'அந்தமான் சிறையிலிருந்து பறவையில் பறந்தார் சாவர்க்கர்' – கர்நாடக 8ஆம் வகுப்பு பாடப் புத்தக தகவலால் சர்ச்சை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வி.டி.சாவர்க்கர் பற்றி ஒரு கருத்து இடம்பெற்றுள்ளது. அந்தக் கருத்தால் புதிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அந்தப் பாடப் புத்தகத்தில் வி.டி.சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது சிறைக்கு வந்த பறவையின் மீதேறி தன் தாய்நாட்டை தரிசிக்க செல்வார் என்று குறிப்பிடப்பட்டிக்கிறது. குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் இடம்பெற்றிருந்த தகவல்: “சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால் அந்த அறைக்கு அன்றாடம் புல்புல் பறவைகள் வந்து செல்வதுண்டு. சாவர்க்கர் … Read more

சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டில் அரசியல்: எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு!

ஒன்றிய அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய ஏஜென்சிகள் பல்வேறு மாநிலங்களில் ரெய்டுகளை நடத்தி வருகின்றன. ஆனால் இந்த ரெய்டுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் நடப்பதில்லை என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. பாஜக அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் அரிசி ஆலைகள், குடோன்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்படுகிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில், இந்த ரெய்டுகள் நடத்தப்படும் நேரம் அரசியல் உள்நோக்கத்துடன் இது நடைபெறுகிறதா என்ற … Read more

பறவையின் மீது ஏறி பறந்து வந்தாரா சாவர்க்கர்? கர்நாடக பாடநூலால் எழுந்த சர்ச்சை

சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக பா.ஜ.க தொடர்ந்து  முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் வரலாற்றை மாற்ற நினைப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் சாவர்க்கரின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததோடு, நாட்டின் முதல் பிரதமரான நேருவின் புகைப்படம் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து, ஷிவமோகாவில் அமீர் அகமது நகரில் உள்ள பள்ளிவாசல் அருகில், சாவர்க்கரின் பதாகைகளை வைக்க முயன்றபோது எழுந்த மோதலில் வன்முறை … Read more

வேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை தாண்டி பல முறை பல்டி அடித்து விபத்து!

மத்தியப் பிரதேசத்தில் நாக்பூர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை தாண்டி பல முறை பல்டி அடித்து விபத்துக்குள்ளானது. மழை நீர் தேங்கியிருந்த அந்த சாலையில் மிக வேகமாக வந்த போது, அந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நெடுஞ்சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் பலமுறை பல்டி அடித்த அந்த கார் அங்கு மேய்ந்துக்கொண்டிருந்த பசுவுக்கு அருகில் போய் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த காரில் சென்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். … Read more

கேரளாவில் தொடர்மழையால் தொடுபுழா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழப்பு

இடுக்கி: கேரளாவில் தொடர்மழை காரணாமாக தொடுபுழா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் பருவமழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கிழக்கு சரிவு பகுதிகளில் அதிக அளவில் மலை பெய்து வவருகிறது. மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இடுக்கி, கோட்டையம், காசர்கோடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை தொடுபுழாவில் சோமன் … Read more

சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ வேகத்தை தாண்டியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

புதுடெல்லி: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ வேகத்தை தாண்டியது. சிறு குலுங்கல் கூட இல்லாமல் ரயில் சென்றதால், தண்ணீர் நிரப்பப் பட்டிருந்த கிளாஸில் இருந்து ஒரு சொட்டு கூட கீழே சிந்தவில்லை. அந்த அளவுக்கு இதன் பயணம் சொகுசாக உள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேகரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்தரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் … Read more

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இஸ்லாம் மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவது சரியா, தவறா? இது தொடர்பான சர்ச்சை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. இது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. கர்நாடகாவின் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள கல்வி நிலையத்தில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வர வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தியது. அங்கு பயின்று வந்த முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து வந்ததற்கு நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள் … Read more

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா..!

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை முதலில் விளையாட பணித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. … Read more

ரஃபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ரஃபேல் ஒப்பந்தத்தை மீண்டும் விசாரிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மகளை காக்க காதலனின் ஆணுறுப்பை துண்டித்த தாய்.. உ.பியில் நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி!

பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதுவும் உற்றார் உறவினர்களாலேயே இந்த பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவது தொடர்ந்து பொதுவெளியில் அம்பலமாகி வருகிறது. அந்த வகையில், தனது மகளை தன்னுடன் லிவ்-இன் வாழ்க்கையில் இருந்து வந்த நபரே பாலியல் ரீதியில் அணுக முயற்சித்ததை அறிந்த தாய் அந்த நபரின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது. லக்கிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள மஹெவகஞ்ச் பகுதியில் தனது 14 … Read more