புதிய சட்டம் மூலம் தேர்தல் ஆணையர் நியமனம்: தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

புதுடெல்லி: காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூர் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு … Read more

தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: எஸ்பிஐ மனு தள்ளுபடி @ உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் (மார்ச் 12) சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும், 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் வழங்கியது தொடர்பான விவரங்களை தேர்தல் … Read more

நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை கொடுக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Electoral bonds: அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.  

‘சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்த விரும்பாத அரசு’ – காங்.

மத்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணு கோபால் நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது ஒரே தேர்தல் ஆணையர்தான் உள்ளார். தேர்தல் ஆணையத்தில் என்னதான் நடக்கிறது. ஒட்டுமொத்த நாடும் கவலையில் உள்ளது. மக்களவைத் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த மத்திய அரசு விரும்பவில்லை. … Read more

42 தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்தார் மம்தா – மேற்கு வங்கத்தில் ‘இண்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ‘இண்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், மஹுவா மொய்த்ரா, சத்ருஹன் சின்ஹா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில்நடைபெற உள்ளது. இத்தேர்தலில்ஆளும் பாஜகவை தோற்கடிப்பதற்காக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் … Read more

ரூ.44,000 கோடிக்கு மேம்பாட்டு திட்டம்: உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அசம்கரில் ரூ.44,000 கோடி மதிப்பிலான 782 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உத்தர பிரதேச மாநிலம் அசம்கரில், ரயில்வே, நகர்ப்புற மேம்பாடு, சாலை போக்குவரத்து, கல்வி மேம்பாடு என பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒரு காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தலைநகர் டெல்லியில்தான் நடைபெறும். அங்கு மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள். இன்று இந்த நிகழ்வு அசம்கரில் … Read more

போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்கு

புதுடெல்லி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் இந்தியாவில் இருந்து மெத்தம்பெட்டைமைன் போதைப் பொருள் தயாரிக்கும் மூலப் பொருள் சூடோபெட்ரைன் அனுப்பப்படுவதாக நியூசிலாந்து சுங்கத்துறை, ஆஸ்திரேலிய போலீஸ், அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆகியவை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து டெல்லி போலீஸாருடன் இணைந்து விசாரணை … Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்கும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிகவெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் நிலவும்போது, … Read more

6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாஜகவுடன் கைகோத்த தெலுங்கு தேசம்

6 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆந்திராவில் தொகுதி பங்கீடு குறித்து, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் விடிய, விடிய பேச்சுவார்த்தை நடத்தினர். ஆந்திர மாநிலத்தில் இந்த ஆண்டு வரும் ஏப்ரலில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாஜக-வுடன் மீண்டும் 6 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு … Read more

குண்டுவெடிப்பு குற்றவாளியை பிடிக்க பொதுமக்கள் உதவி தேவை: புதிய வீடியோ வெளியிட்டு என்ஐஏ கோரிக்கை

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ‘ராமேஷ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த 1-ம் தேதி சக்தி குறைந்த குண்டுவெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில், சந்தேகிக்கப்படும் குற்றவாளி உணவகத்தில் இருக்கும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ள நிலையில், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் மார்ச் 1-ம் தேதிபெங்களூரு மாநகர பேருந்து … Read more