முன்னாள் முதலமைச்சர் மகள் கைது… மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி!

MLC Kavitha Arrested By ED Latest News: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானாவின் மேலவை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சரும் கே.சி.சந்திரசேகர ராவின் மகளுமன கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.

மம்தா பானர்ஜி காயம்: விசாரணைக்கு மேற்கு வங்க பாஜக தலைவர் வலியுறுத்தல்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மஜும்தார் வலியுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகந்த மஜும்தார், “மம்தா பானர்ஜி எங்கள் முதல்வர். எனவே, அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்பது எனது முதல் கருத்து. இரண்டாவது, நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அவரை யாரோ பின்னால் இருந்து தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்றைய அறிக்கையில், பின்னால் … Read more

CAA இந்தியாவின் உள்விவகாரம், எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் -அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

India’s Reacts To America: குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம். அதைப்பற்றி அமெரிக்கா தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் ஆர்ப்பாட்டம் @ டெல்லி காங்கிரஸ் தலைமையகம்

டெல்லி: பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த அகதிகள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை கடந்த 2019-ல் நிறைவேற்றிய மத்திய அரசு, கடந்த திங்கள் கிழமை அதனை அமல்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மத ரீதியாக … Read more

2024 மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு; தேர்தல் ஆணைய சமூகவலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் அட்டவணை, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை ஆகியனவற்றை நாளை (மார்ச் 16) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடயிருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இது தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் … Read more

காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. மக்களவைத் தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்

Lok Sabha Election 2024 Date: மக்களவைத் தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்?- எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தேர்தல் பத்திர விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றின் பிரத்யேக எண்களை வெளியிடாதது ஏன் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாண்ட் எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. மேலும், இன்றைய விசாரணையின்போது எஸ்பிஐ வங்கி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகததற்கும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் … Read more

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்! காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி வாக்குகளை அள்ளுமா?

Congress Election Manifesto 2024 For Women : மகளிர் மேம்பாட்டிற்கு காங்கிரஸ் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் வழங்கிய ஐந்து பெரிய வாக்குறுதிகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த வாக்குறுதிகள் காங்கிரசுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்குமா?

பஞ்சாபில் 8 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம் பெற்றுள்ளது. என்றாலும் பஞ்சாபில் இக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை ஆம் ஆத்மி நேற்று வெளியிட்டது. இதன்படி கேபினட் அமைச்சர்களான குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர், குர்மீத் சிங் குடியன், குர்மீத் சிங் மீத் ஹேயர், பல்பீர் சிங் ஆகியோர் முறையே அமிர்தசரஸ், கதூர் சாஹிப், பதிண்டா, சங்ரூர், பாட்டியாலா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். … Read more

BS Yediyurappa : மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோவில் வழக்கு

POCSO Act Against Former CM BS Yediyurappa: மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.