துணிவு தியேட்டர் முதல் ஓடிடிவரை… வெளியானது அப்டேட்

வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத்துடன் இணைந்திருக்கிறார் அஜித். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் மூலம் தன்னை வினோத் நிரூபித்தவர் என்பதால் வலிமை மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. வலிமை இப்படி வலுவற்று போனதற்கு பலரின் தலையீடுதான் காரணம் என தகவல் பரவியது. இந்தச் சூழலில் வினோத்துடன் மீண்டும் இணைந்திருக்கும் படம் க்ரைமை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. க்ரைம் சப்ஜெக்ட்டிலும் அதற்கான … Read more

உடன் சேர்க்கப்படும் மசாலாக்களால் தாம்பத்ய உணர்வு குறைவதாக புகார்-மே.வங்கத்தில் பிரியாணி கடைகள் மூடல்

எல்லோராலும் விரும்பக்கூடிய உணவாக இருப்பது பிரியாணிதான். இந்த பிரியாணி இப்போது பெரும்பாலான திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இடம் பிடித்துவிடுகிறது. சென்னையில் தெருவிற்கு குறைந்தது இரண்டு பிரியாணி கடைகளை பார்த்துவிட முடியும். அந்த அளவுக்கு மக்களிடம் பிரியாணி மோகம் இருக்கிறது. ஆனால் இந்த பிரியாணியில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பிரியாணியில் சேர்க்கப்படும் நறுமணப்பொருள்கள் மற்றும் மசாலாவால் ஆண்களின் செக்ஸ் உணர்வு குறைவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், இந்த புகார் தமிழ்நாட்டில் எழவில்லை. மேற்கு வங்கத்தில் … Read more

தீபாவளியன்று பட்டாசு வெடித்த விபத்தில் 500-க்கும் மேற்பட்டோர் காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்த விபத்துகளில் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் 179 பேர் உள்நோயாளிகளாகவும், 345 பேர் புற நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்றுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தீபாவளி பண்டிகையன்று நிகழ்ந்த பட்டாசு விபத்துகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: … Read more

வாட்ஸ்-அப்பிற்கு என்னாச்சு? சுத்தமா வரமாட்டிகுது… தவிக்கும் பயனாளர்கள்!

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக வாட்ஸ்-அப் விளங்குகிறது. இந்தியாவில் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பேஸ்புக்கை காட்டிலும் வாட்ஸ்-அப் தான் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நண்பகலில் இருந்து வாட்ஸ்-அப் சேவை கிடைக்கவில்லை என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். மெசேஜ் அனுப்பினால் யாருக்கும் போகவில்லை. யாரிடமிருந்து மெசேஜும் வரவில்லை. வாட்ஸ்-அப் கால் வேலை செய்யவில்லை என்று கூறி வருகின்றனர். குறிப்பாக அலுவலகப் பயன்பாட்டில் அத்தியாவசிய தகவல் தொடர்பு தளமாக … Read more

விதி மீறலா?… நாளை வெளியாகிறது அறிக்கை – முடிவுக்கு வருமா நயன் – விக்கி விவகாரம்?

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து  2 குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார். ஜூன் மாதம்தான் இருவருக்கும் திருமணமான சூழலில் … Read more

அலர்ட்! வலுவடைந்தது சித்ரங் புயல்!! எங்கெல்லாம் மழை?

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலை வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு சித்ரங் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து வழங்கியிருக்கிறது. சித்ரங் புயல் வலுவடைந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு … Read more

மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் மாசு அளவு!!

டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மிக மோசமான நிலையை தொட்டுள்ளது. டெல்லி பல்கலைகழக பகுதிகளில் காற்று தரக் குறியீடு 319 புள்ளியை தொட்டுள்ளது. அரசு காற்றுதர குறியீட்டை(AQI) 6 வகைகளாக தரம் பிரித்துள்ளது. அதன்படி, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 – 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 – 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல்நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 … Read more

வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு – காசிமேட்டில் குவிந்த மக்கள்

சென்னை காசிமேட்டில் மீன் வரத்து அதிகரித்து மீன்களின் விலை சரிந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை காசிமேட்டில் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் விற்பனை களைக்கட்டும். ஆனால், புரட்டாசி மாத தொடக்கமே ஞாயிற்றுக் கிழமையானதால், பெரும்பாலானோர் மீன் வாங்க வராத நிலையில், விலை சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், நாளை தீபாவளி பண்டிகை என்பதால் காசிமேட்டில் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆழ்கடல் மீன் பிடிப்புக்குச் சென்று கரை திரும்பிய 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் … Read more

உக்ரைன் போர் விவகாரம்: அமெரிக்க, ரஷிய மந்திரிகள் திடீர் பேச்சு

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி இன்றுடன் 8 மாதம் முடிகிறது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினும், ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்குவும் நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் போர் விவகாரம் குறித்து பேசினார்கள். இந்த தொலைபேசி உரையாடலின்போது, உக்ரைன் போர் நிலவரம் குறித்துத்தான் விவாதிக்கப்பட்டது என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். மே 13-ந் தேதிக்கு பின்னர் … Read more

கல்வி டிவிக்கு ஆபத்து – கமல்ஹாசன் கண்டனம்!!

மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்த அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பதற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலகாலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார பரவலே நாடு முன்னேற வழிவகுக்கும் சரியான வழி என்று மக்கள் நீதி மய்யம் மாநில சுயாட்சியை வலியுறுத்தி வருகிறது. மாநில சுயாட்சி மட்டுமின்றி அதற்கு அடுத்த நிலையாக கிராமங்களுக்கு உள்ளாட்சியில் … Read more