வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மருமகன் முருகனை காப்பாற்ற வேண்டும்: நளினியின் தாயார் மனு

சென்னை: வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மருமகன் முருகனை காப்பாற்ற வேண்டும் என்று நளினியின் தாயார் மனு அளித்துள்ளார். மருமகன் முருகனை காப்பாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் வழக்கு தொடந்துள்ளார். கடந்த 32 நாட்களுக்கு மேல் முருகன் உண்ணாவிரதம் இருப்பதால் அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்றும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குப்பைக் கொட்டினால் அபராதம்; வீடியோ எடுத்தால் ரூ.200 சன்மானம்!

வேலூர் மாநகராட்சியில் நடக்கும் கேலி கூத்தான பலச் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படுவதும் தொடர்க்கதையாகிவிட்டன. ஏற்கெனவே, தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை அப்புறப்படுத்தாமல், சிமென்ட் கலவையைக் கொட்டி டூவீலரின் டயர்களைப் புதைத்தனர். அடுத்ததாக, ஜீப்பை அகற்றாமல் ஏடாகூடமாக தார்ச்சாலைப் போட்டனர். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள்ளாகவே, அடிக்குழாய் அகற்றப்படாமல் அப்படியே கழிவுநீர் கால்வாய் கட்டினர். இந்த நிலையில், சமீப நாள்களாக எதுவுமே நடக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த நெட்டிசன்களை உற்சாகப்படுத்துவதற்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் … Read more

காதலன் அனுப்பிய பெண்ணின் புகைப்படம்! காதலி எடுத்த விபரீத முடிவு

பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் காதலருக்கு இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்த ஏஞ்சல் காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம் என கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் சென்னையில் காதலன் வேறொரு பெண்ணை காதலிப்பதாக கூறியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஏஞ்சல். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், தனுஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டரும் சம்மத … Read more

முலாயம் சிங் மறைவு: திரவுபதி, மோடி, ஸ்டாலின் உள்பட தலைவர்கள் இரங்கல்…

சென்னை: உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல மாநில முதல்வர்கள்  இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று (அக்.10) அதிகாலை  காலமானார். அவருக்கு வயது 82.   கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் … Read more

மனித சங்கிலி போராட்டம் நாளை நடைபெறும்: அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

சென்னை: சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க நாளை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். கி.வீரமணி, திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் கூட்டறிக்கையில் தகவல் அளித்துள்ளனர். மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயலும் பிரிவினை வாதிகளை ஒருபோது அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார். சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 17 கட்சிகளும் 44 இயக்கங்களும் பங்கேற்பார்கள் என்று அறிவித்துள்ளனர்.

2023 ஜனவரி இறுதியில் கூட்டத்தொடர் நடத்த ஏற்பாடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தாண்டு டிசம்பரில் பார்லிமென்ட் கூட்டத்தொடர், புதிய பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடருடன் புதிய பார்லிமென்ட் கூட்டத்தொடரை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய பார்லிமென்ட் கட்டடம் ரூ. 1250 கோடி செலவில் வேகமாக தயாராகி வருகிறது. இதற்கான கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை, டாடா நிறுவனம் பெற்றுள்ளது. பார்லிமென்ட் வளாகம் அடங்கிய, ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. … Read more

“நாளைக்கு சம்பாதிக்கிற பணத்தை இன்றைக்கே செலவு செய்யும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்…!’’

இன்றைக்கு வாழும் ஹைடெக் வாழ்க்கையில் பணம் செலவு செய்வதே பெருமைக்குரிய ஒன்றாகிவிட்டது. அதிலும் ஜீபே, ஃபோன் பே, ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்வதே கௌரவம் ஆகிவிட்டது. இதனால் நாம் நாளை சம்பாதிக்கும் பணத்தை இன்றே செலவு செய்துவிடுகிறோம். பணப் பரிவர்த்தனை கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஒருபுறம் நன்மையானாலும் நமக்கு தெரியாமலே அவற்றைப் பயன்படுத்துவதில் நாம் சில தவறுகளை செய்கிறோம். பெருமைக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்துவதன் ஆபத்து பற்றி எத்தனை … Read more

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டாக்ஹோம்:  பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு. வங்கிகள், நிதி நெருக்கடி குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.  பெர்னான்கே உள்ளிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்களுக்கு நிதி நெருக்கடிகள் குறித்த பணிக்காக நோபல் பொருளாதாரப் பரிசு வழங்கப்பட்டது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல், … Read more

டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் பட்டாசு விற்க, வெடிக்க, சேமித்துவைக்க, 2023ம் ஆண்டு ஜன.1ம் தேதி வரை அம்மாநில அரசு தடை விதித்தது.

வேட்பாளர் குற்ற வழக்கு ;சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்கு விபரங்கள் கட்சியின் இணையதளங்களில் வெளியிடப்படுவதை தேர்தல் கமிஷன் உறுதி செய்யும்படி உத்தரவிடக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:உத்தர பிரதேசத்தின் கைரானா சட்டசபை தொகுதியில், சமாஜ்வாதி கட்சி சார்பில் நாஹித் ஹசன் என்ற ரவுடி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் மீதான குற்ற வழக்குகள் குறித்த விபரங்கள் … Read more