“முதல்வர் அளவுக்கு உயர்ந்துவிட்ட தம்பி ஸ்டாலினுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கிறது” – ராமதாஸ் பதில்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு தனது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை சாத்தியமாக்கி, அதன் தரவுகளை வெளியிட்டார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலமாக பீகார் அரசு இதை சாத்தியமாக்கியதையடுத்து, தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கூறிவரும் காங்கிரஸ், அதைத் இந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்குறுதியாகவே அளித்திருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, தாங்கள் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று காங்கிரஸ் உறுதியளித்துவருகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு இதேபோல், தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு … Read more

தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க முடியுமா? மத்தியஅமைச்சர் எல்.முருகன் கேள்வி…

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்பாசத்தை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க முடிந்ததா? மத்திய பாஜக அமைச்சல் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியில்  காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டுகளாக  ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள், சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் ஏன் எழுத வைக்க முடியவில்லை, ஆனால், தற்போது மோடிஅரசுதான் மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத நடவடிக்கை எடுத்துள்ளது. கெட்டிக்காரன் புளுகு … Read more

கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை கல் எறிந்து கொல்லலாம்.. தாலிபான்களின் பகீர் உத்தரவு.. அலறும் ஆப்கன்

காபூல்: ஆப்கானிஸ்தானில் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் பெண்களை பொதுவெளியில் நிற்க வைத்து கல்லால் எறிந்து கொலை செய்யும் கொடூர தண்டனை மீண்டும் அமல்படுத்தப்படும் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் என்றதும் நமக்கு முதலில் நியாபகம் வருவது தாலிபான்கள். நீண்டகாலமாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட நாடாக ஆப்கானிஸ்தான் இருந்தது. அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு தாலிபான்களை விரட்டியடித்தன. கடந்த 2021ல் Source Link

AI தொழில்நுட்பம் மூலம் மோசடி: மும்பையில் மகன்/மகள் பேசுவதுபோல் பெற்றோரிடம் பேசிபணம் பறிப்பு!

டிஜிட்டல் துறையில் ஏ.ஐ. தொழில் நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதே நேரம் மோசடி பேர்வழிகளும் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் வேலையில் இறங்கி இருக்கின்றனர். மும்பையை ரஞ்சித் என்பவரின் நம்பருக்கு மர்ம நம்பரில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சி.பி.ஐ.அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, `உங்களது மகனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து வைத்திருக்கிறோம். வழக்கு பதிவு செய்ய இருக்கிறோம். அப்படி … Read more

ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல! ப.சிதம்பரம்…

டெல்லி: ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல, இதற்கு மக்கள் தேர்தலில் பதில் தருவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் காட்டமாக தெரிவித்து உள்ளார். நாட்டின் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பு மத்திய பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் வேலை என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கை … Read more

மகாராஷ்டிரா: முதல் கட்ட தேர்தலில் முற்றிலும் புதுமுகங்களை கொண்டு பாஜக-வை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

வரும் மக்களவைத் தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் மகாராஷ்டிராவில் ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக விதர்பாவில் இருக்கும் நாக்பூர், ராம்டெக், பண்டாரா, சந்திராப்பூர், கட்சிரோலி ஆகிய தொகுதியில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் மூன்று கட்சியும், பா.ஜ.க கூட்டணியில் 3 கட்சியும் இடம் பெற்று இருந்தாலும் முதல் கட்டத்தேர்தல் மட்டும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே மட்டும் பிரதானமாக நடக்கிறது. ஐந்து தொகுதியில் சிவசேனா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. தேசியவாத காங்கிரஸ் … Read more

வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர்மீது 242 கிரிமினல் வழக்குகள்….

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் தேர்தல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்  சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகள் உள்ளது. இதை அவரே தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி பல ஆண்டுகளாக காங்கிரஸ் கோட்டையாக திகழ்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் ராகுல் காந்தி  இங்கு போட்டியிட்டு எம்.பி.யான நிலையில், தற்போது 2வது முறையாக மிண்டும் போட்டியிடுகிறார். இங்கு, அவரை எதிர்த்து,    இண்டியா … Read more

`நாடு காக்க வந்துள்ளேன் என்று தொடக்கத்தில் சொன்னபோது நானே கூட நம்பிவிட்டேன்!’- மோடி குறித்து கமல்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், “நாட்டைக் காக்கும் உரிமை தமிழர்களுக்கும் உள்ளது. தேசிய நீரோட்டத்தில் கலக்காத திராவிடக் கூட்டம் இது என சிலர் பேசிக் கொள்கிறார்கள். வடநாட்டில் யாராவது காமராஜர், சிதம்பரம் என்று பெயர் வைத்துள்ளார்களா? ஆனால், இங்கு காந்தி, நேரு, சுபாஷ்சந்திரபோஸ் என்று தங்கள் குழந்தைகளுக்கு எத்தனை பேர் பெயர் வைத்திருக்கிறார்கள். நீங்கள் இப்போதுதான் … Read more

2மாதத்தில் 35000 விண்ணப்பம்: வீடுகளுக்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு…

சென்னை: மத்திய பாஜக அரசு சமீபத்தில் தொடங்கிய மேற்கூரை சோலார் திட்டத்துக்கு (சூரியசக்தி மூலம் வீடுகளுக்கு மின்சாரம் ) தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  இந்த திட்டத்தை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தொடங்கிய இரு மாதங்களில் சுமார் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் (பிப்ரவரி 2024),  ‘பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா’ (https://pmsuryaghar.gov.in/) என்ற மேற்கூரை சோலார் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். இதற்கு … Read more

23 பாகிஸ்தானியர்களுடன் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை; சரணடைந்த கொள்ளையர்கள்

டெல்லி, இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கடற்கொள்ளையர்களும் கப்பல்களை கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் ஈரானை சேர்ந்தவர்கள் மீன்பிடி கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஏடன் வளைகுடா பகுதியில் சகொட்ரா … Read more