Thalapathy 67: என்ன நண்பா, நண்பி ஹாப்பியா.?: இணையத்தை தெறிக்கவிடும் 'தளபதி 67' படக்குழு.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படத்தின் அப்டேட் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. சில மாதங்களாக இந்தப்படத்தின் அப்டேட்க்காக தவமிருந்த ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக படத்தில் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அப்டேட்டை வாரி வழங்கியுள்ளனர் ‘தளபதி 67’ படக்குழுவினர். இதனால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர். ‘தளபதி 67’ படத்தில் நடிப்பது குறித்து பிரபல நடிகர் சஞ்சய் தத் கூறும்போது, விஜய் 67 படத்தின் ஒன்லைனைக் கேட்டபோதே நான் படத்தின் ஒரு பகுதியாக … Read more

Thalapathy 67: உலகநாயகனுக்கு நோ சொன்ன தளபதி..காரணம் இதுதான்..!

விஜய் தற்போது வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்து வருகின்றார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்கள் இணையும் தளபதி 67 படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அதற்கு மிகமுக்கிய காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் தான். உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து அவர் விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. Thalapathy 67: தளபதி 67 படத்தின் … Read more

அட்லீ – பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, ‛ராஜா ராணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து ‛‛தெறி, மெர்சல், பிகில்'' என மூன்று படங்களை கொடுத்த இவர் தமிழில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ‛ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். அட்லீக்கும், ‛சிங்கம்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்த பிரியாவிற்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2014ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்கு பின் … Read more

தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் 'வாரிசு'

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த வாரிசு' படம் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரில் வெளியானது. தமிழில் வெளியான ஜனவரி 11 அன்று வெளியாகாமல் சில நாட்கள் கழித்து ஜனவரி 14ம் தேதியன்று வெளியானது. அதுவே இந்தப் படத்தின் தெலுங்கு வசூலுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள். நேரடி தெலுங்குப் படங்களான 'வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி' படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் தெலுங்கு வெளியீட்டைத் தள்ளி வைத்தார் தயாரிப்பாளர் தில் ராஜு. … Read more

'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள 'விஜய் 67' படத்தின் படக்குழுவினர் இன்று(ஜன., 31) காலை சென்னையிலிருந்து காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகருக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அந்த விமானத்தில் யார் யார் பயணித்துள்ளார்கள் என்பது குறித்து பயணிகள் விவரத்தை தேடி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளார்கள். அந்தப் பட்டியலில் த்ரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த் நடிப்பது உறுதியாகி உள்ளது. காஷ்மீரில் ஒரு … Read more

விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் – அடுத்தடுத்து வந்த அப்டேட்கள்

வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இது இவரின் 67வது படமாக உருவாகிறது. கடந்த ஜன., 2 முதல் படப்பிடிப்பு துவங்கியது. சென்னையில் ஒருக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நாளை(பிப்.,1) முதல் காஷ்மீரில் படப்பிடிப்பு துவங்குகிறது. இதற்காக விஜய், லோகேஷ், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். நேற்று முதல் இந்த படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளராக அனிருத், ஸ்டன்ட் … Read more

ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடக்கிறது. இதற்காக அங்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினி. அப்போது ரசிகர் ஒருவர் அவர் அருகில் சென்று ‛லவ் யூ தலைவா' என்றார். இதற்கு … Read more

திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல்

விக்ரம் படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தில் அவருடன் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது திருப்பதிக்கு அருகே உள்ள … Read more

அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு

கார்த்திகேயன் என்பவர் இயக்கத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி ஐயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹாரர் படம் கருங்காப்பியம். யோகி பாபு, கலையரசன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பே எதிர்காலத்தில் நடக்கப் போவதை கணித்து எழுதப்பட்டுள்ள கருங்காப்பியம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஹாரர் திரில்லர் படமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க அமானுஷ்ய கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த கருங்காப்பியம் படத்தின் டிரைலர் தற்போது … Read more

குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம்

முன்னணி நடிகையான குஷ்பூ பாரதிய ஜனதா கட்சியிலும் இடம் பெற்று இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தனது காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்காகத்தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்த அவர், இதற்காக எனது பயணத்தை நிறுத்திக்கொள்ள போவதில்லை என்றும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வெளியூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார் குஷ்பு. அப்போது தான் அமர்ந்து செல்வதற்கு சக்கர நாற்காலி கிடைக்காமல் அவதிப்பட்டதாக வருத்தத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதோடு அந்த … Read more