“அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக துணியாது” – ராகுல் காந்தி பேச்சு @ மும்பை

மும்பை: பாஜக அதிக சலசலப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அரசியல் சாசனத்தை மாற்றும் அளவுக்குத் துணியாது என்று கூறியுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, உண்மையும் நாட்டு மக்களும் தம் பக்கம் இருப்பதாகக் கூறியுள்ளார். மும்பையில் உள்ள மகாத்மா காந்தி இல்லமான மணி பவனில் இருந்து, கடந்த 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய ஆகஸ்ட் கராந்தி மைதானம் வரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நீதி சங்கல்ப பாதயாத்திரை’ சென்ற ராகுல் காந்தி, அதற்கு பின்னர் நடந்த … Read more

குஜராத் பல்கலை.,யில் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: அறைகள், வாகனங்கள் சேதம்

அகமதாபாத்: குஜராத் பல்கலைக்கழத்தின் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் நடந்த தாக்குதலில் 5 வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்தள்ளனர். விடுதி அறையில் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் அவர்களின் அறையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று எதிர்ப்பு தெரிவித்து மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டு குழுக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக … Read more

பாஜகவில் இணைந்தார் பின்னணி பாடகி அனுராதா பட்வால்

புதுடெல்லி: பிரபல பின்னணிப் பாடகியான அனுராதா பட்வால், பாஜக தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். இந்தி திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியாக இருப்பவர் அனுராதா பட்வால். ஆயிரக்கணக்கான இந்திப் பாடல்களை பாடியுள்ளார். இது மட்டுமல்லாமல் மராத்தி, ஒரியா, பெங்காலி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இவர் பாடியுள்ளார். திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல் பக்தி ரசம் சொட்டும் பஜனைப் பாடல்கள், பிரத்யேக ஆல் பங்களை அனுராதா பட்வால் அதிகம் வெளியிட்டுள்ளார். சினிமா பாடல்களுக்கு நிகராக அவரது பஜன் … Read more

நக்சல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை 58 ஆக குறைவு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: அனைத்து மாநில தலைமைசெயலர்கள், டிஜிபிக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் நக்சல் பாதிப்பை கண்காணிக்கும் பிரிவு அனுப்பியுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது: நக்சல் பாதிப்பு மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களால், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நக்சல் பாதிப்பு மாவட்டங்களுக்கான பாதுகாப்பு தொடர்பான செலவின திட்டத்தை உள்துறை அமைச்சகம் 2021-ம் ஆண்டு ஆய்வு செய்தபோது, நாட்டில் 10 மாநிலங்களில் 72 மாவட்டங்களில் நக்சல் பாதிப்பு இருந்தது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த எண்ணிக்கை 58 ஆக … Read more

போரின்போது ஆட்டத்தை மாற்றக்கூடிய அக்னி 5 ஏவுகணையின் முதல் புகைப்படம் வெளியீடு

புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் எம்ஐஆர்விதொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை ஒடிசாவில்அண்மையில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு உள்ளது. இது 5,000 கி.மீ. தொலைவு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஆனால் இந்த ஏவுகணை 8,000 கி.மீ. வரை சீறிப் பாயும் என்று சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே எம்ஐஆர்வி ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளது. … Read more

அமலாக்கத் துறை சம்மன் வழக்கு: கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்

புதுடெல்லி: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களை அர்விந்த் கேஜ்ரிவால் தவிர்த்தது தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. டெல்லி மதுபான கொள்கைஊழல் வழக்கில் நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்குமாறு டெல்லிமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால்இதனை கேஜ்ரிவால் ஏற்கவில்லை. கொள்கை உருவாக்கம் இறுதி செய்யப்படுவதற்கு முன் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து கேஜ்ரிவாலின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை பதிவு செய்ய விரும்புகிறது. ஆனால் இந்த சம்மன்கள் சட்டவிரோதம் எனவும் … Read more

பாகிஸ்தானைச் சேர்ந்த 18 இந்து அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்த குஜராத்! சிஏஏ நடைமுறைக்கு வந்தது!

Indian Citizenship Under CAA: இந்திய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பாகிஸ்தானில் இருந்து வந்த 18 இந்து அகதிகளுக்கு, மார்ச் 16ம் தேதியன்று அகமதாபாத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது…

‘வளர்ந்த இந்தியா’ இலக்கை எட்ட உங்கள் ஆதரவு தேவை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது குடும்ப உறுப்பினர்களே, நம் கூட்டணி பத்தாண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது. 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உங்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமே மத்திய அரசின் சாதனை. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்த … Read more

ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் – தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப் பதிவு

புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி … Read more

மித் vs ரியாலிட்டி: தேர்தல் ஆணையத்தின் புதிய அதிரடி திட்டம் என்ன?

புதுடெல்லி: சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மித் vs ரியாலிட்டி (Myth vs Reality) திட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் 2024 குறித்த அறிவிப்பை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர், அரசியல் கட்சிகள் பொய்ச் செய்திகளை பரப்பக் கூடாது என எச்சரித்தார். மேலும், சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க ‘மித் vs ரியாலிட்டி’ திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மித் vs … Read more