சீன எல்லையின் மலைப் பகுதிகளில் இலகு ரக பீரங்கி வாகனம், ட்ரோன்களை பயன்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் தற்போது அச்சுறுத்தல் நிலவுகிறது. எதிர்காலத்தில் இந்த அச்சுறுத்தல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கிழக்கு லடாக் பகுதியில் டி-90 மற்றும் டி-72 ரக பீரங்கி வாகனங்களை இந்திய ராணுவம் கொண்டு சென்றுள்ளது. இவை ஒவ்வொன்றும் 40 முதல் 50 டன் எடை உள்ளன. சில பீரங்கி வாகனங்கள் கைலாஷ் மலைப் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பீரங்கி வாகனங்கள் குறிப்பாக சமவெளிப் பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகளின் போர் நடவடிக்கைகளுக்காக … Read more

ஆட்சிக்கு சிக்கல்; முதல்வர் ஷாக்; ஆளுநர் கையில் பூதக்கண்ணாடி!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரது தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் மத்தியிலும் பலத்த ஆதரவு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கி … Read more

சோனியா காந்தி தலைமையில் கட்சியின் உயரதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் உயரதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது. வெளிநாடு சென்றுள்ள சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணை கூட்டத்தில் இறுதி செய்யப்பட தகவல் வெளியாகியுள்ளது.

அக்.17ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

காங்கிரஸ் தலைவர் தேர்தலை அக்டோபர் 17ஆம் தேதி நடத்துவது என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது. இக்கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி … Read more

183 கி.மீ. வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரயில்… துளியும் சிந்தாத தண்ணீரின் வைரல் வீடியோ!

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு கொண்டாட்டங்களையும், முன்னெடுப்புகளையும் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக நாட்டின் முக்கியமான 75 நகரங்களை ஒன்றிணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற ரயில் சேவையை தொடங்க அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த வந்தே பாரத் ரயில் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வந்தே பாரத் ரயில்கள் முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது தான். மேலும் வந்தே பாரத் ரயில் ஒரு சொகுசு ரயில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடைய … Read more

அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல்; டெல்லியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.!

டெல்லி: அக்டோபர் 17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா … Read more

“மேரேஜ்ஜை தாமதப்படுத்தியதால் காதலனை கொன்றுவிட்டேன்”.. போலீசில் தானாக வந்து சரணடைந்த பெண்

லிவ்-இன் வாழ்வில் இருந்து வந்த தன்னுடைய காதலனை கொன்றுவிட்டதாக மும்பையின் பொவாய் பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் போலீசிடம் சரணடைந்திருக்கிறார். ரம்ஜான் ஷேக் என்ற நபரை திருமணம் செய்துக் கொள்வதாக இருந்த நிலையில் அவர் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததால் ஸொரா ஷா என்ற அந்த பெண்  ஷேக்கை கொன்றதாக கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நேற்று (ஆக.,27) நடந்திருக்கிறது. மும்பையின் பொவாய் பகுதியில் உள்ள ஃபில்டர்படா பகுதியில் இறந்த ரம்ஜான் ஷேக்கும் ஸொரா ஷாவும் … Read more

ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 12 யானைகள்

ராஞ்சி: மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி சக்திபூஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்றது. இந்த ரயில் மாலை 6 மணி அளவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலாமுபுலிகள் காப்பகம் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் சென்றது. அப்போது சற்று தொலைவில் யானைகள் கூட்டமாக தண்டவாளத்தை கடப்பதை ரயில் ஓட்டுநர் ஏ.கே.வித்யார்த்தி பார்த்துள்ளார். உடனே துரிதமாக செயல்பட்டு எமர்ஜென்சி பிரேக்கை பிடித்துள்ளார். இதில் யானைகளுக்கு 60 மீட்டர் முன்பாக ரயில் நின்றுவிட்டதால் 12 யானைகள் … Read more

அக்.17 காங்கிரஸ் தலைவர் தேர்தல், அக்.19 வாக்கு எண்ணிக்கை முடிவுகள்…! – காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு..!

அக்டோபர் 17ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக தகவல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள், அக்டோபர் 19ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது .காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதால் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இணையவழியில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி … Read more

குஜராத்தின் பூஜ் நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.!

குஜராத்: பிரதமர் மோடி குஜராத்தின் பூஜ் நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். பூஜ், குஜராத்தின் பூஜ் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் 52-வது குடியரசு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை நிலைகுலைய செய்தது. 2 நிமிடங்களே நீடித்த இந்நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட விளைவுகள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. இதில் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் … Read more