பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு.!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு அளித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக பழங்குடியினப் பெண் ஒருவர் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்க உள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் சிபுசோரன் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வைக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் இந்த முடிவு காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்..!!

டெல்லி: சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநில கல்லூரி 3வது, லயோலா கல்லூரி 4வது இடம் பிடித்துள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரிக்கு 6ம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

தாழ்ந்த சாதி எது? – சேலம் பெரியார் பல்கலை. தேர்வில் கேட்ட கேள்வியால் சர்ச்சை !

தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு 2ஆம் ஆண்டு மாணவர்களுக்குதேர்வு நடைபெற்றது. இதில் வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனிடையே இந்த கேள்வி தற்போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தமிழகத்தில் இருந்து பல்வேறு … Read more

மகளிர் கல்லூரியில் 2,000 புத்தகங்கள், 20 மின் விசிறி திருடிய இளைஞர்கள் !!

சென்னை பிராட்வே சாலையில் பாரதி மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சென்னையில் செயல்படும் கல்லூரிகளில் பிரதான கல்லூரிகளில் இதுவும் ஒன்று. ஏராளமான மாணவிகள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். அமைச்சர் பி.கே.சேகர்பாபு வருகையை தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அப்போது, கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரி நேரடியாக இயங்காமல் இருந்ததை பயன்படுத்தி, கல்லூரி வளாகத்தில் இருந்த 85க்கும் மேற்பட்ட மின்விசிறி … Read more

இந்தியா – சீன எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – தலாய் லாமா வலியுறுத்தல்!

இந்தியா – சீன எல்லைப் பிரச்னையை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு நாட்கள் பயணமாக ஜம்முவில் இருந்து லடாக் செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிழக்கு லடாக் பிரச்னையில் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என்றும் தலாய் லாமா தெரிவித்தார். Source link

பல்கலைக்கழக விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றதை அரசியலாக்க வேண்டாம்: தமிழிசை பேட்டி

புதுச்சேரி: பல்கலைக்கழக விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றதை அரசியலாக்க வேண்டாம் என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தவே மதுரை காமராஜர் பல்கலை விழாவில் எல்.முருகன் பங்கேற்றார். பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதே ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுவதாக தமிழிசை கூறினார்.

அண்ணாமலை – உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு..!

முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவியும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தாயாருமான புஷ்பா நேற்று காலமானார். அவருடைய உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று புஷ்பா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி … Read more

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் தமிழர் மரணம்..?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றிரவு சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) என்பவர் உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்க, வரிசையில் உள்ள கழிவறையில் உயிரிழந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட சொற்கள் பட்டியல் வெளியீடு: எதிர்க்கட்சிகள் புகாருக்கு சபாநாயகர் விளக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எம்.பி.க்களின் உரைகளில் தடை செய்யப்பட்ட புதிய சொற்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜுலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் புதிய குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவை செயலகம் சார்பில், ‘தடை செய்யப்பட்ட சொற்கள் 2021’என்ற … Read more

பிரதமர் மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் – 6 பேரிடம் தீவிர விசாரணை..!

கடந்த 12 ஆம் தேதி பாட்னா சென்ற பிரதமர் மோடியை குறிவைத்த தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தீவிரவாத செயல்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியதாகவும் பீகார் போலீசார் ஆறு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாட்னா வந்த பிரதமர் மோடியை குறிவைத்தது அம்பலமாகியுள்ளது. உள்ளூர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து கத்திகளையும் வாள்களையும் பயன்படுத்தி மதக்கலவரத்தை தூண்ட பயிற்சி அளித்து வந்ததாகவும் அந்த ஆறு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. … Read more