சென்னையில் 15 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்காமல் வெளியேறியது: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் 15 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறியது. வழக்கமாக மழைநீர் தேங்கும் ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெளியேறியது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Motivation : தன்னை உணருதல் எப்படி உசைன் போல்டிற்கு உதவியது?| NandaKumar IRS

கல்வி விகடன் யூடியூப் சேனலில் ‘Monday Motivation’ என்ற நிகழ்ச்சி மூலம் தன்னம்பிக்கை உரைகளை வழங்கிவருகிறார் திரு.நந்தகுமார் IRS. இந்த வாரத்திற்கான நிகழ்ச்சியில் தன்னை உணர்தலைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறார் அவர். ” நாம் நினைத்ததை போல் இருக்க வேண்டும் என்றால் நமக்குத் தன்னை உணருதல் மிகவும் அவசியம். ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்ற விவேகானந்தரும் இதையே தான் கூறுகிறார். இந்த பொன்மொழி தன்னையறிதலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.  உசைன் போல்ட் தான் உலகின் அதிவேக மனிதராக … Read more

உள்ளாட்சி தினம்: இன்று நகர சபை கூட்டங்களை துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தை போல இன்று நகர சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை நகர சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் 6ம் வார்டில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.116.50 குறைந்தது

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.116.50 குறைந்துள்ளது. வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.116.50 குறைந்து ரூ.1893-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

“தீபாவளி பரிசு யார் கொடுத்தது?” – கேள்வி எழுப்பிய திமுக நிர்வாகி; மன்னிப்பு கேட்ட தஞ்சை மேயர்!

தஞ்சாவூர் தி.மு.க-வில் மாநகரம் சார்பில் நடைப்பெற்ற கூட்டத்தில், `வார்டு செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்களுக்கு எதிராக செயல்படுவதை மாநகர செயலாளரான மேயர் நிறுத்தி கொள்ள வேண்டும்’ என நிர்வாகி ஒருவர் எச்சரிப்பது போல் கோஷ்டி பூசல் குறித்து மேடையில் வெளிப்படையாக பேசியது பரபரப்பை ஏற்ப்படுத்தியது. தி.மு.க பகுதி கழக செயலாளரான நீலகண்டன் தஞ்சாவூர் தி.மு.க-வில் மாநகர கழகம் சார்பில் மாநகர செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. மாநகர செயலாளரும், மேயருமான சண்.இராமநாதன் கூட்டத்திற்கான ஏற்பாட்டை செய்திருந்தார். இதில் … Read more

வடகிழக்கு பருவமழை நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,594,450 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,594,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 635,592,676 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 614,898,459 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,136 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீட்டுக்குள் நுழைந்த முதலை உ.பி., கிராமத்தில் பரபரப்பு| Dinamalar

எடாவா : உத்தர பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு வீட்டுக்குள் முதலை நுழைந்ததால் கிராமமே பரபரப்பானது. உத்தர பிரதேசத்தின் எடாவா அருகே உள்ள ஜைதியா கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஹர்னாம் சிங் என்பவர் வீட்டில் ஆடுகள் திடீரென கத்தின. அவரது மகள் எழுந்து விளக்கை போட்டு பார்த்த போது, ஒரு அறைக்குள் முதலை ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்தார். அந்த அறைக்குள் அவரது பாட்டி தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி … Read more

ஆசிரியர் பக்கம்

மின்சார வாகனங்கள் மீதான சந்தேகம் ஒரு சாராருக்கு நிறைய இருக்கிறது. மின்சார வாகனத்தை மட்டும் சார்ந்திருக்க முடியுமா என்பது அவர்களது கேள்வியாக இருக்கிறது. ஆனால், இன்னொரு சாரார் மின்சார வாகனங்களின் பக்கம் வேகமாக நகர்ந்து வருகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வாகன உற்பத்தியாளர்களும் சுறுசுறுப்பாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதே ஒரு மிகப் பெரிய தொழிலாக உருவெடுக்கும் என்று தொழில் ஆர்வலர்கள் பலரும் உணர்ந்திருக்கிறார்கள். … Read more

பிரான்சில் தாயாரும் இரு பிள்ளைகளும் நாய் உட்பட படுக்கையில்… தூக்கில் தொங்கிய தந்தை

தமது மகளை தொடர்புகொள்ள முடியாமல் போனதாக கூறி, அவர் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார். குறித்த தம்பதியானது விவாகரத்தின் விளிம்பில் இருந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் பிரான்சில் இரு பெண் பிள்ளைகள் மற்றும் அவர்களது தாயார் ஆகியோர் தங்கள் படுக்கையிலேயே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு பிரான்சில் உள்ள அவர்களது வீட்டில் வளர்ப்பு நாயும் இறந்த நிலையில் கிடந்தது, ஆனால் உடல்களில் எதுவும் வன்முறையின் அறிகுறிகள் … Read more