விராட் கோலியின் சொத்து மதிப்பு: எவ்வளவு சம்பாதிக்கிறார்? இத்தனை ஆயிரம் கோடியா?

Virat Kohli Net Worth: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளை கடந்து கிங்காக வளம் வருகிறார். இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற நாட்டுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று தந்த பெருமை இவரை சேரும். தோனிக்கு அடுத்து இந்திய அணியை வழி நடத்தியும் வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது … Read more

பெண்கள் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இன்று மோதல்

கொழும்பு , 13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் , கொழும்பில் இன்று நடக்கும் 9-வது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 16 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி … Read more

செப்டம்பர் மாத ஐசிசி விருதுக்கான போட்டியில் அபிஷேக், குல்தீப்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. இதன்படி செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா, குல்தீப் யாதவ், ஜிம்பாப்வேயை சேர்ந்த பிரையன் பென்னட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாதத்தில் அபிஷேக் ஷர்மா டி20 போட்டியில் ஆடி 3 அரைசதம் உள்பட 314 ரன்கள் சேர்த்ததுடன் ஆசிய கோப்பையை வெல்ல … Read more

உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய அணி வெற்றி

கவுகாத்தி, உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் கலப்பு அணிகள் பிரிவில் பங்கேற்றுள்ள 36 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். ஒவ்வொரு செட்டிலும் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய ஆட்டங்கள் இடம்பெறும். 45 புள்ளிகளை முதலில் எட்டும் அணி ஒரு … Read more

கம்பீரை சீண்டும் ரோஹித் சர்மா…? சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல டிராவிட் தான் உதவினாரா?

Rohit Sharma : வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக ஜொலிப்பவர், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா. டெஸ்ட் மற்றும் டி20ஐ போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஓடிஐ-இல் தொடர்ந்து விளையாட உள்ளார்.  Add Zee News as a Preferred Source 2023இல் ஆசிய கோப்பையை வென்றது, 2023இல் ஐசிசி உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றது, 2024இல் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது, 2025இல் ஐசிசி … Read more

விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மிதாலிக்கு கவுரவம்

விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு, இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆந்திராவைச் சேர்ந்த மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயரை சூட்ட வேண்டும் என தற்போதைய இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஆந்திர தகவல் நுட்பத்துறை மந்திரி நாரா லோகேசுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கோரிக்கை விடுத்தார். இதை ஆந்திர அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. மிதாலி, ரவி … Read more

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த தோனி? ஐபிஎல் 2026ல் முக்கிய முடிவு?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுழன்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது, பின்னர் பல மாதங்கள் பொது வெளியில் இருந்து மறைந்து தனது முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெறுவது, பின் தனது உடற்தகுதியை மதிப்பிட்டு, அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பது என அவரது பயணம் தொடர்கிறது. ஆனால், இந்த வழக்கமான சுழற்சியை உடைக்கும் ஒரு … Read more

கோலி, ரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கு எப்படி தேர்வு செய்தார்கள்? முன்னாள் கேப்டன்

மும்பை, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. இந்த தொடருக்கான இந்திய … Read more

தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு வாழ்வா சாவா நிலை! ஏன் தெரியுமா?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தாலும், இளம் வீரர் சாய் சுதர்ஷனின் மோசமான ஆட்டம் அணி நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்த அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையிலேயே மறக்க விரும்பும் ஒரு ஷாட்டை ஆடி அவுட் ஆனார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை டெல்லியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, தமிழக வீரரான சாய் சுதர்ஷனுக்கு வாழ்வா, சாவா … Read more

கம்மின்ஸ் இல்லாத ஆஸ்திரேலியா.. இந்தியாவை வீழ்த்த புது பிளான்.. வெளியான அணி!

Ind vs Aus: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்த பின்னர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி நிர்வாகம் சனிக்கிழமை ஆக்டோபர் 04 அன்று ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்தது. ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு சமீபத்தில் டெஸ்ட் அணியின் … Read more