இதை உணர்ந்துவிட்டால்… உங்கள் கவலைக்கு விடுதலை கொடுத்துவிடுவீர்கள்! | மகிழ்ச்சி – 5

மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு, கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை. என்னவெல்லாம் பிரச்னைகள் என்றுதான் சஞ்சலப்படுகிறான். அதுமட்டுமின்றி, முடிந்துவிட்ட பிரச்னைக்காக அதிகம் கவலைப்படுவது மனிதன் மட்டும்தான். அப்படித்தான் ஒரு வங்கி மேலாளர் ஞானகுருவை சந்திக்க வந்தார். ஞானகுருவிடம் ஆசி வாங்கிய பிறகு, ‘என் தாயார் மரணத்தை இன்னமும் என்னால் தாங்கவே முடியவில்லை, தினமும் அந்த துன்பத்துடனே வாழ்கிறேன். நான் எப்படி அதில் இருந்து வெளியே வருவது…’ என்று கேட்டார். கவலைக்கு விடுதலை … Read more

Tamil News Today Live: Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு – மொத்தம் 18 ரயில்கள் ரத்து!

தேவர் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோயில் ஆகிய ஒன்றியங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேவர் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள அவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இன்று மரியாதை செலுத்த உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தேவர் குருபூஜை விழாவுக்கு பசும்பொன் வருகை தரும் … Read more

Tamil News Live Today: Andhra Train Accident: ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பயணிகள் ரயில்கள்! – 6 பேர் பலி, பலர் காயம்!

Andhra Train Accident: ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பயணிகள் ரயில்கள்! – 6 பேர் பலி, பலர் காயம்! ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், ரயில்வே காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர். ஒரு ரயில் … Read more

Kerala Bomb Blast: `குண்டு வெடிப்பில் ஈடுபட்டது, நான்தான்!' – போலீஸில் சரணடைந்த நபர்; முழு விவரம்!

கேரள மாநிலம், கொச்சின், களமசேரியில் சாம்றா இன்டர்நேஷனல் கிறிஸ்தவ கன்வென்சன் சென்டரில் யாக்கோபா சாட்சிகள் சபைகளின் மாநாடு கடந்த 27-ம் தேதி தொடங்கி நடந்த நிலையில், நிறைவுவிழா இன்று நடந்தது. சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். காலை சுமார் 9:40 மணியளவில் அடுத்தடுத்து மூன்று பகுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளன. வெடித்த பகுதிகளில் தீ மளமளவென எரிந்தது. அதில் ஒரு பெண் மரணமடைந்துள்ளார். 36 பேர் காயம் அடைந்துள்ளனர். டிஃபன் பாக்ஸில் வைத்திருந்த … Read more

INDvsENG: `ஆட்டநாயகன் ரோஹித்தான்; ஆனால், வெல்ல வைத்தது பௌலர்கள்தான்!' – முதலிடத்தில் இந்தியா!

இங்கிலாந்து வீரர்கள் திகைத்து நிற்கிறார்கள். பந்துகள் அவர்களின் கண் முன்னால் அவர்களின் ஆயுதமான பேட்டைக் கடந்துதான் செல்கின்றன. ஆனால், எதுவுமே அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இல்லை. காற்றை கிழ்த்துக் கொண்டு சென்ற பந்துகள் ஸ்டம்புகளை சிதறடிக்க செய்வதறியாது பித்து பிடித்ததை போல நிற்கின்றனர் இங்கிலாந்து வீரர்கள். அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு சென்றது இந்திய பௌலர்கள். ஷமி பெரும்பாலும் எல்லா அணிகளுமே இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்தை அடித்துத் துவைத்திருக்கின்றன. இது இந்தியாவின் முறை இந்தியாவும் அவர்களை தங்கள் பங்குக்கு … Read more

"அதிகார பலத்தால் தப்பிக்க முடியாது; திமுக ஊழல் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் தண்டனை உறுதி" – அண்ணாமலை

தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர்மீதும், அவரின் மனைவி மீதும் 2002-ல் அ.தி.மு.க ஆட்சியில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்த வழக்கு, கடந்த ஆண்டு வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, கடந்த ஜூன் மாதம் போதிய ஆதாரங்கள் இல்லையென … Read more

நாங்குநேரி சம்பவம்: குணமடைந்து வீடு திரும்பிய மாணவர்கள்; நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி!

கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரையும் அவரின் சகோதரியும் சக மாணவர்களாலேயே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்றுதான் வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் இருவரின் மொத்த படிப்பு செலவையும் ஏற்றிருக்கும் அரசு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யும் ஆணையையும் வழங்கியிருக்கிறது. மாணவர் … Read more

Bigg Boss Wild Card: `இறுதிப் பட்டியல் இதோ' அந்த 5 நபர்கள் இவர்கள்தான்!

‘பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ல் வைல்டு கார்டு என்ட்ரியில் ஒன்றல்ல இரண்டல்ல, ஐந்து போட்டியாளர்கள் செல்ல இருக்கிறார்கள்’ என கமல் அறிவித்ததிலிருந்தே யார் அந்த ஐந்து பேர் என்ற எதிர்பார்ப்புகள் பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. இதுகுறித்த செய்தியை விகடன் தளத்திலும் வெளியிட்டிருந்தோம். இதில் சீரியல் நடிகை அர்ச்சனா, பாடகர் கானா பாலா, ஆர்.ஜே பிராவோ என மூன்று போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவர்களில் சீரியல் நடிகை அர்ச்சனா முதல் நாளே செல்வது போலத்தான் முதலில் திட்டமிட்டு புரொஃபைல் … Read more

திருச்சி: அவள் விகடனின் `சமையல் சூப்பர் ஸ்டார்' போட்டி… ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்!

அவள் விகடன் நடத்தும் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி, தமிழகம் முழுக்க 11 இடங்களில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்று மதுரையில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது போட்டி திருச்சியில் இன்று (29/10/2023) நடந்து வருகிறது. ஏராளமான பெண்களுடன் ஆண்களும், குழந்தைகளும் உற்சாகமாகக் கலந்துகொண்டு வருகிறார்கள். அவள் விகடன் நடத்தும் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி மதுரை மணமணக்க.. அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி – லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்! இரண்டு … Read more