பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா

புதுடெல்லி, 13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில், இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் … Read more

ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்

Rohit Sharma : இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது ஏன்? என்பதற்கான பின்னணி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் எடுக்கும் முடிவுகள் டிரெஸ்ஸிங் ரூம் சூழல்களை பாதிக்கும் என்ற காரணத்துக்காகவே அவரை அப்பதவியில் இருந்து நீக்கியுள்ளனர் தேர்வுக்குழுவினர். இது தொடர்பாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடனும் தேர்வுக்குழு ஆலோசனை நடத்தியுள்ளது. அதில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் பார்ம் குறித்து எழுப்பிய சந்தேகங்கள் காரணமாக … Read more

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; சர்ச்சையான பாகிஸ்தான் வீராங்கனையின் ரன் அவுட்

கொழும்பு, இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் குவித்தது. 248 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாட தொடங்கியது. இந்த போட்டியின் … Read more

உலக பாரா தடகள போட்டிகள் நிறைவு; 22 பதக்கங்களை அள்ளி சாதனை படைத்த இந்தியா

புதுடெல்லி, 2025-ம் ஆண்டு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுடெல்லியின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தன. 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். மொத்தம் 186 பதக்கங்களுக்காக போட்டிகள் நடந்தன. இதில், சர்வதேச பாரா தடகள வீரர்கள், உலக சாம்பியன்கள் மற்றும் இந்திய விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், போட்டியை நடத்திய இந்தியா, 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் … Read more

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

கொழும்பு, 13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில், இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 13-வது பெண்கள் … Read more

ஐபிஎல் 2026 ஏலத்திற்கு வரும் முக்கிய வீரர்கள்! அனல் பறக்கப்போகும் ஏலம்?

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2026ம் ஆண்டுக்கான தொடர் குறித்து ஒவ்வொரு அணிகளும் இப்போது இருந்தே திட்டமிட தொடங்கி உள்ளனர். சில அணிகள் தங்களது முக்கிய வீரர்களை தக்கவைப்பதில் கவனம் செலுத்த, மற்ற சில அணிகளோ, அணியை முழுமையாக மாற்றி அமைக்கும் நோக்கில், வரவிருக்கும் மெகா ஏலத்தை ஒரு முக்கிய களமாக பார்க்கின்றன. இந்த பின்னணியில் சில சர்வதேச வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றால், அவர்களை எடுக்க அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2026 … Read more

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் நிதான ஆட்டம்

கொழும்பு, மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வரும் 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹெர்லின் 46 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து 248 ரன்கள் … Read more

தோனி vs கோலி vs ரோஹித்: இந்திய அணியின் சிறந்த ஓடிஐ கேப்டன் யார்? – பதில் இதோ!

Best Indian ODI Captain: ஓடிஐ கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டு, ரோஹித் சர்மா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், ரோஹித் சர்மா ரசிகர்கள் தற்போது உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிறார்கள்.  Add Zee News as a Preferred Source அப்படியிருக்க, ரோஹித் சர்மா தான் ஓடிஐயில் சிறந்த கேப்டன், இல்லை தோனிதான் பெஸ்ட் கேப்டன், இல்லை இல்லை விராட் கோலிதான் சூப்பர் கேப்டன் என சமூக வலைதளங்களில் நேற்றில் இருந்து சண்டை ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த … Read more

'டாஸ் சர்ச்சை': இந்தியா – பாகிஸ்தான் மகளிர் உலகக் கோப்பையில் நடுவரின் தவறால் பரபரப்பு!

India vs Pakistan : இலங்கை கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், டாஸின் போது நடந்த ஒரு தவறு காரணமாக சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கம்போல், போட்டி தொடங்கும் முன் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் பாகிஸ்தான் அணி கேப்டன் ஃபாத்திமா சனா ஆகியோர் டாஸில் பங்கேற்றனர். ஆசியக் கோப்பையில் நடந்தது போலவே, இரு அணித் தலைவர்களும் கை … Read more

ஆஸ். தொடரில் பும்ரா நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா? வெளியான முக்கிய தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு தலைவரான ஜஸ்பிரித் பும்ரா, அக்டோபர் 19ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது அவரது ஆட்டத்திறன் குறைபாடு காரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், அவரது பணிச்சுமையை நிர்வகிக்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Add Zee News as a Preferred Source நீக்கத்திற்கான முக்கிய … Read more