இமாச்சல் வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில் பாஜக அரசு எதையும் செய்யவில்லை: பிரியங்கா காந்தி சாடல்

சிர்மார்: இமாச்சல பிரதேசத்தின் வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் ஆளும் பாஜக எதையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா குற்றம்சாட்டியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. சீர்மாரில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி வத்ரா பேசியதாவது: “இமாச்சல பிரதேசத்தில் 30 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 15 லட்சம் இளைஞர்கள் வேலை … Read more

சமூக வலைதள தகவல் போர் – சர்வதேச நடவடிக்கைக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு!

சைபர்- குற்றங்கள், சமூக வலைதளங்களின் தகவல் போர் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச சமுதாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் தேசிய ராணுவ கல்லூரியின் 60ஆவது பட்டமளிப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில், பயிற்சி முடித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டங்களையும் அவர் வழங்கினார். விழாவில் … Read more

டெல்லியில் பெண்கள் மதுகுடிப்பது 37% அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றுக்கு பின் டெல்லியில் பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரித்து உள்ளது. டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வரும் நிலையில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அதில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. நாட்டில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பின்பு ஊரடங்கு அமலான சூழலில், டெல்லி பெண்களிடையே மதுபான நுகர்வு அதிகரித்து உள்ளது … Read more

அதிவேகத்தில் மோதிக் கொண்ட இரண்டு பேருந்துகள் … 3 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டம் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 13 வயது சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சம்பா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்துள்ள 7 பேர் வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சம்பா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் பாரத் பூஷன் தெரிவித்தார். முதற்கட்ட … Read more

மேற்கு வங்கத்தை இரண்டாக பிரிக்க சதி: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

மேற்கு வங்க மாநிலத்தை இரண்டாக பிரிக்க சிலர் சதி செய்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடியா மாவட்டம் ரணகாட்டில் இன்று நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது: பாஜக மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை இலக்காகக் கொண்ட குற்றச்சாட்டுகளில், அமைதியின்மையை உருவாக்கி, மாநிலத்தை இரண்டாக பிரிக்க ஒரு பிரிவினர் … Read more

நேருக்கு ந்நெர் மோதிக் கொண்ட கார்கள்… மனம் பதற வைக்கும் CCTV காட்சிகள்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழுக்கூட்டம் நெடுச்சாலை வழியாக திருவனந்தபுரம் நோக்கி இன்று அதிகாலை நான்கு மணி அளவில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஷிப்ட் கார் ஒன்று , கட்டியாங்கோணம் என்னும் பகுதி அருகே வரும்போது அதிவேகத்தால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஷிப்ட் கார் எதிரே வந்த இன்னோவா கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இரு கார்களின் முன்பக்கமும் முழுவதுமாக நொறுங்கின.மேலும் இந்த விபத்தில் இரு வாகனங்களிலாக பயணித்த ஒரு குழந்தை உட்பட ஆறு … Read more

கூடங்குளம் அணுஉலையில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வறிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: கூடங்குளம் அணு உலை விவகாரத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்னும் 2 வாரத்தில் ஒன்றிய அரசு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தர்ராஜன் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகள் சரியாக கையாளப்படாமலும், உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமலும் இருந்து வருகிறது. மேலும், அணுக்கழிவுகளை … Read more

பரபரப்பு.. கடற்கரையில் கரை ஒதுங்கியது பச்சிளம் குழந்தையின் உடல்..!

வீராம்பட்டினம் கடற்கரையில், பச்சிளம் பெண் குழந்தையின் உடல் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவ கிராம கடற்கரையில் பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்று கரை ஒதுங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடற்கரையில் இருந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அந்த குழந்தை … Read more

குஜராத் தேர்தலில் மனைவிக்கு சீட்: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன ரவீந்திர ஜடேஜா

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட தனது மனைவி ரிவாபாவுக்கு வாய்ப்பு அளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜோ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு: “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றதற்காக ரிவாபாவுக்கு வாழ்த்துகள். கடின உழைப்பின் மூலம் நீங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் நினைத்து பெருமைப்படுகிறேன். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்ற … Read more

அமெரிக்க விசா பெறுவதில் 2023-ம் ஆண்டிற்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 2-ம் இடம் பிடிக்கும்: அமெரிக்க தூதரக அதிகாரி தகவல்

டெல்லி: அமெரிக்க விசா பெறுவதில் 2023-ம் ஆண்டிற்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாம் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் அமெரிக்க விசா பெறுவதில் மெக்சிகோ முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறி வருகிறது. இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்க விசா பெறுவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசா வழங்குவதில் அமெரிக்காவிற்கு இந்தியா தான் இப்போது முதலிடத்தில் … Read more