ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்

புதுடெல்லி, ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவின் செம்பிலான் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஜூனியர் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்யதா ஜே.பி. 2 நிமிடம் 28.861 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 17 வயதான தன்யதா கோவையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஆவார். சீனத்தைபேயின் சாய் ரோக் லீ தங்கப்பதக்கத்தை (2 நிமிடம் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

திண்டுக்கல், திண்டுக்கலில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக், ஹரி நிஷாந்த் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கார்த்திக் 4 ரன், ஹரி நிஷாந்த் 24 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஜெகதீசன் கவுசிக் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி

ஹராரே, 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு ஒருநாள் உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய 2 அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்தான 50 … Read more

பேட்மிண்டனில் சாதனை! இந்தோனேஷிய ஓபன் கோப்பை வென்ற ரங்கிரெட்டி சிராக் ஜோடி

புதுடெல்லி: இந்திய பேட்மிண்டன் வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி புதிய வரலாறு படைத்தனர். BWF சூப்பர் 1000 நிகழ்வை வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இரட்டையர்கள் ஏற்படுத்தினார்கள். இந்தோனேசியா ஓபன் 2023 ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடிய இந்திய ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை வென்றது. இந்தோனேசியா ஓபன் 2023 ஆடவர் இரட்டையர் பட்டத்தை … Read more

சிஎஸ்கே வீரராக இருந்துகொண்டு… மொயீன் அலி செய்த காரியம்; அபராதம் விதிப்பு – என்ன தெரியுமா?

Moeen Ali Fined:  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தனது பந்துவீச்சு கையில் ஈரத்தை உலர்த்தும் மருந்து போன்ற பொருளை நடுவர்களின் முன் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக இங்கிலாந்து வீரர் மொயீன் அலிக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  “வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகள் 2.20 ஐ அலி மீறியது கண்டறியப்பட்டது. இது விளையாட்டின் நேர்மைக்கு முரணான நடத்தையை வெளிப்படுத்துவது தொடர்பானது” என்று ஐசிசி … Read more

ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால் இதை செய்தாக வேண்டும் – கிரீம் ஸ்மித்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2023, ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் மீது கேள்விகள் எழுந்தன. அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்மித், ரோஹித்தின் கேப்டன்ஷிப்பை பாராட்டியிருப்பதுடன் ஒரு அறிவுரையும் வழங்கியுள்ளார். ரோகித் சர்மா என்ன செய்ய வேண்டும்? ரோகித் சர்மாவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய அனுபவம் இருக்கிறது என … Read more

அம்மாடி… கிங் கோலியிடம் எத்தனை கோடி சொத்து இருக்கு தெரியுமா?

Virat Kohli Net Worth: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இன்ஸ்டாகிராமில் 252 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன், கோலி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பாலோயர்ஸ் உள்ளவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.  அந்த வகையில், கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ. 1,050 கோடி என்றும் இது தற்போதைய சர்வதேச கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகபட்சமானதாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 34 வயதான … Read more

மார்னஸ் லாபுசாக்னேவை கோல்டன் டக்கில் ஆட்டமிழக்கச் செய்த பிராட்! விக்கெட் எடுத்த ரகசியம்

புதுடெல்லி: பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் 2023 முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், புரவலர்களுக்கு மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார். அவர் டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே ஆகியோரின் இரண்டு பெரிய விக்கெட்டுகளை முதல் அமர்வின் தொடக்கத்திலேயே தொடர்ச்சியாக இரண்டு பந்துகளில் கைப்பற்றினார். அவரது இந்த விக்கெட்கள், தனது கிரிக்கெட் அணியை வலுவான நிலையில் கொண்டு செல்ல அவருக்கு உதவியது மார்னஸ் லாபுசாக்னேவை கோல்டன் டக்கில் ஆட்டமிழக்கச் … Read more

ICC World Cup 2023: இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் வைக்கும் 2 கோரிக்கை!

இந்தியாவும் பாகிஸ்தானும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது அகமதாபாத்தில் நேருக்கு நேர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.  2023 உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 3 வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் நான்காவது முறையாக போட்டி நடத்தப்படும் அதே வேளையில், இந்தியா பிரத்தியேகமாக போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்தியா கடந்த காலங்களில் பாகிஸ்தான், இலங்கை அல்லது வங்கதேசத்துடன் இணைந்து உலகக் கோப்பையை நடத்தியது. போட்டிக்கான ரன்-அப் சர்ச்சை … Read more

சென்னையில் போட்டி வேண்டாம் பெங்களூரில் தான் ஆடுவோம்: பாகிஸ்தானின் விசித்திர கோரிக்கை

ODI உலகக் கோப்பை 2023 இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் இடையே இந்தியாவில் நடைபெற உள்ளது. பிசிசிஐ தற்காலிக அட்டவணையை ஐசிசியிடம் ஒப்படைத்துள்ளது. இது அனைத்து உறுப்பு நாடுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசியிடம் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை சென்னைக்கு பதிலாக பெங்களூரில் நடத்த வேண்டும் என கேட்டுக் … Read more