ஸ்டெர்லைட் ஆலை விற்பனை அறிவிப்பு.. வாங்குவதற்கு இத்தனை போட்டியா?

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, அந்த பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கிட்டத்தட்ட நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த ஆலையை திறக்க பல்வேறு சட்ட நடவடிக்கை எடுத்த வேதாந்தா நிறுவனம், அதன்பின் திறப்பதற்கான வழியே இல்லை என்று தெரிந்தபின் சமீபத்தில் விற்பனை செய்வதாக அறிவித்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், ஸ்டெர்லைட்டை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலால் எத்தனை ஆயிரம் கோடி … Read more

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு – பரோட்டா மாஸ்டர் கொலை; 3 பேருக்கு அரிவாள்வெட்டு!

தூத்துக்குடி, ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள காமராஜ் நகரில் ராஜ் நைட் கிளப் என்ற பெயரில் பரோட்டா கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி, இரவு சுமார் 10 மணியளவில் கற்குவேல், தினேஷ் உள்ளிட்ட நான்கு பேர், பரோட்டா சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் அதிக மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பரோட்டா சாப்பிட்டு, பார்சலும் வாங்கியுள்ளனர். ஆனால், பார்சலுக்கான காசு … Read more

நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்க தமிழக அரசு மறைமுக முயற்சி! பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

திருத்துறைப்பூண்டி: நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி செய்து வருவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்,  தமிழகத்தில்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவே தமிழகம் முழுமையிலும் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்தார். தற்போது முதலமைச்சராக உள்ள மு. க ஸ்டாலின் தலைமையிலான அரசு கலைஞர் கொண்டு … Read more

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

பர்மிங்காம்: பிரிட்டனில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆடவர் 57 கிலோ மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் பாகிஸ்தான் வீரர் ஆசாத் அலியை 14 – 4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி ரவிக்குமார் வெற்றி பெற்றார்.

டில்லியில் போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்த போலீசை தாக்கிய கும்பல்| Dinamalar

புதுடில்லி: டில்லியில் உள்ள போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் வந்த சிலர், ஹெட் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனந்த் விஹார் போலீஸ் ஸ்டேசனில் நடந்த இந்த சம்பவம் கடந்த ஜூலை 31ல் நடந்ததாக தெரிகிறது. ஆக.,3ல் நடத்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. அந்த வீடியோவில், 12 பேர் கும்பல் போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்தனர். அதில் சிலர், போலீசை கடுமையாக தாக்கினர். அருகில் இருந்தவர்கள் அதனை தடுக்காமல் மொபைலில் புகைப்படம் மற்றும் … Read more

2027க்குள் 1 டிரில்லியன் டாலர் ஜிடிபி.. தமிழ்நாட்டுக்கு போட்டியாக உத்தர பிரதேசம்.. புதிய கூட்டணி..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநிலங்களின் கடன் அளவை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல பிரிவுகளில் புதிய வர்த்தகத்தையும், வருவாயும், வேலைவாய்ப்புகளையும் ஈர்க்க துவங்கியுள்ளது. இது மட்டும் அல்லாமல் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவிலான ஜிடிபி-ஐ தமிழ்நாடு எட்ட வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்த போட்டியில் தற்போது உத்தர பிரதேசமும் இறங்கியுள்ளது மட்டும் அல்லாமல் … Read more

நிலத்தகராறு: தற்கொலை செய்துகொண்ட துறவி… பாஜக எம்.எல்.ஏ பெயரில் சிக்கிய கடிதம்! – நடந்தது என்ன?

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியில் உள்ள ராஜ்புரா கிராமத்தில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்தில் பல துறவிகள் தங்கி தியானம் செய்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை 60 வயதான ரவிநாத் என்ற துறவியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஆசிரமத்திற்குப் பின்புறம் உள்ள நிலத்தின் உரிமையாளராக பா.ஜ.க எம்.எல்.ஏ பூரா ராம் சவுத்ரி என்பவர் இருக்கிறார். தனது … Read more

ஆணவத்துடன் செயல்படும் பாஜக 27 ஆண்டுகளாக குஜராத் மக்களுக்கு ஒன்னுமே செய்யல! அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்…

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஆம்ஆத்மி, இப்போதே தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களப்பணியாற்றி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதாவின் 27ஆண்டு கால ஆட்சியில் குஜராத் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்ய வில்லை என்று அக்கட்சிக்கு திமிர் பிடித்து ஆணவதுடன் செயல்படுகிறது என்றும் கடுமையாக விமர்சித்தார். குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு தேர்தல் களம் இப்போதே … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறுத்து அழகுராஜிடம் 5 மணி நேரமாக நடந்த விசாரணை நிறைவு

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறுத்து அழகுராஜிடம் 5 மணி நேரமாக நடந்த விசாரணை நிறைவு பெற்றது. தனிப்படை அழைப்பாணையை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார் மருது அழகுராஜ். வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

சஞ்சய் ராவத் மனைவியிடம் விசாரணை| Dinamalar

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணியில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவரது மனைவி வர்ஷாவையும் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதன் அடிப்படையில், மும்பையில் உள்ள அலுவலகத்தில் வர்ஷா ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை … Read more