பிக்பாஸ் போட்ட பலே பிளான்! ஜிபி முத்துவுக்கு பதிலாக உள்ளே வரப்போகும் மாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் போட்டியில் இருந்து ஜிபி முத்து வெளியேறி இருக்கிறார். கடந்த ஒருவாரமாகவே அப்செட்டாகி இருந்த ஜிபி முத்து, வீட்டில் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவரால் முழுமையாக எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. பிக்பாஸ் அழைத்து பேசியபோது, குடும்பத்தின் மீது ஞாபகம் இருப்பதாக கூறிய ஜிபி முத்து, மகனை பிரிந்து இருக்கவே முடியவில்லை என கண்ணீர் விட்டார். பிக்பாஸ் ஆறுதல் கூறியபோதும், அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. வார இறுதி நாளான நேற்று … Read more

குடித்தவர்களுடன் பயணித்தாலும் அபராதம்… போக்குவரத்து விதிகளில் பல மாற்றங்கள் – புது ரூல்ஸ்

மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என பாட்டிலில் எழுதி விற்கப்பட்டாலும் பலரும் அதனைத் தேடியே போகின்றனர். குடிப்பது முன்னொரு காலதில் பொழுதுபோக்காக இருந்த சூழல் மாறி தற்போது குடிப்பதே பொழுது முழுவதும் வேலை என்ற சூழலை சிலர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். டாஸ்மாக் திறந்ததும் முதல் ஆளாக சென்று டாஸ்மாக் மூடியதும் கடைசி ஆளாக வருபவர்கள் தமிழகத்தில் பலர் இருக்கின்றனர். அதேபோல் மது குடித்து அதனால் உயிரிழப்பவர்கள் ஒருபக்கம் என்றால் மதுவை குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி அதன் … Read more

234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன மேசை கணினிகளையும், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் வழங்கினார். நிகழ்ச்சியில் முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலினிடம், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தை தொடங்கிடும் வகையில் மேசை கணினி, பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை (User ID and … Read more

தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு : காற்றாடும் தியேட்டர்கள்

தமிழகத்தில் சினிமா தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கும், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களுக்கும் இதுவரையில் கட்டணங்களில் வித்தியாசம் இருந்தது. ஆனால், தற்போது அனைத்து விதமான தியேட்டர்களிலும் அதிகபட்ச கட்டணமாக 190 ரூபாய் ஆக உயர்த்தி இருக்கிறார்கள். தமிழக அரசு தரப்பிலிருந்து சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு குறித்து எந்த விதமான உத்தரவும் வராத நிலையில் தியேட்டர்களில் இப்படி கட்டணத்தை உயர்த்தி இருப்பது சினிமா ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,36,517 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,510- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,82,064- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது … Read more

வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!!

வங்கக்கடலில் புதிதாக புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தமான் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 22ம் தேதி, காற்றழுத்தத்தாழ்வு பகுதி … Read more

திவ்யா-ஆர்னவ் பிரச்சனை எதிரொலி… ஆர்னவுக்கு செக் வைத்த சீரியல்!

தற்போது ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருப்பது சின்னத்திரை நடிகர்களான திவ்யா-ஆர்ணவ் பிரச்சனை தான், சன் டிவியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்கள் தான் இந்த திவ்யா-ஆர்ணவ்.  இதில் ஏற்பட்ட பழக்கம் மூலம் காதலர்களாக மாறிய இவர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர், ஏற்கனவே திவ்யா வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  திவ்யாவிற்கு முதல் கணவர் மூலம் ஒரு குழந்தை உள்ளது, இது அனைத்தையும் தெரிந்துகொண்டு தான் ஆர்ணவ், திவ்யாவை … Read more

ஜெ. மரணம் | மருத்துவத் துறையிடம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று, தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர் … Read more

ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம்..! – நாட்டை உலுக்கிய மரண அறிக்கை!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என, ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அப்போதைய தலைமை … Read more

திருப்பத்தூர் || அமேசான் குடோனில் லட்ச கணக்கில் பொருட்கள் கொள்ளை.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் டவுன் புது கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் குடோன் உள்ளது.  இந்த குடோனில், அந்த நிறுவனத்தின் மூலமாக ஆர்டர் செய்யும் அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகிலேயே ரெயில்வே தண்டவாளம் அமைத்துள்ளது.  அந்த பகுதியிலிருந்து நேற்று இரவு மர்ம நபர்கள் குடோனின் சுவற்றை கடப்பாரையால் துளையிட்டு கடைக்குள் புகுந்து அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து, இன்று காலை குடோனுக்கு வந்த ஊழியர்கள் … Read more