Vijay: "விஜய் அரசியலுக்கு வரட்டும் ஆனால்… !" – திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி

நடிப்பிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய். முழுநேர அரசியல்வாதியாகக் களமிறங்கப்போவதால், அவரின் இந்த அறிவிப்பில் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டிருப்பது அவரின் திரைப்பட ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். கொரோனா காலங்களில்கூட தியேட்டருக்கு மக்கள் வருவதற்கே அச்சப்பட்டுக்கொண்டிருந்தபோது, குடும்பம் குடும்பமாக வரவைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு நிம்மதி பெருமூச்சைக் கொடுத்தது ‘மாஸ்டர்’ படம். இந்தநிலையில், விஜய்யின் இப்படியொரு அறிவிப்பு குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய … Read more

‛அன்பே ஆருயிரே' நிலாவுக்கு மார்ச் மாதம் திருமணம்

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த அன்பே ஆருயிரே என்ற படத்தில் அறிமுகமானவர் நிலா எனும் மீரா சோப்ரா. நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், அதன்பிறகு ஜாம்பவான், மருதமலை, காளை, இசை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வந்த நிலாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் வெப் சீரியல்களில் நடித்து வந்தவர் தற்போது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். தனது திருமணம் மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடைபெறுவதாக … Read more

Heeramandi web series: சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீராமண்டி வெப் சீரிஸ்.. கலர்புல் பர்ஸ்ட் லுக் வீடியோ!

சென்னை: பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குநராக ரசிகர்களை கவர்ந்து வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி. பாலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இவருடைய படங்களுக்கு மேக்கிங்கிற்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். கடந்த 2022ம் ஆண்டில் ஆலியா பட்டின் கங்குபாய் காதிவாடி படத்தை இயக்கி ஏராளமான ரசிகர்களின் பாராட்டுக்களையும் சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றிருந்தார் சஞ்சய் லீலா பன்சாலி. இந்தப்

வேலை போயிடும் மிரட்டும் மனோகரி! நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

Ninaithen Vandhai Serial Update: ரவுடிகளிடம் சிக்கிய சுடர்.. காக்க வந்த எழிலுக்கு விழுந்த அடி – நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Dhanya Balakrishna: "தொழில் மேல் சத்தியம்…" – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா

ரஜினி கெளரவ கதாபத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் நடிகை தன்யா நடித்துள்ளார். அவரது பெயரிலான பதிவு ஒன்றில் “தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். மின்சாரத்திற்காகப் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால். இதையும் தருகிறோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ‘தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன்’ என்று தன்யா கூறியதகாவும் சமூகவலைதளங்கில் பேசுபொருளாகி ‘HateDhanya’ எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கானது. தன்யா பாலகிருஷ்ணா 12 வருடங்களுக்கு … Read more

ஜீவாவின் குழப்பத்தை போக்கிய மம்முட்டியின் விளக்கம்

நடிகர் ஜீவா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் கூட நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் உருவாகி உள்ள யாத்ரா 2 என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஏற்கனவே யாத்ரா என்கிற திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது . ராஜசேகர் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். தற்போது அந்த படத்தில் இரண்டாம் பாகமாக யாத்ரா 2 உருவாகியுள்ளது. இந்த படத்திலும் … Read more

Actor Vijay: விஜய் அரசியலுக்கு அடித்தளம்.. சினிமாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள்!

சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று அவரது ரசிகர்கள் கூறிவந்தனர். இதற்காக, இந்த அறிவிப்பிற்காக காத்திருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் பல நலத்திட்டங்களை அவரை முன்னெடுத்துவந்த நிலையில், அவரது அரசியல் நுழைவு அப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இன்றைய தினம் முறையான

பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் 32 வயதில் மரணம்!

Poonam Pandey Died: பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இன்று காலை கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்துள்ளார். அவருக்கு வயது 32 மட்டுமே.    

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்: `டிக்கிலோனா' பட காம்போ; சந்தானம் & கோ காமெடி வொர்க் ஆனதா?

கடவுள் நம்பிக்கை இல்லாத நாயகன் ராமசாமி (சந்தானம்) தனக்குச் சொந்தமான இடத்தில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து வடக்குப்பட்டி ஊர் மக்களை ஏமாற்றி கோயில் ஒன்றைக் கட்டி கல்லா கட்டுகிறார். புதிதாக வரும் தாசில்தார் (‘ஜெய் பீம்’ தமிழ்) கோயிலை வைத்து தானும் பணம் பார்க்க நினைக்கிறார். அவருடன் ஏற்படும் மோதலால் கோயிலே மூடப்படும் நிலை ஏற்படுகிறது. ஊர்மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் மீண்டும் கோயிலைத் திறக்கமுடியும் என்ற சூழலில் அதற்காக நாயகன் என்னவெல்லாம் செய்தான் என்பது ‘வடக்குப்பட்டி … Read more

ஹாலிவுட் செல்லும் சோபிதா துலிபாலா

பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா. பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 'தி நைட் மானேஜர்', 'மேட் இன் ஹெவன்' வெப் தொடர்கள் மூலம் பரபரப்பு கிளப்பியவர். தற்போது இந்தியாவில், இந்திய கலைஞர்களை கொண்டு தயாராகும் ஹாலிவுட் படமான 'மங்கி மேன்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா வரிசையில் ஹாலிவுட்டுக்கு செல்கிறார். ஆஸ்கர் விருதுகளை குவித்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான … Read more