குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.60,000 ஆக உயர்வு: தமிழ்நாடு அரசு

சென்னை: குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ. 30,000ல் இருந்து ரூ.60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் இறந்துவிட்டால், வழங்கப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

ஆடிட்டர் உதவி இல்லாமல் நீங்களே வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? இதோ எளிய வழிமுறை!

ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்து விட வேண்டும் என வருமான வரித்துறை அலுவலகம் அறிவுறுத்தி வருகிறது. இதனை அடுத்து வருமான வரி செலுத்துபவர்கள் தங்களுடைய ஆடிட்டரிடம் அனைத்து ஆவணங்களையும் கொடுத்து வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆடிட்டரின் உதவி இல்லாமல் நீங்களே உங்களது ஐடிஆர் 1 படிவத்தை பூர்த்தி செய்து வருமான வரி தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். இந்தியாவின் சிறந்த … Read more

பாட்னா: பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் – தமிழ்நாட்டிலும் தொடர்பா?!

பீகார் மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவரை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக காவல்துறை 3 பேரைக் கைது செய்துள்ளது. கடந்த 11-ம் தேதி பாட்னா-வின் நயா டோலா பகுதியில் காவல்துறை நடத்திய சோதனையில் முகமது ஜலாலுதீன், அக்தர் பர்வேஸ் என்ற தீவிரவாதிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அர்மான் மாலிக் என்ற நபரும் சிக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து … Read more

பிரதாப் போத்தன் நெற்றியில் அழுதபடி முத்தமிட்ட முன்னாள் மனைவி, மகள்! உடல் நல்லடக்கம்

மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் ஜாம்பவானாக திகழ்ந்த பிரதாப் போத்தன் நேற்று தனது 70வது வயதில் காலமானார். இதையடுத்து அவரின் உடலுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதாப்பின் உடல் இன்று காரில் சாலை மார்கமாக கொண்டு செல்லப்பட்டது. அந்த காரின் முன் பகுதியில் ”அம்மா” என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. … Read more

மத்தியஅரசின் கியூட் தேர்வு குழப்பம்: தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

டெல்லி: மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பிரிவில் சேருவதற்காக நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  ‘கியூட்’ எனப்படும் தகுதி நுழைவு தேர்வின்போது, தேர்வு மையங்கள் குளறுபடி காரணமாக ஏராளமானோர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வியாண்டு முதல், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு  பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி,, மத்திய பல்கலைக்கழக … Read more

மாற்றுத்திறனாளிக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம், 1 வெள்ளி

பெர்லின்:ஜெர்மனியில்  மாற்றுத்திறனாளிக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள்  2 தங்கம், 1 வெள்ளி வென்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது. 2 பிரிவுகளில் இந்திய வீரர்களான ராகுல், சிங்ராஜ் தங்கமும், சிங்ராஜ் ஆதனா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

மோடியை சிக்க வைக்க அகமது படேலிடம் பணம் பெற்ற தீஸ்தா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை சிக்க வைக்கவும், ஆட்சியை கலைக்கவும் சமூக ஆர்வலர் தீஸ்தா செடால்வட், முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலிடம் ரூ.30 லட்சம் பணம் பெற்றதாக சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் … Read more

ஒரே ஒரு டாலர் கீழே இருந்து எடுத்தது தப்பா? சாவின் விளிம்புவரை சென்ற பெண்!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கீழே கிடந்த ஒரே ஒரு டாலர் பணத்தை எடுத்ததால் அவர் சாவின் விளிம்பு வரை சென்று வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த டாலரில் சக்திவாய்ந்த போதைப்பொருள் கலந்து இருந்ததாகவும் அதனால் அவருடைய உடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு டாலருக்கு ஆசைப்பட்டு அவர் அந்த பணத்தை எடுத்தால் அவர் ஆயிரக்கணக்கான டாலர் மருத்துவமனைக்கு செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

The Gray Man: தனுஷ் குறித்து சிலாகிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள் – யார், யார் என்னென்ன சொன்னார்கள்?

‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’, ‘எண்டு கேம்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர்கள் ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘The Gray Man’. ஆக்ஷன் – திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இப்படத்தில், தனுஷ் ‘அவிக் சான்’ (Avik San) என்னும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அமெரிக்காவில் ஜூலை 15 அன்று சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து 22-ம் தேதி, உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் … Read more