2020-2023 மார்ச் 15 வரை நாட்டில் 2,56,980 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 2020-2023 மார்ச் 15 வரை நாட்டில் 2,56,980 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று  ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தொழித்துறை இணை அமைச்சர் கிருஷ்ன் பால் அளித்துள்ளார்.

பெங்களூரு: இந்துத்துவா குறித்து ட்வீட் செய்த கன்னட நடிகர் கைது

பெங்களூரு: “பொய்களால் கட்டமைக்கப்பட்டதே இந்துத்துவா” என ட்வீட்டில் கருத்துப் பதிவு செய்த கன்னட சினிமா நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பெங்களூரு மாநகர போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத உணர்வை புண்படுத்தியதாக நடிகர் சேத்தன் குமார் மீது சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதாகி உள்ளார் என போலீஸ் … Read more

விசாரணைக்காக தனது 3 செல்போன்களையும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தார் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகள் கவிதா..!

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகள் கவிதா, தனது 3 செல்போன்களையும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்ட புகாரில் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜராக வந்த கவிதா தனது  செல்போன்களை அமலாக்கத்துறையிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தார். எந்தவிதமான நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் ஒரு பெண்ணின் செல்போன்களை விசாரணைக்கு உட்படுத்தலாமா, இது ஒரு பெண்ணின் … Read more

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரத்தை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 29,30ல் போராட்டம்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரத்தை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 29,30ல்  போராட்டம் நடத்தப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்திற்கு எதிராக ஒன்றிய அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது.  ஒன்றிய அரசிடம் இருந்து எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி பெறாத ஒரே … Read more

அமெரிக்கா முதல் சுவிஸ் வரை.. அடுத்தடுத்து திவால் ஆகும் வங்கிகள்.. இந்திய வங்கிகளின் நிலை?

அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள சில வங்கிகள் திவாலாகி இருக்கும் நிலையில், இந்தியாவில் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்த திவாலான வங்கிகள்! அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கிக்கு (Silicon Valley Bank) ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் திவாலானதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி சிலிக்கான் வேலி … Read more

என்னைக் களங்கப்படுத்தும் குற்றச்சாட்டுகளுக்கு மக்களவையில் பதிலளிக்க அனுமதிப்பீர்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: தன்னைக் களங்கப்படுத்தும் மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மக்களவையில் பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ”மக்களவையில் மூத்த அமைச்சர்கள் என் மீது முன்வைத்த அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு நான் ஏற்கனவே கடந்த 17-ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். மீண்டும் அதே கோரிக்கையை … Read more

சூரத்தில் பயன்பாட்டில் இல்லாத 85 மீ உயரமான குளிரூட்டும் கோபுரம் 7 நொடிக்குள் தகர்ப்பு..!

குஜராத்தின் சூரத்தில் மின் உற்பத்தி நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத 85 மீட்டர் உயரம் கொண்ட குளிரூட்டும் கோபுரம் 220 கிலோ வெடிமருந்து வைத்து பாதுகாப்புடன் தகர்க்கப்பட்டது. புதிய கோபுரம் அமைக்கப்பட்டதால், சுமார் 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த கோபுரத்தை இடிக்க முடிவெடுத்த மின்சார வாரியம், வெடிமருந்துகளை கோபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தி வெடிக்க வைத்தனர். 72 மீட்டர் விட்டமும், 85 மீட்டர் உயரமும் கொண்ட சிமென்ட் கான்கிரீட் கோபுரம் சுமார் 7 நொடிக்குள் பயங்கரமான சத்தத்துடன் தகர்ந்தது. … Read more

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தாம்பரம் – செங்கோட்டை, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ள இடையேயான ரயில் சேவைகள் உள்ளிட்ட ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். … Read more

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் நிறைவேற்றம்

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான 2023 -2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளிகளால் இன்றும் (செவ்வாய்க்கிழமை) இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சிகளுக்கு இடையேயான அமளிகளால் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு தொடங்கியது முதல் முடக்கப்பட்டு வருகிறது. நேற்றைய நாள் முழுவதுமான முடக்கத்திற்கு பின்னர் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. கேள்வி நேரத்துடன் தொடங்கிய மக்களவையில் அதானி … Read more

டெல்லி பட்ஜெட் நிறுத்தம்; மக்கள் மேல் என்ன வருத்தம்? பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்!

டெல்லியின் 2023-24 வது நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று மார்ச் 21 அன்று டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்யவிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை டெல்லியின் பட்ஜெட் தாக்கலை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சி விளம்பரங்களுக்காக எவ்வளவு செலவு செய்தார்கள் என்ற விவரத்தை கூறுமாறு கேட்டு இந்த பட்ஜெட்டை தள்ளிவைத்துள்ளனர். முக்கியமாக உள்கட்டமைப்பு செலவுகளை காட்டிலும் விளம்பர செலவுகள் ஏன் அதிகமாக இருக்கிறது என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி … Read more