மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்வில் ஆட்சியர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்வில் ஆட்சியர்களுக்கு பரிசுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார்.  திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கியுள்ளார்.

நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார்? : பார்லி.,யில் துவங்கியது தேர்தல்| Dinamalar

புதுடில்லி: நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், பார்லிமென்ட் வளாகத்தில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். தே.ஜ., கூட்டணிக்கு அதிக எம்.பி.,க்கள் இருப்பதால், அந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது; இன்று இரவே முடிவு வெளியாகிறது. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம், வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு … Read more

348 செயலிகள் தடை.. இந்தியர்களின் தகவல் திருட்டு..!

இந்தியாவில் அவ்வப்போது சர்ச்சைக்குறிய செயலிகளுக்கு தடை விதித்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இருந்த 348 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த செயலிகள் இந்திய பயனர்களின் தகவல்களை வெளிநாட்டுக்கு அனுமதியின்றி அனுப்பியதாக தெரிய வந்ததை அடுத்து இந்த செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 100 பில்லியன் டாலர்: இந்திய வர்த்தகப் பற்றாக்குறை 4 மாதத்தில் தடாலடி வளர்ச்சி..! 348 செயலிகள் … Read more

போதை மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறல்; ஜானி டெப்பின் முன்னாள் காதலி குற்றச்சாட்டு!

‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். அதிலும் குறிப்பாக ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் அனைவருக்கும் ஃபேவரைட். அந்தக் கதாபாத்திரம் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. ஜானி டெப் 1983-ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இரண்டு ஆண்டுகள் கூட அந்தத் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. பின் அக்வாமேன், தி ரம் டைரி, தி டேனிஷ் கேர்ள் போன்ற படங்களில் … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கை நீதிபதி ஜி.ஜெயராமன் விசாரிப்பார் என அறிவிப்பு!

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விசாரணையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இந்த வழக்கை  சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஜி.ஜெயராமன் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி புதிய நீதிபதி அறிவித்துள்ளார். கடந்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க  ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த … Read more

நெல்லை அருகே பைபாஸ் சாலையில் இளைஞர் வெட்டிக் கொலை

நெல்லை: தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் இளைஞர் பேச்சிராஜன்(24) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்து பேச்சிராஜனை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வபருகின்றனர்.

கர்நாடக முதல்வருக்கு கோவிட் | Dinamalar

பெங்களூரூ: கர்நாடக முதல்வர் பொம்மைக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ” எனக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் லேசான கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன், இதன் காரணமாக பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பெங்களூரூ: கர்நாடக முதல்வர் பொம்மைக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ” எனக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் லேசான … Read more

உள்ளாடையில் பொருளாதாரம்.. சுவாரஸ்யமான கணக்கு..!

ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), சர்வதேச வர்த்தகம், பட்ஜெட் திட்டங்கள் போன்ற பொருளாதார அம்சங்களை அளவிடுவதன் மூலம் கணக்கிடலாம். பொருளாதார அறிஞர்கள் மேற்கண்ட அம்சங்களை கணக்கில் கொண்டு ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளதா? அல்லது பின் தங்கியுள்ளதா? என்பதை அளவிடுவர். ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிட நீங்கள் எப்போதாவது உள்ளாடைகளை பயன்படுத்தியுள்ளீர்களா? நாட்டு மக்கள் அணியும் உள்ளாடைக்கும் பொருளாதாரத்திற்கும் சம்பந்தம் உண்டா? இதுகுறித்து தற்போது பார்ப்போம். … Read more

உயிருக்கு அச்சுறுத்தல்; முன்னாள் அமைச்சரின் உதவியாளரான நடிகைக்கு சிறையில் 24 மணி நேர பாதுகாப்பு!

மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியும் அவருக்கு மிகவும் நெருக்கமான அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அர்பிதாவின் இரண்டு வீடுகளில் இருந்து ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு 5 கிலோ தங்கம் மற்றும் சொத்து வாங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தனக்கு சொந்தமானது இல்லை என்றும், தான் இல்லாத நேரத்தில் பணத்தை கொண்டு வந்து வைத்துவிட்டதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் அர்பிதா முகர்ஜி … Read more

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.