கரோனா விதிகளை முதலில் அறிவியுங்கள்; பிறகு நாங்கள் பின்பற்றுகிறோம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: கரோனா விதிகள் குறித்து அரசு முதலில் அறிவிக்கட்டும் பிறகு நாங்கள் பின்பற்றுகிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்திய ஒற்றுமை யாத்திரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற இயலாவிட்டால் பொது சுகாதாரம் கருதி இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்திக் கொள்ள வேண்டும்” … Read more

கடும் பனிமூட்டம் காரணமாக நொய்டா அதிவிரைவுச்சாலையில் வாகனங்களின் வேக வரம்பு குறைப்பு!

கடும் பனிமூட்டம் காரணமாக, நொய்டா – கிரேட்டர் நொய்டா அதிவிரைவுச்சாலையில் வாகனங்களின் வேக வரம்பு, மணிக்கு 100 கிலோ மீட்டரில் இருந்து 75 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 25 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ஆறு வழி விரைவுச்சாலையில் தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், பனிமூட்டத்தால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே போல, நொய்டாவில் உள்ள முக்கிய சாலைகளிலும் வாகனங்களின் … Read more

சீன விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம்..!!

டெல்லி : சீன விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், தி.மு.க, மார்க்சிஸ்ட், திரிணாமூல் உள்ளிட்ட 12 கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீன படைகள் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக புகார் தெரிவித்து நாடாளுமன்றத்தில் உள்ளே இருக்கின்ற காந்தியடிகள் சிலையின் முன்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா … Read more

மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்: சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுடெல்லி: இந்திய – சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவாதிக்க மறுக்கும் அரசு: இந்திய – சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே நிகழ்ந்த மோதல் குறித்தும், இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்திருக்கிறதா என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் … Read more

கொரோனா மீண்டும் அதிகரிக்காமல் தடுக்க ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை தொடங்கியது..!!

டெல்லி: கொரோனா மீண்டும் அதிகரிக்காமல் தடுக்க ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை தொடங்கியது. ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பரவலை தடுக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்காக அதிகளவில் வெளிநாட்டு பயணங்கள் இருக்கும் என்பதால் ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா நிலவரம் குறித்து உயரதிகாரிகள், நிபுணர்களுடன் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் வெள்ளம் -34 நாட்களில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம்

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் வெள்ளம் அலைமோதுகிறது. கடந்த 34 நாட்களில் 22 லட்சத்து 66 ஆயிரத்து 128 பேர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நடை திறக்கப்பட்டது முதல் நேற்று (20.12.22) வரையிலான 34 நாட்களில் 25 லட்சத்து … Read more

மீண்டும் கொரோனா – மத்திய அரசு அவசர ஆலோசனை!!

பல்வேறு நாடுகளிலும் மீண்டும் கொரோனா பரவுவது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். உலகையே அச்சுறுத்திய கொரோனா தற்போது மீண்டும் வேகம்காட்டி வருகிறது. சீனாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, கொரோனா பரவல் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதே போல் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி பொதுமக்கள் அவதியுறுகின்றனர். எனவே, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக நாடுகள் ஆயத்தமாகி … Read more

சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்!!

சபரிமலையில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண்டல பூஜைக்காக பல்வேறு துறைகளின் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நடைபெற்றது. சன்னிதான அதிகாரி விஷ்ணுராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தருவது என முடிவு செய்யப்பட்டது. மண்டல பூஜையையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் முன் ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. பல்வேறு மொழிகளில் பக்தர்களுக்கு அறிவுரை மற்றும் பின் பற்ற வேண்டிய அறிவிப்புகள் இடைவிடாமல் ஒலி பெருக்கி … Read more

"நாட்டில் இன்று இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே போராட்டம் நடக்கிறது" – ராகுல் காந்தி

ஹரியாணா: “நாட்டில் இன்று இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பணி இருக்கிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்று வந்த காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை புதன்கிழமை ஹரியாணா மாநிலத்திற்குள் நுழைந்தது. அம்மாநிலத்தின் நூக் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கன்னியாகுமரியில் இருந்து இந்த யாத்திரை தொடங்க வேண்டிய அவசியம் என்ன … Read more

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு..!!

டெல்லி: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கும்போது தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என அரசு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வேலுமணி மேல்முறையீடு செய்துள்ளார்.