பில்கிஸ் பானு வழக்கு: சிறப்பு பெஞ்ச் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
புதுடெல்லி: குஜராத் கலவரத்தின்போது தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க சிறப்பு அமர்வினை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி. பத்ரிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தாவிடம் புதன்கிழமை தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணையின்போது, “இது அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய … Read more