விராட் கோலி, ரோகித் சர்மாவை மிஞ்சிய அபிஷேக் சர்மா.. முழு விவரம் இதோ!

17வது ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை இத்தொடரில் 7 போட்டிகளில் நிறைவடைந்துள்ளன. இதில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளன. முதல் போட்டியில் யுஏஇ அணியை எதிர்த்தும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடி உள்ளது.  Add Zee News as a Preferred Source … Read more

ஐ.சி.சி.-யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது. ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதன்படி இந்தியாவின் முகமது சிராஜ், வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் … Read more

இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. ஹர்திக் பாண்டியா மாபெரும் சாதனை – முழு விவரம்!

ஆசிய கோப்பை தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஒன்று யுஏஇ அணியுடனும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணியுடனும் விளையாடியது. இந்த இரண்டு போட்டியிலுமே இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நேற்று (செப்டம்பர் 14) பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஓரு மாபெரும் சாதனை … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: 6 லீக் ஆட்டங்கள் நிறைவு.. புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை … Read more

மீண்டும் டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்? பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடிய அவரால், ஆசிய கோப்பையில் இடத்தை பிடிக்க முடியவில்லை. மேலும் டெஸ்ட் அணியில் இருந்தும் ஓரம் கட்டப்பட்டுள்ளார். இந்நிலையில் சுமார் 20 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான போட்டிகளில், ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறாததும், அதே சமயம் ரெஸ்ட் … Read more

துலீப் கோப்பை: ரஜத் படிதார் தலைமையிலான மத்திய மண்டல அணி சாம்பியன்

பெங்களூரு, 62-வது துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு- மத்திய மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய பயிற்சி மையத்தின் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தன்மய் அகர்வால் 31 ரன்கள் அடித்தார். மத்திய மண்டலம் தரப்பில் சரன்ஷ் ஜெயின்5 விக்கெட்டுகளும், … Read more

ஆசிய கோப்பை : போட்டி தொடங்க சில நிமிடங்களுக்கு முன்பு இந்தியா கொடுத்த அதிர்ச்சி

India vs Pakistan : 2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஆட்டத்தின் முடிவில் கைக்குலுக்காமல் இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த முடிவுக்குப் பின்னால் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருந்தார் என தகவல் இப்போது வெளியாகியுள்ளது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். … Read more

இந்தியாவிடம் படுதோல்வி: சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெறுமா?

ஆசியக் கோப்பை 2025 தொடரில் நேற்று ஞாயிற்றுகிழமை நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றுக்கான தகுதி வாய்ப்பை சற்று இழந்துள்ளது. இந்திய அணி ஏற்கனவே 2 வெற்றிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், பாகிஸ்தான் தனது அடுத்த சுற்று கனவை நனவாக்க கட்டாய வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. Add … Read more

ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு இந்த இரண்டு இந்திய வீரர்கள்தான் எமன்!

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இத்தொடரில் 5 போட்டிகளில் நிறைவடைந்திருக்கிறது. குரூப் ஏ-வில் இந்திய அணியும் குரூப் பி-யில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்திலும் உள்ளன. இந்திய அணி யுஏஇ அணியை செப்டம்பர் 10ஆம் தேதி எதிர்கொண்டு விளையாடியது. இப்போட்டியில், இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 59 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், இந்திய அணி அதனை 4.3 ஓவர்களில் … Read more

மிகவும் வறுமையில் இருந்து நட்சத்திரமாக மாறியுள்ள 5 இந்திய வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது பலரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. பல்லாயிரம் கோடி வருமானம் இந்திய கிரிக்கெட்டை சுற்றி மட்டுமே இருந்து கொண்டு இருக்கிறது. இந்திய அணியில் தற்போது உச்சத்தில் இருக்கும் பல நட்சத்திரங்களின் ஆரம்பகால வாழ்க்கை, கண்ணீராலும், தியாகத்தாலும், வறுமையாலும் சூழப்பட்டு இருந்துள்ளது. பண கஷ்டம், சமூக அழுத்தங்கள், குடும்ப போராட்டங்கள் என அனைத்தையும் தாண்டி, தங்களது அசைக்க முடியாத திறமையாலும், விடாமுயற்சியாலும் இன்று உலகமே வியக்கும் சாதனையாளர்களாக பலர் … Read more