தனக்கு 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது : ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

தனக்கு 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் முகாமிட்டுள்ள அவர் விரைவில் மும்பை செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் விருப்பத்துடனே கவுகாத்தி வந்ததாகவும் விளக்கமளித்தார். கவுகாத்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் பேசி வருவதாக உத்தவ் தாக்கரே தரப்பு கூறும் நிலையில், அந்த எம்.எல்.ஏ.க்கள் யார் என கூறுமாறும் ஷிண்டே சவால் விடுத்தார். தங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்கரே தரப்பு இவ்வாறு பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். Source link

பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஈபிஸ் தரப்பு மேல்முறையீடு

டெல்லி: பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஈபிஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பானிபூரி விற்பனைக்கு தடை.. மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

காலரா அதிகரித்து வருவதாலும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் பானியில் காலரா பாக்டீரியா இருப்பதாலும், காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானிபூரி விற்பனைக்கு தடை விதித்து லலித்பூர் மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் கடந்த சில நாட்களாக காலராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பானிபூரியில் பயன்படுத்தப்படும் பானியில் காலரா பாக்டீரியா இருப்பதாகக் கூறி, பானிபூரி விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்த லலித்பூர் மாநகராட்சி முடிவு செய்தது. மாநகரக் காவல்துறை தலைவர் சீதாராம் ஹச்சேதுவின் … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் திட்டவட்டம்..!

ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு கொரோனா பரவல் காரணமாக அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்குழுவில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அதுபோன்று ஏதாவது நடக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பும் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுக்குழுவை வேறு … Read more

ONGC: அரபிக்கடலில் விழுந்த ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் – 4 பேர் உயிரிழப்பு!

அரபிக்கடலில் ஓ.என்.ஜி.சி. பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது விபத்தானது. இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர். ஓ.என்.ஜி.சி. எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் அரபிக் கடலில் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது. அவை கடலுக்கு அடியில் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்ய பயன்படுகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் இருந்து அரபிக் கடல் வழியாக ஓ.என்.ஜி.சி. … Read more

பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கிய இரண்டே நாட்களில் சொமோட்டோ நிறுவனத்திற்க்கு ஒரு பில்லியன் டாலர் இழப்பு..

பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கிய இரண்டே நாட்களில் சொமோட்டோ நிறுவனம், இந்திய பங்குச்சந்தையில் ஒரு பில்லியன் டாலர் வரை இழப்பை சந்தித்துள்ளது. பங்குச்சந்தையில் ஏற்கனவே சரிவை கண்டு வரும் சொமோட்டோ நிறுவனம், கடந்த வெள்ளியன்று மளிகை பொருட்கள் டெலிவரி செய்து வரும் பிளிங்கிட் நிறுவனத்தை 4 ஆயிரதது 447 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனால், சொமோட்டோ நிறுவனத்தின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் முன்வராததால், அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று மட்டும் 8 புள்ளி 2 விழுக்காடு வரை சரிந்தன. Source … Read more

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம்

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாவில் தற்போது தலைதூக்கியுள்ள கொரோனா பரவல் காரணமாக ஒன்றிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் வலியுறுத்தி வருகிறது. அதனை ஒரு பகுதியாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது, நாட்டில் வரும் மாதங்களில் பண்டிகை, திருவிழாக்கள், யாத்திரை நடைபெறவுள்ளது. … Read more

ரிலையன்ஸ் 3-வது தலைமுறை: மகனுக்கு வழி விட்டார் முகேஷ் அம்பானி: ஜியோ தலைவராக ஆகாஷ் நியமனம்

மும்பை: நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடுத்தடுது்து மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் திருபாய் அம்பானி தொடங்கி 3-வது தலைமுறை தொழில் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய பொருளாதார சந்தையில் அதிக பங்கு வகிக்கும் தொழில்களான எண்ணெய், எரிவாயு மற்றும் டெலிகாம் ஆகியவற்றில் கோலோச்சும் இந்தியாவின் பெரும்பணக்காரர் அம்பானி. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பலவற்றிலும் … Read more

இந்தியாவில் மீண்டும் கட்டுப்பாடுகள்? – மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்!

கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உட்பட நாடு முழுவதும், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலங்களின் தலைநகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து தமிழகம் உட்பட பல்வேறு … Read more

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி விலகல்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் விலகலை அடுத்து நிறுவனத்தின் புதிய தலைவராக அவரது மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  Source link