‘சொத்துகள் மறுபங்கீடு’ – சாம் பித்ரோடா கருத்தும், பாஜக கடும் எதிர்வினையும்

புதுடெல்லி: இந்திய தேர்தல் களத்தில் காரசார விவாதப் பொருளாகியுள்ளது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ‘சொத்துகள் மறுபங்கீடு’ தொடர்பான வாக்குறுதியும் அதன் மீதான பிரதமர் மோடியின் விமர்சனமும். கடந்த வாரம் ராஜஸ்தானில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சி இந்துக்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடும்” என்று விமர்சித்திருந்தார். அதற்கு காங்கிரஸ், இண்டியா கூட்டணிக் கட்சிகள் பரவலாக எதிர்வினையாற்றி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அயலக பொறுப்பாளரான சாம் பித்ரோடா ‘சொத்துகள் மறுபங்கீடு’ குறித்த காங்கிரஸ் தேர்தல் … Read more

‘நிபந்தனையற்ற பொது மன்னிப்பு’ – பெரிய சைஸில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து செய்தித்தாள்களில் பெரிய சைஸில் மன்னிப்பு விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்டுள்ளது பதஞ்சலி நிறுவனம். மன்னிப்பு விளம்பரத்தில், “மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதை அடுத்து, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், ஆணைகளுக்கு இணங்காததற்கு அல்லது கீழ்ப்படியாததற்கு தனிப்பட்ட முறையிலும் நிறுவனத்தின் சார்பாகவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், “நிபந்தனையற்ற பொது மன்னிப்பு” என்பது முன்பை விட பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் அந்த … Read more

காங். ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பதுகூட குற்றமாக உள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்கள் கேட்பது கூட குற்றமாக இருந்து என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 26) நடைபெற உள்ளது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மதோபூர் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் சிலநாட்களுக்கு முன் கடைக்காரர் ஒருவர் அனுமன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்ததற்காக கொடூரமாக … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான கேஜ்ரிவால், கவிதாவின் காவல் மே 7 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திஹார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டது. டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். டைப்-2 நீரிழிவு நோயாளியான … Read more

லாலுவை பல குழந்தைகள் பெற்றவர் என விமர்சித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி பதிலடி

புதுடெல்லி: பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலுவுக்கு ஏழு மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ராப்ரி தேவியும் பிஹார் முதல்வராக இருந்துள்ளார். இந்தமுறை மக்களவைத் தேர்தலில் லாலுவின் மூத்த மகளான மிசா பாரதியும், இரண்டாவது மகளான ரோஹினி ஆச்சார்யாவும் போட்டியிடுகின்றனர். இச்சூழலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார், கத்தியார் தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தபோது லாலுவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் … Read more

“மிகவும் வருந்துகிறேன்… நாங்கள் துணை நிற்போம்…” – மாணவி நேஹா தந்தைக்கு சித்தராமையா ஆறுதல் 

பெங்களூரு: பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி நேஹா ஹிரேமத்வின் தந்தையிடம் தொலைப்பேசியில் பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுடன் நாங்கள் துணை நிற்போம்” ஆறுதல் தெரிவித்தார். நேஹா ஹிரேமத் கர்நாடகாவின் கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃப‌யாஸ் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் … Read more

மோடியின் ராஜஸ்தான் பேச்சு: தேர்தல் ஆணையம் மீது பினராயி விஜயன் கடும் விமர்சனம்

கேரளா: “கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது” என்று முஸ்லிம்கள் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்கிழமை பேசுகையில், “முஸ்லிம்கள் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு தேர்தல் ஆணையம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படாதது துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை மவுனம் காத்து வருகிறது. இது … Read more

ரூ.5,785 கோடி சொத்து மதிப்பு – ஆந்திராவின் பணக்கார வேட்பாளர் இவர்தான்!

குண்டூர்: ஆந்திராவில் குண்டூர் மக்களவைத் தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளரான டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் தனக்கு மொத்தம் ரூ.5,785.28 கோடி குடும்பச் சொத்துகள் இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஒரு சேர நடைபெற இருக்கிறது. இரு தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் மே மாதம் 13-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (ஏப்ரல் 25) முடிவடைகிறது. இந்நிலையில், முக்கிய வேட்பாளர்கள் … Read more

“தேசத்துக்காக மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் எனது அம்மா” – பிரியங்கா காந்தி பதிலடி

பெங்களூரு: தேசத்துக்காக மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் தனது அம்மா என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் தெரிவித்தது. “நாம் ஏன் ராமரை வணங்குகிறோம். நேர்மையான வழியில் பயணித்து அவர் மக்களுக்காக சேவை செய்தவர் என்பதால். மகாத்மா காந்தியும் அதே வழியை தேர்வு செய்து பயணித்தவர். அவரை துப்பாக்கி குண்டுகள் துளைத்த போதும் ‘ஹே ராம்’ என்று தான் சொன்னார். ஆனால், … Read more

“பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது” – பிரதமர் மோடி

ஜெய்ப்பூர்: “பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்தது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ராஜஸ்தானின் டோங் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மதத்தின் அடிப்படையில் நிறுத்தவோ, பிரிக்கவோ அனுமதிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது உரை ஒன்றில், நாட்டின் வளங்களை பெறுவதில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை … Read more