சமூக வலைதளம் மூலம் கிடைத்த நட்பை நம்பியவருக்கு நேர்ந்த அவலம் பாருங்க ..!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் தொழில் அதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவு என்ற இளம் பெண்ணுடன் திடீரென்று பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து போனில் பேசுவது, வீடியோ கால் செய்வது என தங்களது நட்பை அதிகரித்துள்ளனர். இதன் விளைவாக தொழில் அதிபரிடம் அந்த பெண் தனது கணவர் துபாயில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தன்னை தனிமையில் வந்து சந்தியுங்கள் என்று ஆசை வார்த்தை பேசியுள்ளார். அதை நம்பிய … Read more

உ.பி.யில் மது, இறைச்சி பழக்கத்துக்கு அடிமையாகி 250 பெண்களை கடித்த குரங்குக்கு நிரந்தர சிறை

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் மது மற்றும் இறைச்சிப் பழக்கத்துக்கு அடிமையாகி சுமார் 250 பெண்கள் வரை கடித்த குரங்கு ஒன்று கான்பூர் உயிரியல் பூங்காவில் நிரந்தரமாக சிறை வைக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் மிர்சாபூரில் மாந்திரீகம் செய்துவந்த துறவி ஒருவர் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த குரங்குக்கு மது மற்றும் மாமிசப் பழக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் 2018-ல் அவர் இறந்து விட்டார். அத்துறவியிடம் மாந்திரீகம் செய்ய பெரும்பாலும் பெண்கள் வருவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் அவர் இறந்த பிறகு … Read more

ரூ.12,000க்கும் குறைவான சீன போன்களுக்கு தடையில்லை: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: ரூ.12,000க்கும் குறைவான சீன ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுறதா என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கமளித்து உள்ளது. இந்திய செல்போன் சந்தைகளில் சீனா நிறுவனங்களான ரியல்மி, ஓப்போ, விவோ போன்ற செல்போன்கள் அதிகளவில் விற்பனையாகிறது. இந்நிலையில், சீன செல்போன் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அபராதம் விதித்தது. இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் … Read more

தாவூத்தை போட்டு கொடுத்தால் ரூ.25 லட்சம்: தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு

மும்பை: மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் ஷகீல் ஷேக் (எ) சோட்டா ஷகீல், மற்றும் ஹாஜி அனீஷ் (எ) இப்ராகிம் ஷேக், ஜாவித் பாட்டீல் (எ) ஜாவீத் சிக்னா மற்றும் இப்ராகிம் முஸ்தாக் அப்துல் ரசாக் மேமன் (எ) டைகர் மேமன் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் … Read more

தேஜஸ்-1 வெற்றியை தொடர்ந்து தேஜஸ்- 2 ரக போர் விமானம் தயாரிப்பு: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: தேஜஸ் -1 போர் விமானத்தின் செயல்பாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘தேஜஸ் – 2’ ரக போர் விமானங்களை தயாரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக போர் விமானங்கள், கடந்தாண்டு விமான படையில் இணைக்கப்பட்டது. இவற்றின் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளது. மேலும், இவற்றை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த விமான தயாரிப்பு வெற்றி பெற்றதை தொடர்ந்து,  இதற்கு அடுத்த … Read more

அசாமில் 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கரில் பாமாயில் மரங்கள்: ஒன்றிய அரசு இலக்கு

கவுகாத்தி: அசாம் மாநில வேளாண் துறை தகவலின்படி, மாநிலத்தில் 6 பாமாயில் ஆலைகள் அமைப்பற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 3 தொழிற்சாலைகளை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் 2025-2026ம் ஆண்டுக்குள் 2 லட்சம் ஹெக்டேர் (5 லட்சம் ஏக்கர்)  பரப்பளவில் பாமாயில் மரங்கள் வளர்ப்பதற்கு ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாமாயில் மரங்களை வளர்ப்பதற்காக 18 மாவட்டங்களில் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது … Read more

2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதகள்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூரில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பொமாய் பகுதியில் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூட்டின்போது பொதுமக்கள் ஒருவரும் காயமடைந்தார். … Read more

பீகார் அமைச்சர் பதவி விலகல்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அமைச்சரவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த கார்த்திக் குமார் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் மீது 2014ம் ஆண்டு கடத்தல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் கார்த்திக் குமாரை பதவி நீக்க வேண்டும் என்று பாஜ தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, அவரிடம் இருந்த சட்டத்தை துறை பறிக்கப்பட்டு, கரும்பு தொழில்துறை வழங்கப்பட்டது. இருப்பினும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜ போராட்டமும் நடத்தியது. … Read more

உள்நாட்டில் உருவான விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த் இன்று அர்ப்பணிப்பு: கொச்சி விழாவில் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்தை, பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நாட்டிலேயே முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த். கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகமும், கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இதை உருவாக்கி உள்ளன. நாட்டிலேயே இதுவரை கட்டப்பட்ட போர்க்கப்பல்களிலேயே மிகப் பெரியது இதுதான். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் முக்கிய … Read more

’மனைவியை நிரந்தர கவலையாக பார்க்கின்றனர்' – இளைஞர்களை சாடிய கேரள உயர் நீதிமன்றம்!

மனைவியை எப்போதைக்குமான கவலையாக இளைஞர்கள் பார்ப்பதாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் சாடியுள்ளனர்.  இப்போதெல்லாம், இளைய தலைமுறையினர் திருமணத்தைத் தவிர்க்கக்கூடிய ஒரு தீமை என்று நினைக்கிறார்கள். எந்தவிதமான பொறுப்புகளும், கடமைகளும் இல்லாமல் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்க திருமணத்தை வெறுக்கிறார்கள் என இளைஞர் விவாகரத்து கோரிய ஒரு வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. திருமணத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இளைஞர் ஒருவர் விவாகரத்து கோரிய வழக்கு நீதிபதிகள் ஏ முகமது முஸ்டாக் மற்றும் சோபி தாமஸ் … Read more