‘உலகை வழிநடத்தும் தலைவர்’ – வைரலான பிரதமர் மோடியின் ‘குவாட் உச்சி மாநாடு’ புகைப்படம்

புது டெல்லி: ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார். அங்கு நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவரது புகைப்படம் ஒன்று இணையவெளியில் வைரலாகி உள்ளது. ஜப்பான் நாட்டில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு குறித்து பல்வேறு … Read more

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் ரேன்சம்வேர் தாக்குதலால் விமானங்களின் பயணம் தாமதம்.!

இந்தியாவின் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் மென்பொருள் அமைப்புகள் மீது ரேன்சம்வேர் தாக்குதல் முயற்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தாக்குதல் முயற்சி நடைபெற்றதால், காலை புறப்பட வேண்டிய சில விமானங்களின் பயணம் தாமதமானது. தற்போது, பிரச்சனை சரிசெய்யப்பட்டு விமானப்போக்குவரத்து சீராகியுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. Source link

காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில்சிபல் திடீர் விலகல்

லக்னோ: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கபில்சிபல். காங்கிரஸ் தலைமையை விமர்சித்த 23 அதிருப்தி தலைவர்களில் இவர் முக்கியமானவர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் நடைமுறையில் மாற்றம் தேவை, காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் யாரும் தலைமை வகிக்க கூடாது என்று கபில்சிபல் தெரிவித்து இருந்தார். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்தே அவர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வந்தார். சமீபகாலமாகவே சோனியா காந்தியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். 2024-ம் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சோனியா … Read more

இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மும்பை மாநகர காவல் அறிவிப்பு

மும்பை: இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மும்பை மாநகர காவல் அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இதனால் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனடிப்படையில் மும்பையில் இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மும்பை மாநகர காவல் தெரிவித்துள்ளது.  இந்த விதி 15 நாட்களில் அமலுக்கு வரும் எனவும் விதியை மீறினால் … Read more

அடுத்தது சர்க்கரை: சமையல் எண்ணெய், கோதுமையை தொடர்ந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

புதுடெல்லி: கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமையல் எண்ணெய், கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை போல சூழலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபல் ராஜினாமா!

காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். கடந்த 16ஆம் தேதியே கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அக்கட்சித் தலைவர் அகிலேஷ் … Read more

மும்பையிலும் அமலுக்கு வருகிறது கட்டாய ஹெல்மெட்…!

மும்பையிலும் அமலுக்கு வருகிறது கட்டாய ஹெல்மெட் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி மும்பையிலும் அமலுக்கு வருகிறது அடுத்த 15 நாட்களில் இந்த விதி அமலுக்கு வரும் என மும்பை போக்குவரத்துப் போலீசார் அறிவிப்பு ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.500 அபராதம், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து – மும்பை போக்குவரத்து போலீசார் Source link

ஒடிசா பேருந்து விபத்தில் 6 பேர் பலி- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்

மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் உகம்பூர் பகுதியை சேர்ந்த 60 பேர் பேருந்தில் சுற்றுலா சென்றனர். ஒடிசா மாநிலம் கலிங்கா சாடி அருகே அந்த பேருந்து சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.   இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். … Read more

அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி பயங்கர கலவரம் ஆந்திராவில் அமைச்சர் அலுவலகம், எம்எல்ஏ வீடு தீ வைத்து எரிப்பு: 2வது நாளாக 144 தடைநீடிப்பு; இணையதள சேவை துண்டிப்பு

திருமலை: அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி ஆந்திராவில் நேற்று நடந்த பயங்கர கலவரம் காரணமாக இன்று 2வது நாளாக 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்களை பிரித்து கூடுதலாக 13 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த அமலாபுரத்தை, மாவட்ட தலைநகராக வைத்து கோணசீமா மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் சூட்ட அரசு முடிவு செய்து … Read more

மங்களூரு மசூதிக்குள் கோயில் போன்ற அமைப்பா? பதற்றத்தால் 144 தடை அமல்

மங்களூருவில் உள்ள ஒரு மசூதிக்குள் கோயில் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டதாக வெளியான தகவலால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மலாலி பகுதியில் ஜும்மா மஸ்ஜித் என்ற பெயரில் மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியை புனரமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அந்த மசூதிக்கு உள்ளே இந்து கோயிலை போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக … Read more