யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாலையில் குழப்ப நிலை

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நேரங்களில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் இடம்பெறுவதினால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த வாரம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டேன் அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாலை வேளைகளில் மது போதையில் கூடுபவர்கள் கறுப்பு … Read more

35 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோளுடனான கப்பல்

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள்  மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேவேளை, 35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையை வந்தடையுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்ததுடன் ,இதனை இறக்கும் பணிகள் இன்று இடம்பெறும் என்றும் தெரிவித்தார். கப்பலுக்கான கொடுப்பனவு நேற்று முன்தினம் மத்திய வங்கி ஊடாக செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

சர்ச்சைக்குரிய சீனக்கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் இன்னும் 650 கடல் மைல் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்று பிற்பகல் நிலவரப்படி கப்பல் 650 கடல் மைல் தொலைவில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு தினங்களில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நேற்று பிற்பகல் நிலவரப்படி, கப்பல் சுமார் 650 கடல் மைல் தொலைவில் இருந்ததாகவும், கப்பல் தொடர்பில் வெளியுறவு அமைச்சு மற்றும் துறைமுக அதிகாரசபை … Read more

போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கை

கட்டணம் அறவிட்டு, பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறு எரி சக்தி அமைச்சு, போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது..

சரத் பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தடன், நாட்டில் சமாதானம் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகை போன்ற நாட்டின் அரச சொத்துகள் கையகப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் … Read more

அனைத்துக் கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு ஆட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்! – ஜனாதிபதி

ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC), பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட குழுவினர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் … Read more

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள்

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட சகல வாகனங்களுக்கும் போதியளவிலான எரிபொருள் வழங்கப்படும் என்று தெரிவித்த பணிப்பாளர் நாயகம் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இணைதளத்தில் இது தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி இறுதி ரந்தோலி

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா தற்போது வீதி உலா இடம்பெறுகிறது. இன்று மாலை 6.35க்கு பெரஹரா வீதி உலா ஆரம்பமானது. இதேவேளை, கதிர்காம தேவாலய எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவும் இன்றிரவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க கிரிக்கட் சபை: ரி-20 லீக் சுற்றுத்தொடரில் இலங்கை அணி வீரர்கள்

இலங்கை அணி வீரரான துஷ்மந்த சமீரவின் ஒப்பந்தத்தின் பெறுமதி இரண்டு லட்சம் அமெரிக்க டொலர்களாகும். சாமிக்க கருணாரட்ன ஒரு லட்சத்து 50 ஆயிரம் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். மஹிஸ் தீக்ஷன ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றார். அகில தனஞ்ஜய, நிரோஷன் திக்வெல்ல, சீக்குகே பிரசன்ன, நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ போன்ற வீரர்களும் இந்த சுற்றுத்தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ,தென்னாபிரிக்க கிரிக்கட் சபை ஒழுங்கு செய்யும் ரி-20 லீக் சுற்றுத்தொடரில் பங்கேற்கும் … Read more