ஐ.பி.எல்: பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

லக்னோ, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) முல்லாப்பூரில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் – சஞ்சு சாம்சன் தலைமையலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் … Read more

ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியல்: கம்பேக் கொடுக்கும் டெல்லி! பாதாளத்துகு போன ஆர்சிபி அணி

17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எல்லாம் சாம்பியன்ஸ் ஆக போட்டி போடும்போது பஞ்சாப், டெல்லி, ஆர்சிபி அணிகளிடையே 10,9,8 ஆகிய இடங்களை பிடிப்பது யார் என்பதில் தான் போட்டியே இருக்கும். இந்த ஆண்டாவது இந்த டிரெண்ட் மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு ஆடிக் கொண்டிருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள். அந்த இரு அணிகளும் … Read more

ஹர்திக் பாண்ட்யாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது; அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை – நியூ. முன்னாள் வீரர்

மும்பை, 17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ஐ.பி.எல். தொடக்க ஆட்டங்களில் ஹர்திக் பாண்ட்யா அதிக அளவில் பந்து வீசினார். ஆனால், அதன்பின் பெரும்பாலான ஆட்டங்களில் ஹர்திக் பந்து வீசவில்லை. இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று நியூசிலாந்து … Read more

டெல்லி அணி வெற்றி… புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே முன்னேற்றம்… லக்னோவின் சாதனை தகர்ப்பு!

IPL 2024 LSG vs DC Highlights: நடப்பு ஐபிஎல் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று லக்னோ எக்னா மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் காயம் காரணமாக மயங்க் யாதவ் விளையாடவில்லை.  தொடர்ந்து, லக்னோ அணிக்கு குவின்டன் டீ காக், ராகுல் நல்ல பார்டனர்ஷிப் அளித்தாலும் டீ காக் 13 … Read more

சிஎஸ்கேவில் இந்த 5 வீரர்கள் முக்கியம்… வான்கடேவில் மும்பையை ஈஸியாக வீழ்த்தலாம்!

MI vs CSK Match IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 5 போட்டிகளை விளையாடிவிட்டன. ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, சென்னை உள்ளிட்ட அணிகள் தற்போது முதல் நான்கு இடங்களில் உள்ளனர். இருப்பினும் ஐபிஎல் நீண்ட தொடர் என்பதால் நிலைமை … Read more

என்னுடைய வெற்றிகரமான பந்துவீச்சிற்கு இந்த 3 ரகசியங்கள்தான் காரணம் – பும்ரா

மும்பை, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளஸ்சிஸ் 61, ரஜத் படிதார் 50, தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் அடித்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி … Read more

Rohit sharma: சூப்பரா ஆடுற சபாஷ் டிகே.. உலக கோப்பை விளையாடலாமா? ரோகித் சர்மா குசும்பு

மும்பை இந்தியன்ஸ் வெற்றி ஐபிஎல் 2024 டி20 தொடரில் 25வது லீக் போட்டியில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் 7வது இடத்துக்கு முன்னேறியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) பேட்டிங்கில் கலக்கியபோதும், பந்துவீச்சில் மீண்டும் கோட்டைவிட்டது. அந்த அணி தான் முதலில் பேட்டிங் ஆடியது. ஆர்சிபி கேப்டன் பிளேஸிஸ் 61, ரஜத் படிடார் 50 விளாச, இறுதி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதி, இறுதிப்போட்டிக்கான தேதி அறிவிப்பு

புதுடெல்லி, 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் லீக் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். எஞ்சிய 4 அணிகள் நாக்-அவுட் சுற்றில் மோதி, அதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரைஇறுதியில் விளையாடும். … Read more

நான் இதை நினைச்சுக்கூட பார்க்கல, கதறும் டூபிளெசிஸ்! ஆர்சிபி ரசிகர்கள் சோகம்

ஆர்சிபி அணிக்கு வழக்கம்போல் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனும் இதுவரை மோசமாகவே அமைந்திருக்கிறது. அந்த அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதனால் அந்த அணியின் கேப்டன் டுபிளெசிஸ் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியிலும் அந்த அணி தோல்வியை சந்தித்திருக்கிறது. பேட்டிங் சிறப்பாக இருந்தால், பவுலிங் சிறப்பாக இருப்பதில்லை, பவுலிங் சிறப்பாக இருந்தால் பேட்டிங் சிறப்பாக இருப்பதில்லை என்பது … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

லக்னோ, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது. நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் … Read more