ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றம்: வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா. சபையில் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143  நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.

செல்லாத நோட்டு அறிவிப்பு விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்| Dinamalar

புதுடில்லி, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தொடர்பான வழக்கை விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. இதில், தங்களுடைய எல்லை எது என்பது தெரியும் என்றும் அமர்வு கூறியுள்ளது. கடந்த 2016 நவ., 8ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, … Read more

“அதிமுக-வுக்கு துரோகம் இழைத்தால்… அநாதையாக போவார்கள்" – சாபம் விட்ட சி.வி.சண்முகம்!

அ.தி.மு.க-வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்த விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைமையேற்று பேசிய விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம்,  “அதிமுக-வின் அதிகபட்ச பதவி, கட்சியின் தலைவர் பதவி. தமிழகத்தில் உச்சபட்ச பதவி, முதலமைச்சர் பதவி. இவை இரண்டையும் ஆண்டு அனுபவித்த ஒருவர்… இன்றைக்கு இந்த இயக்கத்தை கூண்டோடு அழிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். சி.வி.சண்முகம் … Read more

கோஹினூர் சர்ச்சை வைரம் காரணமாக…ராணியின் கிரீடத்தை பெறுவதில் கமீலாவுக்கு சிக்கல்!

மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கமிலாவால் ராணி கிரீடத்தை அணிய முடியாமல் போகலாம். முடிசூட்டு விழாவில் கமீலா பிரமிக்க வைக்கும் அலங்காரத்தை அணிவார். மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தில் உள்ள வைரம் தொடர்பான சர்ச்சைகள் இருப்பதால் மன்னர் மூன்றாம் சார்லஸுன் முடிசூட்டு விழாவில் கமீலா அதை அணிய முடியாமல் போகலாம் என தெரியவந்துள்ளது. மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா மே 6ம் திகதி 2023 ஆம் ஆண்டு சனிக்கிழமை நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. … Read more

மாதவரத்தில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி; இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாதவரம் பால் பண்ணையில் இருந்து மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரூ. 61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் சேவைக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் 3-வது வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் முக்கியமான பணியான சுரங்கம் தோண்டும் பணி தொடக்க விழா இன்று காலை 11 மணி அளவில் நடக்கிறது. இந்த … Read more

சென்னை கிழக்கு தாம்பரத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் – ஊர் பொதுமக்கள் இடையே மோதல்

சென்னை: கிழக்கு தாம்பரம் அனந்தபுரத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் – ஊர் பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவ. மாணவிகள் இரவு நேரங்களில் சாலையோரம் அமர்ந்து அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களை ஊர் பொதுமக்கள் பலமுறை கண்டித்துள்ள நிலையில் நேற்று இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.

பெண் நக்சல் சுட்டுக் கொலை | Dinamalar

புவனேஸ்வர், ஒடிசாவில், பெண் நக்சல் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, கந்தமால் மாவட்டத்தில் உள்ள சிந்தி வனப்பகுதியில், ஒடிசா சிறப்பு அதிரடிப்படையினர், மாவட்ட தன்னார்வப் படையுடன் இணைந்து, நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது, மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஒரு பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டார்; மற்றவர்கள் தப்பியோடினர். அப்பகுதியில இருந்து நக்சல்கள் … Read more

அரசு ஊழியர் டு அரசு ஒப்பந்ததாரர்… எடப்பாடி ஆதரவாளர்(?) – புதுக்கோட்டை ஐ.டி ரெய்டு பின்னணி!

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் நெடுஞ்சாலை துறை அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றிய நிலையில், அப்பா உயிரிழந்ததையடுத்து வாரிசு அடிப்படையில் பாண்டித்துரை நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக தனது பணியைத் தொடங்கியவர். பின்னர் புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார். பின்னர், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக மாறிய இவர் குறிப்பாக, ஒளிரும் மின்விளக்குகளில் தொடங்கி, பேரிகார்டு வரை … Read more

அக்டோபர் 13: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 145-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 145-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அக்-13: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.