Chief Minister Sidhu accuses BJP of trying to change the Constitution | அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சி பா.ஜ., மீது முதல்வர் சித்து குற்றச்சாட்டு

உடுப்பி : அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பா.ஜ., முயற்சி செய்வதாக, முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் சித்தராமையா உடுப்பியில் நேற்று அளித்த பேட்டி: பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமார் ஷெட்டி, முன்னாள் எம்.பி., ஜெயபிரகாஷ் ஹெக்டே காங்கிரசில் இணைந்து இருப்பதால், கடலோர மாவட்டங்களில் காங்கிரஸ் பலம் பெறும். உடுப்பி – சிக்கமகளூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று, கட்சி மேலிடம் முடிவு செய்யும். மைசூரு பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹா சீட் கிடைக்காது … Read more

நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை – மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு

பெங்களூரு, காங்கிரஸ் பொதுக்கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் டெபாசிட்டாக உள்ளது. இந்த நிதியை பயன்படுத்த முடியாத அளவுக்கு மத்திய அரசு வங்கி கணக்குகளை முடக்கிவிட்டனர். வருமான வரித்துறை அதிக தொகையை அபராதமாக விதித்துள்ளது. அதனால் தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் நிதி சிக்கலை … Read more

`காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைபெண்களின் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம்!’ – ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் இறுதிக்கட்ட பகுதி மகாராஷ்டிராவிற்குள் வந்துள்ளது. துலேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அதில் பேசுகையில், ”காங்கிரஸ் வெற்றி பெற்றால் பொருளாதார ரீதியில் பின் தங்கிய ஏழைப்பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மதிய உணவு திட்டத்தில் பணியாற்றும் … Read more

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாநில அரசுகள் நிறுத்த முடியாது! உள்துறை அமைச்சர் அமித் ஷா

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை  மாநில அரசுகளால்  எப்படி நிறுத்த முடியும்? என  கேள்வி எழுப்பியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா , இதை வைத்து, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோர் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றனர்.  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவது உறுதி என்றும், இதனால் இஸ்லாமியர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை  சில தினங்களுக்கு … Read more

உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதா.. ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்! விரைவில் சட்டமாக்கப்படுகிறது

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘பொது சிவில் சட்ட மசோதாவுக்கு’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இது சட்டமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி இந்த சட்டத்தை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் மசோதாவாக தாக்கல் செய்திருந்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இது சட்டமாக பெரும்பான்மை Source Link

BJP candidates for 20 constituencies…announcement!; A chance for King Yaduveer who is not in the party | 20 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள்…அறிவிப்பு!; கட்சியில் இல்லாத மன்னர் யதுவீருக்கு வாய்ப்பு

பெங்களூரு : லோக்சபா தேர்தலுக்காக, கர்நாடகாவின் 20 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். கட்சியில் இல்லாத, மைசூரு உடையார் மன்னர் வம்சத்தின் யதுவீர்; முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதாப் சிம்ஹா, நளின்குமார் கட்டீல் உட்பட தற்போதைய ஒன்பது எம்.பி.,க்களுக்கு, ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் சீனிவாச பூஜாரி, லோக்சபா தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில், 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019 … Read more

தங்க நகைக்கடன்களை ஆய்வு செய்யுங்கள் – வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

புதுடெல்லி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்க நகைகளை அடமானமாக பெற்று கடன் வழங்கி வருகின்றன. தங்கத்தின் மதிப்பில் 75 சதவீத தொகையை மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கி விதிமுறை ஆகும். இருப்பினும், கொரோனா காலத்தில் இதில் தளர்வு அளிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், விவசாயம் சாராத நகைக்கடன்களுக்கு நகை மதிப்பில் 90 சதவீதம்வரை கடன் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி தளர்வு அளித்தது. இந்த தளர்வு, 2021-ம் ஆண்டு மார்ச் … Read more

விடுமுறைக்கு ஊர் திரும்பிய ராணுவ வீரர்… திண்டுக்கல் என நினைத்து கரூரில் இறங்கியபோது நேர்ந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடி அந்தி பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி தாஸ் என்பவரது மகன் பாஸ்கர் (33). இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மீரட் ராணுவ மருத்துவ முகாமில் அவசர ஊர்தி உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், விடுமுறையில் சொந்த ஊர் திரும்புவதற்காக சண்டிகரில் இருந்து மதுரை நோக்கி வரும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வண்டியில் வந்தார். ரயில் சுமார் 11:30 மணியளவில் கரூர் வந்தடைந்தது. அடுத்தடுத்து இறந்த மகன், கணவர்… துக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்! – … Read more

தேர்தல் செலவுக்கு எங்களிடம் பணமில்லை : கார்கே அறிவிப்பு

கலபுரகி மக்களவைத் தேர்தல் செலவுக்கு தங்களிடம் பணமில்லை எனக் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில் ”காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் டெபாசிட்டாக உள்ளது. ஆனால் இந்த நிதியைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மத்திய அரசு வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டனர். காங்கிரசுக்கு வருமான வரித்துறை அதிக தொகையை அபராதமாக … Read more

Siddaramaiah attacked Deve Gowda and Kumaraswamy | தேவகவுடா, குமாரசாமி மீது சித்தராமையா கடும் தாக்கு

சிக்கபல்லாபூர் : ”மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய தேவகவுடாவும், குமாரசாமியும், பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளர்களாக மாறிவிட்டனர்,” என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். சிக்கபல்லாபூர் நகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நடந்த வாக்குறுதித் திட்ட பயனாளிகள் மாநாட்டில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: கர்நாடகத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ள பிரதிநிதிகள், அரசியல் ரீதியாக வளரக்கூடியவர். அமைச்சர் எம்.சி.சுதாகருக்கு அந்த குணங்கள் அனைத்தும் கிடைத்து உள்ளன. தேர்தலுக்கு முன்பு நாங்கள் பல வாக்குறுதிகளை அளித்தோம் என்பது … Read more