வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்தம்: 10 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

சென்னை: சென்னை மற்றும் புறநகர், டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் … Read more

மதுரையில் நேரக் கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 205 வழக்குகள் பதிவு

சென்னை: மதுரையில் நேரக் கட்டுபாடு மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறையினர் தெரிவித்தனர். பொதுவாக தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது, விபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசு தடுத்தல், பட்டாசு வெடிக்க, காலை 6 முதல் 7 மணி, மாலை 7 முதல் 8 மணி என, நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினரும் … Read more

சென்னையில் சென்ற ஆண்டை விட தீபாவளி கால காற்று மாசுபாடு அளவு 40% குறைவு

சென்னை: சென்னையில் சென்ற ஆண்டு தீபாவளி காற்றுத் தர மாசின் அளவைவிட நடப்பு ஆண்டு தீபாவளி காற்றின் மாசு அளவு 40 விழுக்காடுகள் (AQI) குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றூம் ஒலி மாசு அளவையும் கண்டறிய பெருநகர சென்னை மாநகரத்தில் பெசன்ட் நகர், தியாகராய … Read more

கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், நாளை (நவ.14, செவ்வாய்க்கிழமை) கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன … Read more

“தீபாவளிக்கு டாஸ்மாக் இலக்கு ரூ.600 கோடி… கருணை இல்லா திமுக அரசு” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “தீபாவளியை முன்னிட்டு ரூ.600 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனையை இலக்காக நிர்ணயித்த கருணை இல்லாத அரசு” என்று திமுகவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகம் முழுவதும் 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் 100 சதவீதம் பூத் கமிட்டி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக்கிணங்க நியமிக்கப்பட்டு … Read more

தமிழகம்‌ முழுவதும்‌ நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு @ தீபாவளி

சென்னை: தமிழகம் முழுவதும் நவ.12 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவ.13 (திங்கட்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நேராக கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நவ.12 மற்றும் நவ.13 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு … Read more

புதுச்சேரி மருந்து ஆலை விபத்தில் காயமடைந்த இளைஞர் மரணம்: கைக்குழந்தையுடன் மனைவி கதறல்

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த சொலாரா மாத்திரை தொழிற்சாலை விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மரணமடைந்தார். இதையடுத்து, பூட்டிய ஆட்சியர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு கைக்குழந்தையுடன் மனைவி கதறி அழுதார். தொழிற்சாலையை மூட வேண்டும், உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உடலை வாங்க மாட்டோம் என்று இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சாசன் என்ற பெயரில் இயங்கிய மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு … Read more

ராணிப்பேட்டை பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் உத்தரவு

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில், “ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிறுமி நவிஷ்கா (வயது 4) த/பெ. ரமேஷ் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் … Read more

தியாகி சங்கரய்யாவுக்கு உடல்நலக்குறைவு – அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று சங்கரய்யாவை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் அவருடன் இருந்து சிகிச்சைகளை கவனித்து வருகிறார். அவருடைய உடல்நலம் தேறி … Read more