உலகளவில் கொரோனா: குணமடைந்தோரின் எண்ணிக்கை

உலகளவில்  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 60 கோடியே 66 இலட்சத்து 55 ஆயிரத்து 830 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 இலட்சத்து 61 ஆயிரத்து 786 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 68 இலட்சத்து … Read more

மருதானை புகையிரத நூதனசாலை புகையிரத நூதனக் கிராமமாக மாற்றம்

இலங்கையின் முதலாவது புகையிரத நூதனக் கிராமமாக புகையிரத உபகலாசாரத்தின் புராதன அனுபவத்தை வழங்குவதற்காக, மருதானை டெக்னிகல் சந்தியில் அமைந்துள்ள புகையிரத நூதனசாலை மாற்றப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜே. ஏ. டி. ஆர். புஷ்பகுமார  (09) தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: கொழும்பு போன்ற சன நெரிசலான பிரதேசமொன்றில் நூதனசாலை பிரதான நுழைவாயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு வாயு மின்குமிழ், புகையிரத கார், புகையிரத நடைமேடை, நீராவி என்ஜின்கள், புகையிரத அதிகாரிகள் அணிந்திருக்கும் சீருடைகளில் நிலக்கரி படுதல்; … Read more

வெனிசுலா நிலச்சரிவில் 22 பேர் உயிரிழப்பு

வெனிசுலா நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர். வெனிசுலா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சான்டோஸ் மிச்செலினா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் லாஸ் தெஜேரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரகுவா என்ற மத்திய மாகாணத்தின் வடக்கே கனமழையால் நேற்று (09) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்குண்டுள்ளனர்.   அவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் காணாமல் … Read more

ஆசிய கிண்ண அரையிறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணி

ஆசிய கிண்ண அரையிறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணி மகளிர் ஆசிய கிண்ண ரி 20 தொடரில் நேற்று (10) இலங்கை அணி பெற்ற வெற்றியுடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் மழைக்கு மத்தியிலும் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் சில்ஹெட்டில் நேற்று (10) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை … Read more

பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள உலக பொருளாதாரம் – இலங்கைக்கும் கடும் பாதிக்கப்படும்

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலை ஏற்படும் அபாயம் உள்ளதென உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா – வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு மாநாட்டில் வைத்தே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அபாயத்தால் உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதை அங்கு அவர்கள் காட்டியுள்ளனர். பொருளாதார மந்தம் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்படும் மந்தநிலை மற்றும் … Read more

நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான வழிகாட்டல் நூல்

நீண்டகாலமாக பல்வேறு நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான வழிகாட்டல் நூல் இன்று (11)  காலை கொழும்பில் வெளியிடப்படவுள்ளது. நோய் நிவாரணம், சிகிச்சை, புனர்வாழ்வளிப்பு, நோயாளர்களின் மனநலம் மற்றும் ஆன்மீக மேம்பாடு என்பனவற்றுக்கான வழிகாட்டல்களை உள்ளடக்கியதாக, இது அமைந்துள்ளது என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் திருமதி லக்ஷ்மி சேமதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் பொது மக்கள் சுகாதார சேவை பிரிவும் இலங்கை நிவாரண சேவை ஆய்வு நிலையமும் இணைந்து நூலை தொகுத்துள்ளன. உலக … Read more

ஒரே நேரத்தில் சேவையில் இருந்து வெளியேறிய 249 விசேட வைத்திய நிபுணர்கள்

இலங்கையில் விசேட வைத்தியர்களின் தேவையில் 45 சதவீதம பற்றாக்குறை நிலவுகின்ற போதில் 249 விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே நாளில் ஓய்வு பெறவுள்ளனர். இதன் காரணமாக வைத்தியசாலை கட்டமைப்பு கடும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வைத்தியர்கள் ஓய்வு அதிக எண்ணிக்கையிலான சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு பெறுவதால், மருத்துவப் படிப்புக்குப் பின்னரான பயிற்சியும் பாதிக்கப்படலாம் என்று மருத்துவப் பயிற்சி நிறுவன இயக்குநர் எழுத்து மூலம் சுகாதாரச் செயலாளருக்கு … Read more

இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டீசல் மற்றும் பெற்றோல் ஆகியன இவ்வாறு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 40000 மெற்றிக் தொன் எடையுடைய டீசல் நேற்றைய தினம் இறக்கப்பட்டதாகவும் இதற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கியூஆர் குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம் மேலும் இரண்டு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கியூஆர் குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதனால் கையிருப்பில் உள்ள … Read more

200க்கும் மேற்பட்டோர் தலைமறைவு

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் 404 சந்தேக நபர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட போதிலும், இதுவரையும் அவர்களில் 200க்கும் குறைவானவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு குழுவினர் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் … Read more