மீண்டும் வருகிறார் சமந்தா: ரசிகர்கள் மகிழ்ச்சி
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தான் நடித்துக் கொண்டிருந்த சாகுந்தலம், குஷி படங்களை முடித்து விட்டு சிகிச்சை செய்து கொள்ள வசதியாக 6 மாதம் பிரேக் அறிவித்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை செய்து கொண்ட சமந்தா தற்போது பூரண நலம் பெற்றிருக்கிறார். என்றாலும் பூக்கள் உள்ளிட்ட நறுமணங்களில் அலர்ஜி இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். என்றாலும் அவற்றை கூடுமானவரையில் தவிர்த்து படப்பிடிப்பு ஏற்பாடுகளை செய்யும் வகையில் தனது பணி திட்டத்தை வகுத்துள்ளார். … Read more