ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பெண்ணை கரம் பிடித்தார் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான்

காஷ்மீர், மும்பை கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவரும் சர்பராஸ் கான், திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரரைப் பார்க்க அவரது ரசிகர்கள் பலர் குவிந்தனர். மிகவும் திறமையான பேட்ஸ்மேனாக அறியப்படும் சர்பராஸ் கான், 2022-23 ரஞ்சி டிராபி தொடரில் மூன்று சதங்களின் உதவியுடன் ஆறு ஆட்டங்களில் 92.66 … Read more

சச்சினின் இந்த 4 சாதனைகளை ரோஹித் சர்மா முறியடிக்க முடியும்!

ரோஹித் சர்மா தற்போதைய தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் மற்றும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். தன்னுடைய திறமையான பேட்டிங்கால் 5 அல்லது 6வது இடத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ராத்தி சர்மா ODI மற்றும் T20 களில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.  அவரது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பல சாதனைகள் படைத்துள்ளார். ரோஹித் ஒவ்வொரு முறை பேட்டிங் செய்ய வரும்போதும் மற்ற சாதனைகளில் ஒன்றை முறியடித்தார். ரோஹித்துக்கு முக்கியமான சில போட்டிகள் வரவிருக்கிறது, மேலும் அவர் வரும் … Read more

2வது டி20 கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி…!

கயானா, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியாவை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் … Read more

விழுப்புரத்தில்பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

விழுப்புரம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது. போட்டியை விழுப்புரம் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் புஷ்பராஜ், முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல், 100 மீட்டர், 300 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து … Read more

இந்த 3 பேருக்கு இனி அணியில் இடம் இல்லை! பிசிசிஐ எடுத்த முடிவு!

2023 உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய அணி குறைந்தது ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடும். ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கும். ஆசியக் கோப்பை, ஆஸ்திரேலியா தொடர் மற்றும் உலகக் கோப்பைக்கான என மூன்று தொடருக்கும் ஒரே அணியை பிசிசிஐ அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் பிசிசிஐயை எப்போதும் குழப்பத்தில் வைத்துள்ளது.  காயமடைந்த சில வீரர்கள் விரைவில் திரும்ப வாய்ப்புள்ள நிலையில், … Read more

INDvsWI: திலக் வர்மா ஆடியதால் கவுரமான ஸ்கோருக்கு கரையேறிய இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி.20 போட்டி கயானா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இந்தப் போட்டியிலும் சுப்மன் … Read more

சிஎஸ்கே அணியில் தோனியை விட அதிக சம்பளம் வாங்கும் 3 வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தான் அதிகம் சம்பளம் வாங்குவதாக ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தோனியை விட மிகவும் அதிகமான தொகையை ஊதியமாக வாங்கும் வீரர்கள் 3 பேர் அந்த அணியில் இருக்கிறார்கள். கடந்த முறை நடைபெற்ற ஏலத்தின்போது நல்ல பிளேயர்களை அணியில் எடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்ட தோனி, தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ் … Read more

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ராக் க்ரீக் பூங்காவின் வில்லியம் எச்.ஜி. பிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மைதானத்தில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஜூலை 29ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 7ஆம் தேதி முடிவடைகிறது. தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான ஜெசிகா பெகுலா உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாக்கு எதிராக விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை எலினா ஸ்விடோலினா … Read more

IND vs WI: முதல் போட்டி தோல்வி! அதிரடியாக அணியை மாற்றிய ஹர்திக்!

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்தங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை இன்று ஜார்ஜ்டவுனில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, ஏமாற்றம் அடைந்தது.  150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜேசன் ஹோல்டர், ஓபேட் மெக்காய், … Read more

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: நார்வே அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஜப்பான்…!

மெல்போர்ன், 32 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகின்றன. இதில் கலந்து கொண்ட 32 அணிகளில் இருந்து சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், நார்வே, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, கொலம்பியா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், மொராக்கோ ஆகிய 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய 2-வது சுற்று (நாக்-அவுட்) ஆட்டங்களுக்கு முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் ஆட்டம் … Read more