நடிகை தற்கொலை..லவ் ஜிகாத் காரணம்..பாஜக எம்எல்ஏ உறுதி.!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது சக நடிகரான ஷீசன் முகமது கான், துனிஷாவின் தாயின் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இருவரும் காதலித்து வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு பிரிந்ததாகவும், இது துனிஷாவை தற்கொலைக்குத் … Read more

சீரியல் நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை – சக நடிகர் ஷீசான் கான் கைது

மும்பையில் சீரியல் நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில், சக நடிகரை போலீசார் கைது செய்தனர். 20 வயதேயான நடிகை துனிஷா, சனிக்கிழமை மும்பையில் நடைபெற்ற சீரியல் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நடிகை துனிஷாவும் அவருடன் நடித்து வந்த ஷீசான் கான் என்பவரும் காதலித்து வந்ததும், கடந்த 15 நாட்களுக்கு முன் பிரேக் அப் செய்து இருவரும் பிரிந்ததால், மன உளைச்சலில் … Read more

வங்ககடலின் தென்மேற்கில் நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகலில் குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

டெல்லி : வங்ககடலின் தென்மேற்கில் நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகலில் குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது, மேற்கு – தென்மேற்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகா்ந்தது குமரிக்கடல் பகுதிக்கு நாளை காலை நாகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மாற்றத்தால் 4 நாள்களுக்கு வட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதிய கட்சி தொடங்கிய முன்னாள் அமைச்சர்!!

பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் போது சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக 2011இல் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்தது, கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில், ஜனார்த்தன ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு … Read more

இந்தியாவின் வித்தியாசமான ரயில் நிலையம் இதுதான்!!

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பல வகைகள் உள்ளன. உயரமான ரயில் நிலையம், பரபரப்பான ரயில் நிலையம், புராதன சின்னம் போன்ற ரயில் நிலையம், உலக சாதனை படைத்த ரயில் நிலையம், முதல் ரயில் நிலையம் என பல வகைகள் இருக்கின்றன. இதில், இந்தியாவிலேயே வியப்பூட்டும் ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அதுதான் நவாப்பூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் ஒரு பகுதி குஜராத்துக்கும், மற்றொரு பகுதி மகாராஷ்டிராவுக்கும் சொந்தமானது. இரண்டு … Read more

சீனாவில் பணியாற்றி விடுமுறையில் ஆக்ரா வந்தவருக்கு கொரோனா உறுதி

ஆக்ரா: சீனாவில் பணியாற்றி விடுமுறையில் ஆக்ரா வந்தவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா உறுதியானது. அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளனர்.

''மத மாற்றம் தொடர்பாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது'' – மாயாவதி

லக்னோ: மத மாற்றம் தொடர்பாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது என்று மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உ.பியின் முன்னாள் முதல்வருமான மாயாவதி கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரையும் போல் கிறிஸ்தவர்களும் தங்கள் வாழ்க்கையை … Read more

1.5 டன் தக்காளியில் கிறிஸ்துமஸ் தாத்தா; ஒடிசா கடற்கரையில் பிரம்மாண்டம்.!

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும், இந்த திருவிழா, நாடு முழுவதும் தேவாலயங்கள் வண்ண விளக்குகளா கலைக்கட்ட தொடங்கியுள்ளது. கிறிஸ்துவ மக்கள் ஒரு மாதமாக கடுமையாக விரதம் மேற்கொண்டு கிறிஸ்மஸ் விழாவை வரவேற்க தொடங்கி காத்திருந்த நிலையில், கிறிஸ்துமஸ் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இந்த பிரார்த்தனையில், உறவினர்கள் … Read more

திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய காட்சி இணையத்தில் வைரல்..!

மத்தியபிரதேசத்தில், திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்ணை, ஆண் நண்பர் தாக்கும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. ரேவா மாவட்டத்தில், 19 வயது பெண்ணை திருமணம் செய்ய, அவரது ஆண் நண்பர் விருப்பம் தெரிவித்ததாகவும், குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறி திருமணத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, இளம்பெண்ணை அறைந்த ஆண் நண்பர், அவரது முடியை பிடித்து இழுத்து தாக்கி கீழே தள்ளினார். தாக்குதலில், மயக்கமடைந்த பெண்ணை தொடர்ந்து அந்த நபர் தாக்கிய நிலையில், இளைஞரின் நண்பர் … Read more

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு திருமணம் வேண்டாம்; மத்திய அமைச்சர்.!

குடிகார அதிகாரியை விட ரிக்ஷாக்காரன் அல்லது கூலித் தொழிலாளி சிறந்த மணமகன் என்பதை நிரூபிப்பார் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியுள்ளார். குடிகாரர்களுக்கு தங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளை திருமணம் செய்ய வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சனிக்கிழமையன்று லம்புவா சட்டமன்றத் தொகுதியில் போதைக்கு அடிமையாதல் குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கௌஷல் கிஷோர், “ஒரு குடிகாரனின் ஆயுட்காலம் மிகவும் குறைவு” என்று கூறினார். தனது தனிப்பட்ட அனுபவத்தை … Read more