2வது டி20: ஜிம்பாப்வே – நமீபியா அணிகள் இன்று மோதல்

புலவாயோ, நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற ஜிம்பாப்வே முனைப்பு காட்டும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்த்ல் வெற்றிக்காக நமீபியா கடுமையாக போராடும். இதன் … Read more

மதுரை டூ செங்கல்பட்டு வரை.. நாளை அடித்து ஊற்றப்போகும் கனமழை!

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (16-09-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஈரோடு, சேலம், தர்மபுரி, … Read more

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு; ரெய்னா, தவானை தொடர்ந்து 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேலும் முதலீட்டாளர்களை கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றி கணிசமான வரிகளை ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சூதாட்ட செயலிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. … Read more

India A vs Australia A: இன்று தொடங்கும் போட்டி! இலவசமாக ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

India A vs Australia A: தற்போது ஆசிய கோப்பையில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள், ஆஸ்திரேலியா A அணிக்கு எதிராக 2  அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றனர். இன்று செப்டம்பர் 16 முதல் இந்த போட்டி துவங்குகிறது. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ … Read more

ஆசிய கோப்பையில் இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது தெரியுமா?

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில், தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வரும் இந்திய அணி, செப்டம்பர் 14ம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்றது. இதன் மூலம் குரூப் A புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் அணியுடனான இந்த வெற்றிக்கு பிறகு, இந்திய அணிக்கு சில நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அடுத்த போட்டி எப்போது? யாருடன்? … Read more

IND vs PAK: சர்ச்சையில் சிக்கிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்! என்ன ஆனது?

அனைவரும் அதிகம் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பதிவு செய்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே அடித்தது. எளிய இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 16 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் … Read more

பிரையன் பென்னட் அதிரடி: நமீபியாவுக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

புலவாயோ, நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி புலவாயோவில் இன்று நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நமீபியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து ஜிம்பாப்வேயின் தொடக்க வீரர்களாக பிரையன் பென்னட் மற்றும் தடிவனாஷே மருமணி ஆகியோர் களம் கண்டனர். இதில் தடிவனாஷே மருமணி நிதானமாக ஆட மறுபுறம் பிரையன் பென்னட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். … Read more

இந்தியா vs ஓமன்: பும்ரா நீக்கம்.. அணிக்குள் வரும் நம்பர் 1 பவுலர்!

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கி இருக்கிறது. இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே அபார வெற்றியை பெற்றுள்ளது. அடுத்ததாக ஓமன் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  Add Zee News as a Preferred Source இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அணிக்க உள்ளதாக … Read more

புரோ கபடி லீக்: குஜராத் – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதல்

ஜெய்ப்பூர், 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று 2 லீக் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் 2வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. 1 More update தினத்தந்தி Related Tags : புரோ … Read more

விராட் கோலி, ரோகித் சர்மாவை மிஞ்சிய அபிஷேக் சர்மா.. முழு விவரம் இதோ!

17வது ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை இத்தொடரில் 7 போட்டிகளில் நிறைவடைந்துள்ளன. இதில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளன. முதல் போட்டியில் யுஏஇ அணியை எதிர்த்தும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடி உள்ளது.  Add Zee News as a Preferred Source … Read more