“பல தடைகள் இருப்பினும் டெல்லி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது ஆம் ஆத்மி அரசு” – துணைநிலை ஆளுநர் உரை

புதுடெல்லி: டெல்லி அரசு கல்வித் துறையில் செலுத்தும் கவனத்தினால் மாணவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார். டெல்லியில் ஐந்து நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 17) தொடங்கியது. அதன் முதல் நாள் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உரையாற்றினார். ஆளுநர் தனது உரையில் ஆம் ஆத்மி அரசின், கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைச் சுட்டிக்காட்டி பேசினார். அரசுக்கு பாராட்டு: துணைநிலை ஆளுநர் தனது உரையில், “ஆம் ஆத்மி … Read more

பெற்ற மகளை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியத் தந்தை கைது!

பெங்களூருவில், பெற்ற மகளை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்ற ஆஷா, கருத்து வேறுபாடு காரணமாக காதல் கணவரை பிரிந்து பெற்றோருடன் 2 ஆண்டுகளாக வசித்துவந்தார். பெற்றோரை மதிக்காமல் மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட ஆஷா, வயதானவர்கள் என்றும் பாராமல் அவர்களை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் தந்தை ரமேஷ் உடன் சண்டையிட்டுவிட்டு இரவில் உறங்க சென்ற ஆஷாவை, அவர் விறகு கட்டையால் … Read more

தமிழ்நாட்டின் நிதிநிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

டெல்லி: தமிழ்நாட்டின் நிதிநிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது; புதிதாக கடன் வாங்க தேவையில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் ஒன்றிய அரசின் நிதி பங்கீடு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. ஒன்றிய அரசின் நிதிபங்கீடு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.25,000 கோடி குறைந்துள்ளது. அதானி குழும பங்குகள் சரிவால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

ரூ.2.79 லட்சம் கோடியில் ஆந்திர பட்ஜெட் தாக்கல்

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.2.79 லட்சம் கோடியில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ராஜேந்திரநாத் இதனை தாக்கல் செய்தார். முன்னதாக அமைச்சர் பேசும்போது, ஆந்திராவில் 62% பேர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். எனவே விவசாயிகளின் ஆதாயத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த அரசு சிந்தித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாட்டில் முதலிடத்தில் ஆந்திரா உள்ளது. இறைச்சி உற்பத்தியில் 2-வது இடத்திலும் … Read more

Live In Relationship: லிவ்-இன் ரிலேஷன்ஷிப் அட்ராசிட்டி! அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்

அகமதாபாத்: காதல், திருமணம், திருமணம் செய்துக் கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வது, ஓரின சேர்க்கை, திருமணம் தாண்டிய உறவு என பல விஷயங்கள் இன்றும் விவாதப் பொருளாக இருக்கின்றன. அதில் லிவ்-இன் என்ற அக்ரிமெண்டின் அடிப்படையில் கணவரிடம் இருந்து காதலியை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள முயன்ற ஒருவருக்கு  குஜராத் உயர்நீதிமன்றம் ரூ.5,000 அபராதம் விதித்தது. குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தை அணுகி, தன்னுடன் இருக்கும் பெண்ணுடன் தான் வாழ்வதாகவும், ஆனால், அவளது விருப்பத்திற்கு மாறாக … Read more

செகந்தராபாத்தில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து… புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி 4 பெண்கள் உட்பட 6 பேர் பலி!

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில், வணிக வளாகத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தின்போது, புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி, 4 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகினர். செகந்தராபாத்தில் ஸ்வப்னலோக் வணிக வளாகத்தில் நேற்றிரவு திடீர் தீ விபத்து நேரிட்ட நிலையில், மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் இருளில் சிக்கிக்கொண்டனர். உதவி கேட்டு மக்கள், செல்போன் டார்ச் விளக்கை எரியவிட்டதையடுத்து, தீயணைப்புப்படையினர் அவர்களை பத்திரமாக வெளியேற்றினர். எனினும் 5ஆவது தளத்திலுள்ள அறை ஒன்றில் மயங்கிக்கிடந்த 6 பேர் மீட்கப்பட்டு, அருகிலிருந்த அரசு … Read more

கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் உயிர்தப்பிய ஒன்றிய பெண் அமைச்சர்: போதை லாரி டிரைவர் கைது

விஜயபுரா: கர்நாடகா சென்ற ஒன்றிய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி சாலை விபத்தில் காயமடைந்தார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் விஜயபுரா தேசிய நெடுஞ்சாலை-50ல் நேற்றிரவு ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை பாஜக இணையமைச்சர் அமைச்சர் நிரஞ்சன் ஜோதி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென ஒன்றிய அமைச்சரின் கார் மீது மோதியது. இச்சம்பவத்தில் அமைச்சர் மற்றும் அவரது கார் டிரைவருக்கு … Read more

பிரதமர் மோடிக்கு எதிராக சிறப்புரிமை தீர்மானம் – மாநிலங்களவையில் கே.சி.வேணுகோபால் தாக்கல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் மாநிலங்களவையில் சிறப்புரிமை தீர்மானம் தாக்கல் செய்தார். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அவமதிக்கும் விதமாக இழிவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான வேணுகோபால் சிறப்புரிமை தீர்மானத்தினை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த … Read more

துணை ராணுவப் படையில் 10% இடஒதுக்கீடு! அக்னிவீர் பணிகளில் வயது வரம்பில் தளர்வு

நியூடெல்லி: அக்னிவீரர்களுக்கான வயது வரம்பில் தளர்வு அளிக்க உள்துறை அமைச்சகமும் முடிவு செய்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை சட்டம் 1968ன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய தொழில் பாதுகாப்பு படை சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு வழங்கப்பட்டதைப் போலவே, முன்னாள் தீயணைப்பு வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.   BSFக்குப் பிறகு, முன்னாள் தீயணைப்பு வீரர்களுக்கு இந்த துணை ராணுவப் படையில் 10% இடஒதுக்கீடு … Read more

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6% உயர்ந்து வருவதாக ஒன்றிய அரசு தகவல்..!!

டெல்லி: இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6% உயர்ந்து வருவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வனங்களின் சூழல் தன்மையை பாதுகாப்பதில் புலிகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், தற்போதைய காலக் கட்டத்தில் புலிகள் இனம் அழிந்து வருகின்றன. புலிகள் தங்கள் இயற்கை வாழ்விடங்களில் 90% இழந்துவிட்டன. அந்த வகையில் மிக வேகமாக அழிந்து வரும் புலி இனங்களை பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,  புலிகள் … Read more