உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஹோபன்ஹேகன், 28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க்கின் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 19-21, 21-9 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னன்டோ- டேனியல் மார்தின் இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. இதன் ஒற்றையர் 3-வது சுற்றில் 9-ம் நிலை வீரரான எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) 21-18, 15-21, … Read more

செஸ் உலகக் கோப்பை தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா!

நடப்பு ஃபிடே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்திய செஸ் ஜாம்பவான் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிச் சுற்றில் மோதினார். உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2-வது சுற்றும் ‘டிரா’வில் முடிந்தது. வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்வதற்காக இன்று டைபிரேக்கர் நடைபெற்றது. இதில் டை பிரேக்கர் சுற்றின் முதல் ஆட்டத்தில் 14 நகர்வுகள் முடிவடைந்த நிலையில், இருவரும் தங்களின் பிஷப் (மந்திரி) காயினை இழந்தனர். … Read more

உலகக் கோப்பை கனவில் இந்திய அணி… குறுக்கே நிற்கும் மூன்று முரட்டு அணிகள் இவை தான்!

ICC World Cup 2023: ஒரு நாள் போட்டி வடிவிலான ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்திய மண்ணில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறது. ஆனால் கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவை உடைக்க 3 அணிகள் காத்திருக்கின்றன.  உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவை முறியடிக்கக்கூடிய 3 அணிகளாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பார்க்கப்படுகிறது. ஒருநாள் … Read more

பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதிய இறுதிப்போட்டியின் 2-வது சுற்றும் 'டிரா' – சாம்பியனை முடிவு செய்ய இன்று 'டைபிரேக்கர்'

பாகு, ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் வெற்றி பெறும் … Read more

ஆசிய கோப்பை போட்டித்தொடரில் அதிக ரன்கள் எடுத்த கிரிக்கெட்டர்களின் பட்டியல்

புதுடெல்லி: ஆசிய கோப்பை ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கிறது. இதுவரை  இந்த போட்டித்தொடரில் ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆசிய கோப்பை 2023 போட்டி ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. போட்டியைக் காண விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆவலும் கூடிக் கொண்டே செல்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, ஆகஸ்ட் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது இந்தியா

துபாய், 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்.8-ந்தேதி எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஒவ்வொரு அணிகளும் சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு பயிற்சி … Read more

உலக தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் நீளம் தாண்டுதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி

புடாபெஸ்ட், 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 5-வது நாளான நேற்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதலின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர் உள்பட மொத்தம் 37 பேர் களம் இறங்கினர். இதில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தனது முதல் முயற்சியில் 8 மீட்டர் நீளம் தாண்டினார். அடுத்த இரு முயற்சியில் ‘பவுல்’ செய்தார். … Read more

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஜோடி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

ஹோபன்ஹேகன், 28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் புகுந்த இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-9 என்ற நேர் செட்டில் வெறும் 30 நிமிடங்களில் ஆஸ்திரேலியாவின் கென்னத் ஸி ஹூய் – மிங் சூயன் லிம் இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டியது. காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன்களான சாத்விக் – … Read more

தூத்துக்குடியில்மாவட்ட அளவிலான கபடி போட்டி:வருகிற 2, 3 தேதிகளில் நடக்கிறது

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் வருகிற 2, 3-ந் தேதிகளில் நடக்கிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கபடி போட்டி தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமும், கோவை ஈஷா யோகா மையமும் இணைந்து தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்கள் கபடி போட்டியை நடத்த உள்ளது. இந்த போட்டிகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், பின்னர் மாநில அளவிலான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. … Read more

FIDE: நேற்று சந்திரயான்! இன்று பிரக்ஞானந்தா! இந்தியர்களுக்கு இன்றும் மகிழ்ச்சி தொடருமா?

பாகு, ஆகஸ்ட் 21: நடப்பு ஃபிடே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்திய செஸ் ஜாம்பவான் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிச் சுற்றில் மோதினார். உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2-வது சுற்றும் ‘டிரா’வில் முடிந்தது. வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்வதற்காக இன்று டைபிரேக்கர் நடைபெறவிருக்கிறது. கிளாசிக்கல் செஸ்ஸின் முதல் ஆட்டத்தை 35 நகர்வுகளுக்குப் பிறகு கார்ல்சன் டிரா செய்தார். இரண்டாவது ஆட்டம் டையில் … Read more