இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பேருவளை கரையோர பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இந்த விடயத்தை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிபடுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் 3.7 மெக்னிடியூட் அளவில் சிறிய நிலநடுக்கமாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சுனாமி அச்சுறுத்தல் பேருவளையில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்கல் ஒரு மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் … Read more

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நாளை…..

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நாளை (31) நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. எனினும் முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையில் நாளை (31) காலை 6.30 மணிக்கு மூன்றாவது ஒருநாள் போட்டி … Read more

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உள்ளூர் கல்வித் துறைக்கான STEAM கல்வியைத் தொடங்குவதற்கான உத்தியோகபூர்வ வேலைத்திட்டம் நாளை(31.03.2023) மேல் மாகாணத்தில் கொழும்பு, நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை கூறியுள்ளார். புதிய வேலைத்திட்டம் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,STEAM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம்) கல்வியைத் தொடங்குவதற்கான வேலைத்திட்டம் நாளை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.30 வரை தொடரும். முக்கிய நிகழ்வை ஒட்டி,எஞ்சிய … Read more

பிலிப் குணவர்தனவின் 51 ஆவது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

தலைசிறந்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பிலிப் குணவர்தனவின் 51ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று (29) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பிலிப் குணவர்தன நினைவுதின நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை, பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்று, விழா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். நினைவுதின நிகழ்வில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வரலாற்றாசிரியர், கலைத்துறை … Read more

'பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் மேம்பாடு' திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

‘பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி’ திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் (துஐஊயு) சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் நேற்று (29) சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கைத் தலைவர் டெட்சுயா யமடா ஆகியோருக்கு இடையில் அமைச்சில கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் … Read more

பஸ் கட்டணங்கள் 12.9ம% ஆல் குறைப்பு

எரிபொருள் விலை குறைந்துள்ளதன் பயனை 24 மணித்தியாலங்களுக்குள் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் 430 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பஸ் கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பொருட்களின் விலை … Read more

2048 ஆம் ஆண்டாகும் போது நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்ப அறிவை நம் நாட்டு மாணவர் சந்ததி பெற வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர், அதே பழைய முறையைப் பின்பற்றுவதா அல்லது புதிய முறையின் ஊடாக முன்னேறி வரும் உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதா என்பதை தீர்மானிக்க … Read more

அர்ஜூன ரணதுங்கவை பதவி விலகுமாறு கோரிக்கை

தேசிய விளையாட்டுச் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்காத உறுப்பினர்கள் நேற்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக நடைபெறவிருந்த சபையின் கூட்டத்திற்கு, அதன் உறுப்பினர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சபையின் உறுப்பினர்கள் அர்ஜுனவின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  Source link

ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் – கடற்றொழில் அமைச்சர்

ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்கள் வெற்றியடைந்து வருவதாகவும் தெரிவித்தார். சகலருக்கும் சமமான கல்வி எனும் சிந்தனைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு முழுவதிலும் மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று (29) முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் … Read more

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது. கிரிப்டோகரன்சியின் பயன்பாடு சில தரப்பினரால் இலாபகரமான முதலீடாக விளம்பரப்படுத்தப்படுகிறது, மேலும் இதுபோன்ற முதலீடுகளால் மக்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நிதி மோசடிகள் விரைவான வளர்ச்சியைக் காட்டுவதால், தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், Crypto நாணயம் தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவொரு நபருக்கும் … Read more