”ஒருவேளை இன்ஜினியரா இருப்பாரோ” – தவறவிட்ட airpod-ஐ சாமார்த்தியமாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்!

இந்தியாவின் டெக் நகரமாக இருக்கும் பெங்களூருவில் அவ்வப்போது வித்தியாசமான, ஆச்சர்யமளிக்கக் கூடிய செயல்கள் நடைபெறுவதும் அது சமூக வலைதளங்களில் PeekBengaluru என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பகிரப்படுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், ஆட்டோவில் சென்ற ஒரு பெண்ணின் airpod அரை மணிநேரத்திற்குள் அவரிடமே ஒப்படைக்கப்பட்ட சம்பவம் குறித்த ட்வீட்தான் தற்போது நெட்டிசன்களின் கமென்ட்ஸ்களுக்கு தீனி போட்டிருக்கிறது என்றே கூறலாம். Lost my AirPods while traveling in an auto. Half an hour later this … Read more

மக்களே உஷாரா இருங்க.. நூதன மோசடி அதிகரிப்பு: பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் அபேஸ்..!

சேலத்தில் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாபாரதி (45). இவர், கடந்த 14-ம் தேதி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “நான், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்த 13-ம் தேதி என்னுடைய செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தி … Read more

இந்தியாவுக்குள் தான் தமிழ்நாடு இருக்கிறது: பிரதமருக்கு நினைவூட்டிய அமைச்சர்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 11,12 தேதிகளில் தொடார்ந்து பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சீர்காழியில் வரலாறு காணாத வகையில் சுமார் 112 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலே அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன, வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து … Read more

இந்த 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. சென்னையிலும் மழை விட்டுவிட்டு பெய்தது. இதற்கிடையே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் … Read more

தேனி: மது குடிப்பதை தாய் கண்டித்ததால் மகன் எடுத்த விபரீத முடிவு.!

தேனி மாவட்டத்தில் மது குடிப்பதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சூர்யா(25). இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூர்யா, வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் … Read more

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!! தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!!

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வகையில் ஒவ்வொன்று மீதும் தனி ஈர்ப்பு இருக்கும். அது போல பெண்கள் என்றாலே நினைவுக்கு வருவது ஆபரண தங்க நகைகள் தான். அதுவும் குறிப்பாக வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சுப காரியங்களுக்கும் பெண்கள் ஆசையாக தங்க நகைகளை அணிந்து கொள்வது என்பது நமது தமிழ்நாட்டு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே … Read more

அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் – ஈரான் அதிகாரிகள் குற்றச்சாட்டு

ஈரான்: அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தனர் என்று ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானிய மனித உரிமைகளுக்கான உயர் சபையின் செயலாளரும், சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய நீதித்துறையின் பிரதித் தலைவருமான காசிம் க்ஹரிபாடி செய்தியாளரகளிடம் பேசுகையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்று குற்றம் சாட்டினார். ஈரானிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாட்டில் இதுவரை 7,560,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், … Read more

பொங்கல் தொகுப்பில் தரம் குறைந்த பொருட்களை வழங்கிய நிறுவனத்துக்கு உள்ஒப்பந்தம்!

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திற்கே, ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு சப்ளை செய்யும் உள் ஒப்பந்தம் வழங்கிய மத்திய அரசு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக 14 ஆயிரத்து 614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசின் தேசிய வேளான் விற்பனை கூட்டமைப்புடன், தமிழ்நாடு … Read more

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹேஸ்வரி; எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சி?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து அந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  அதன்பின்னர் கடந்த வாரம் அசல் கோளாறு அவர் செய்த சில கோளாறான செயல்களால் … Read more

”எலே ஏம்லே இப்படி பண்றீங்க”-ட்விட்டரின் புதிய ப்ளூ டிக் ஐடியாவிற்கு வில்லனான நெட்டிசன்ஸ்

பணம் வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய ஐடியாவை கொண்டு வந்து, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய எலான் மஸ்க்கிற்கே ஆட்டம் காட்டி வருகின்றனர், வில்லங்கம் பிடித்த நெட்டிசன்கள் பலர். பணம் வாங்கிக்கொண்டு எல்லோருக்கும் ப்ளூ டிக் என்கிற சேவையை? அறிமுகப்படுத்தினார் ட்விட்டரின் புதிய ஓனரான எலான் மஸ்க். தமிழ்நாட்டில் தலதளபதி ரசிகர்கள் பணம் கட்டி ப்ளூ டிக் வாங்கி ஜாலியோ ஜிம்கானா என கெத்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் இந்த … Read more