என்கவுன்டர், புல்டோசர் நடவடிக்கையால் பீதி: ஐயா… இனிமே தப்பு செஞ்சா சுட்டுடுங்க! கழுத்தில் பதாகையுடன் சரணடைந்த பிரபல ரவுடி

லக்னோ: உயிர் பயத்தால் தலைமறைவாக இருந்த ரவுடி, காவல் நிலையத்தில் சரணடைந்தான். கழுத்தில் பதாகையுடன் சரணடைந்ததால் அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருவதும், கடுங் குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுத் தள்ளுவதும், அவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தள்ளுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். இவரது இந்த நடவடிக்கையால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பீதியில் உறைந்துள்ளனர். அதேநேரம் முதல்வரின் … Read more

ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லையா..? உங்களுக்கு இன்னும் 10 நாட்கள்தான் கெடு இருக்கு!

“ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வங்கி தொடங்கி, அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியமானதாக உள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. குறிப்பாக, வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு ஆதாருடன் இணைக்காதவர்கள், 2023, ஏப்ரல் 1ஆம் தேதி … Read more

தருமபுரி ராணுவ ஆராய்ச்சி மையம் தொடங்குவதை விரைவுபடுத்துங்கள்: மக்களவையில் திமுக எம்.பி. செந்தில்குமார் பேச்சு

புதுடெல்லி: தருமபுரியில் ராணுவ ஆராய்ச்சி மையம் துவக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இதை திமுக எம்.பி.யான டாக்டர்.டிஎன்வி.செந்தில்குமார் மக்களவையில் வலியுறுத்தினார். இது குறித்து தருமபுரி தொகுதியின் எம்.பி.,யான செந்தில்குமார் விதி எண் 377 கீழ் மக்களவையில் பேசியதாவது: ”தருமபுரி மாவட்டத்தில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மூலம் அம்மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். இந்த ஆராய்ச்சி மையம் தொடங்க கடந்த 2010 முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் … Read more

4 ஆண்டில் பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் அரசியலில் திருப்பம்: ஓட்டம் பிடித்த கூட்டணி கட்சிகளை இழுக்கும் பாஜக.! 2024 மக்களவை தேர்தலுக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியது

புதுடெல்லி: கடந்த 4 ஆண்டில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தலைமை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, தனிப்ெபரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டிருந்தாலும், கடந்த 4 ஆண்டில் 3 கூட்டணி கட்சிகள் தேசிய … Read more

"எதிர்க்கட்சிகளுக்கு சிபிஐ சோதனை; பழைய நண்பனுக்கு உதவி" – மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அமலாக்கத்துறையும், சிபிஐயை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களைப் பின்தொடரும் மத்திய அரசு, நாட்டிலிருந்து தப்பியோடியவர்களுக்கு சலுகை காட்டிவருவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இன்டர்போலின் ரெட் நோட்டீஸ் பட்டியலில் இருந்து தப்பியோடிய வைர வியாபாரி மெகுல் சோக்சியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக கார்கே இவ்வாறு தெரிவித்துள்ளார். வைர வியாரியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளருமான மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அவர் மீது இன்டர்போல் கடந்த … Read more

ராகுல் காந்தி "தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃப்ர்" பாஜக புதிய சர்ச்சை

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி லண்டனில் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் முற்றிலும் நிராகரித்து வருகிறது. இரண்டு கட்சியில் இருக்கும் தலைவர்கள் ஒருவரையொருவர் மாறிமாறி வாரத்தையால் தாக்கி வரும்வேளையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுல் காந்தியை “தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃப்ர்” எனக்கூறியது பெரும் … Read more

இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்ட கனடா எம்பி உட்பட பலரது டுவிட்டர் கணக்கு முடக்கம்: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளை பதிவிட்ட கனடா எம்பி உள்ளிட்ட பலரது டுவிட்டர் கணக்கை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. பஞ்சாபில் ‘காலிஸ்தான்’ ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு சமூக ஊடகங்களின் மூலம் காலிஸ்தான் ஆதரவு பதிவுகளை வெளியிட்டு வருவோரை ஒன்றிய அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. மேலும் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில்  உள்ள … Read more

7 வயது குழந்தை கொலை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்தவரின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ஏழு வயது குழந்தையை கொலை செய்த தமிழகத்தைச் சேர்ந்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர், கடந்த 2009-ம் ஆண்டு 7 வயது குழந்தையை கடத்தி ரூ.5 லட்சம் பிணைத்தொகை கேட்டுள்ளார். குழந்தையின் பெற்றோர் வழங்காததால் குழந்தையை அவர் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து கடந்த 2013-ம் ஆண்டு சுந்தரராஜனுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. தூக்கு … Read more

சித்தாந்தத்தின் அடிப்படையில் கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்.! பிரசாந்த் கிஷோர் கருத்து

பாட்னா: பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால் அதன் பலத்தை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.  பீகாரை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பலன் அளிக்காது. ஏனெனில் அது நிலையற்றதாகவும், கருத்தியல் வேறுபட்டதாகவும் உள்ளது. பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், அதன் பலத்தை நீங்கள் (எதிர்க்கட்சிகள்) புரிந்து கொள்ள … Read more

பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் வேண்டுமென்றே முடக்கம்: பியூஷ் கோயல்

புதுடெல்லி: பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவித்து, தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. எனினும், இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ஹிண்டன்பர்க் அறிக்கை மீது விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் … Read more