மேற்கு வங்க டிஜிபி, 6 மாநில உள்துறைச் செயலர்களை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை ஒட்டி மேற்கு வங்க மாநில காவல் துறை டிஜிபி மற்றும் குஜராத், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த உள்துறைச் செயலாளர்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேற்கு வங்க மாநில புதிய டிஜிபியாக நியமிக்கும்படி தகுதி கொண்டவர்களின் பரிந்துரைப் பட்டியலை இன்று (மார்ச் 18) மாலை 5 மணிக்குள் அனுப்பும்படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் … Read more

EC Order: 7 மாநிலங்களில் அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்! அதிருப்தியில் ஆளும் கட்சிகள்

Election Commission Latest Order : தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் மேற்கு வங்க மாநில ஆளும் கட்சி அதிருப்தி, பாஜகவின் தேர்தல் உத்தி என குற்றச்சாட்டு!

”சவாலை ஏற்கிறேன்!” – பிரதமர் மோடி எதிர்வினை @ ராகுல் காந்தியின் ‘சக்தி’ பேச்சு

ஜக்டியால்: “நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பாஜகவை எதிர்த்து போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம்” என்று ராகுல் காந்தி என்று ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் இன்று (திங்கள்கிழமை) நடந்த பொதுக்கூட்டத்தில் இதற்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி “நாங்கள் சக்தியை வணங்குகிறோம். அவர்கள் சக்தியை அழிக்க சபதம் ஏற்கிறார்கள். அந்த சவாலை நான் ஏற்கிறேன். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று … Read more

ஆந்திராவில் புதிய கூட்டணி அமைந்தாலும் ஜெகனை ‘தாக்காத’ பிரதமர் மோடி!

பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும், ஜன சேனாக் கட்சியும் இணைந்ததை அடுத்து சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் நரேந்திர மோடி ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டனர். ஆந்திரப் பிரதேசத்தில் வரவிருக்கும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பிரச்சாரத்தின் தொடக்கப் படி இதுதான். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் சேர்ந்தே நடக்கின்றன. மே 13-ம் தேதி வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ‘மக்களின் குரல்’ … Read more

என்டிஏவுக்கு அமோக ஆதரவு @ தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் என்டிஏவுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (திஙகள்கிழமை) பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “நான் இன்று ஜக்டியால், ஷிவ்மோகாவில் பிரச்சாரம் செய்கிறேன். மாலை கோவையில் சாலைப் பேரணியில் பங்கேற்கிறேன். தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் என்டிஏவுக்கு பலத்த ஆதரவு இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். I will be … Read more

தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் வெளியிடுக: எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர்கள் பெயர், பத்திர எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று அந்த உத்தரவில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் மறைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும், குறிப்பாக ஒவ்வொரு … Read more

வாட்ஸ்அப், பேஸ்புக் வழியாக அரசியல் கட்சிகள் பிரச்சாரம்

பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. தற்போதையை டிஜிட்டல் காலகட்டத்தில் கட்சிகள், தங்கள் பிரச்சாரத்துக்கு சமூக ஊடகங்களையே பெரிதும் நம்பியுள்ளன. பாஜகவும் காங்கிரஸும் வாட்ஸ்அப் குழுக்கள் வழியாக மக்களை சென்றடைவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் 50 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ‘பிரதமரிடமிருந்து கடிதம்’ என்ற செய்தியை வாட்ஸ்அப் பயனாளர்கள் ஒவ்வொருக்கும் பாஜக அனுப்பி வருகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளைப் பட்டியலிட்டு, … Read more

‘இவிஎம் 100 சதவீதம் பாதுகாப்பானவை’

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) 100 சதவீதம் பாதுகாப்பானவை என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: தேர்தலில் தாங்கள் விரும்பியபடி வெற்றியடையவில்லை என்ற ஆதங்கத்தால்தான் பலர் இவிஎம் மேல் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். உண்மையில் அவை 100 சதவீதம் பாதுகாப்பானவை. அதிலிருக்கும் தரவுகளை யாரும் மாற்ற இயலாது. இவிஎம்கள் மற்றும் விவிபேட்கள் தவறானது எனக் கூறுபவர்களின் எண்ணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல … Read more

தலைப்பு செய்திக்காக பணியாற்றுவதில்லை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய கருத்தரங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டு பேசியதாவது: இது போன்ற கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் நான் பங்குபெறும்போது, தலைப்பு செய்திகளில் இடம் பெறும் விஷயங்களை நான் பேச வேண்டும் என இங்குள்ளவர்கள் எதிர்பார்ப்பர். ஆனால், நான் திட்டங்களின் கெடு தேதி (டெட்லைன்) நோக்கி பணியாற்றும் நபர். தலைப்பு செய்தியில் இடம்பெற பணியாற்றும் நபர் அல்ல. ஆகையால், நான் கூறும் சில விஷயங்கள், ஊடகத்தினருக்கு ஈர்ப்பு இல்லாததாக இருக்கலாம். மத்திய … Read more

பாஜக ஆட்சி அமைந்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்: ஆந்திராவில் பிரதமர் மோடி உறுதி

சிலகலூரிபேட்டா: மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி இருந்தால், மாநிலத்தின் வளர்ச்சி நன்கு அமையும் என்று ஆந்திராவில் நடந்த தேர்தல்பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனாகட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். அப்போது … Read more