'க்யூட்டா' இருக்க காசு கட்டனுமா? இண்டிகோ பாசஞ்சரின் ட்வீட்டால் சலசலப்பு!

ட்ரெயின், ஃப்ளைட், பஸ் போன்ற பொது போக்குவரத்து சேவைகளின் போது நிகழக்கூடிய சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்த பதிவுகள் அவ்வப்போது சமூக வலைதள பதிவுகள் மூலம் காணக் கிடைக்கிறது. அந்த வகையில், பயணி ஒருவர் இண்டிகோ விமானத்தில் பயணித்ததற்காக விதிக்கப்பட்ட கட்டண விவரங்கள் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதில், தனக்கு விதிக்கப்பட்ட ஃப்ளைட் கட்டணத்தில் க்யூட் சார்ஜ் எனக் குறிப்பிட்டு 100 ரூபாய் வசூலிக்கப்பட்டதை கோடிட்டு காட்டி, “வயதாக வயதாக நான் … Read more

விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு

புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் லண்டன் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றாா். இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். 2019-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய குற்றவாளியாக அவர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். … Read more

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.சென்னை  உயர்நீதிமன்ற உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளைப் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் எனக் கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

ஒரு ஆட்டோல இத்தனை பேரா? மலைத்துப்போன போலீஸ்.. உ.பியில் நடந்த சுவாரஸ்யம்!

ஷேர் ஆட்டோக்களில்தான் அதிகபட்சம் ஓட்டுநர் உட்பட 10 முதல் 12 பேர் பயணிப்பது வழக்கம். ஆனால், சாதாரண ஆட்டோவில் கிட்டத்தட்ட 27 பேர் பயணித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது. அதன்படி, உத்தர பிரதேசத்தின் ஃபதேப்பூர் பகுதியில் உள்ள பிந்த்கி கொட்வாலி அருகே ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்ததை அறிந்த போலீசார் அதனை மடக்கி நிறுத்தியிருக்கிறார்கள். அப்போது, ஆட்டோவில் இருந்தவர்களை இறங்கும்படி போலீசார் கூறியதும் நண்டு சிண்டு முதல் ஒருவர் பின் ஒருவராக ஓட்டுநர் இல்லாமல் 26 … Read more

ராணுவத்தில் ஷார்ட் சர்வீஸ்: ஷின்சோ அபே கொலையை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் திரிணமூல் காங்கிரஸ்

கொல்கத்தா: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற இளைஞர் ராணுவத்தில் குறுகிய கால சேவையில் இருந்தவர். இதனை சுட்டிக்காட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு ராணுவத்தில் அக்னி பாதை போன்ற குறுகிய கால சர்வீஸை அனுமதிப்பதில் உள்ள பாதகங்களை இதன் மூலம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனை நிராகரித்துள்ள பாஜக மேற்குவங்க மாநிலத் தலைமை, இந்தியாவில் எந்த ஒரு முன்னாள் ராணுவ வீரரும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை என்று சுட்டிக் … Read more

காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் 19ம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: மேகதாது அணை வழக்கில் தமிழ்நாடு அரசின் முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றது. காவிரி ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் மேகதாது அணையின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அந்த விசாரணை நிலுவையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த விவகாரத்தை காவிரி ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்று அந்த மனுவில் … Read more

விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு தப்பிச்சென்ற தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கான தண்டனை விவரத்தை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றாா். அவா் நீதிமன்ற உத்தரவை மீறி தனது குடும்பத்தினருக்கு 40 மில்லியன் டாலா் பரிவா்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை … Read more

உ.பி. சட்டமேலவையில் காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினரும் இல்லாத நிலை

புதுடெல்லி: உத்தரபிரதேச சட்ட மேலவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் இல்லாத நிலை வரும் 13-ம் தேதிக்கு பிறகு ஏற்பட உள்ளது. இதுபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) பலம் வெறும் 1 ஆக சரிய உள்ளது. உ.பி. சட்டமேலவையில் 10 எம்எல்சிக்களின் பதவிக் காலம் வரும் புதன்கிழமை (ஜுலை 13) முடிவடைகிறது. இதில் பாஜக 2, அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி 5, மாயாவதியின் பிஎஸ்பிக்கு 3, காங்கிரஸுக்கு 1 என 10 பேரின் பதவிக் … Read more

காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கோரிய வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வரும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கோரிய வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. விவாதிக்க தடை கோரி தமிழக அரசு தொடந்த மனு அடுத்த செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா தரப்பு வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

ஷின்சோ அபே கொலையும், அக்னிபாத் திட்டமும் – எச்சரிக்கை விடுக்கும் திரிணமூல் காங்கிரஸ்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை செய்யப்பட்டதற்கும், அக்னிபாத் திட்டத்துக்கும் சம்பந்தப்படுத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. உடல்நலக்குறைவு காரணமாக தனது பிரதமர் பதவியை 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ராஜினாமா செய்தார். எனினும், கட்சி நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனிடையே, கடந்த 8-ம் தேதி ஜப்பான் மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஷின்சோ அபேவை ஒருவர் சுட்டுக் கொன்றார். இந்த விவகாரம் … Read more