட்டிய இரான், பதிலடி தருவோம் … Read more

'அண்ணனை வெற்றிபெற வைத்தால், அப்பா ஆத்மா சாந்தியடையும்' – நடிகர் சண்முகபாண்டியன் பிரசாரம்!

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே‌.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பியும், நடிகருமான சண்முகபாண்டியன் விருதுநகர் தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை நகர் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அதன்படி அருப்புக்கோட்டை பாவடிதோப்பு, காந்தி மைதானம், வேலாயுதபுரம், சிவன்கோவில், சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், நெசவாளர் காலனி, ராமசாமிபுரம், எம்.எஸ்.கார்னர், வெள்ளக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சண்முக பாண்டியனுக்கு கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு … Read more

விருதுநகர்: 'எந்த நல்லதும் செய்யல, ஓட்டு கேட்க வேட்பாளரும் வரல' – அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய மக்கள்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக அருப்புக்கோட்டை செம்பட்டியில் உள்ள என்.ஜி.ஓ காலனி பகுதி மக்களிடம் வாக்குகேட்டு ஆதரவு திரட்டினார். அப்போது கூடியிருந்த கூட்டத்தினர், அமைச்சர் … Read more

தேர்தல் 2024: `தமிழ்நாடு டு இந்தியா… களம் யாருக்குச் சாதகம்?' – விவரிக்கும் ரவீந்திரன் துரைசாமி 

தேர்தல் களம் கோடை வெயிலுக்கும் மேல் அனல் கக்கும் நிலையில், கள நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ரவீந்திரன் துரைசாமியுடன் உரையாடிய நறுக் சுறுக் பேட்டி இதோ..! தமிழகத்தில் தேர்தல் களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?   “சந்தேகமே இல்லாமல் திமுக கூட்டணிக்குத்தான். திமுக கூட்டணியால் 35 சீட்களுக்கும் மேல் பெற முடியும் என உறுதியாக கூற முடியும். காரணம் 35 இடங்களுக்கும் மேல் திமுக-வுக்கு போட்டியே இல்லை என்ற நிலைதான் உள்ளது. திமுக-வின் அதிகார பலம், கொங்கு மண்டலத்தில் மநீம தலைவர் … Read more