கடந்த 40 நாட்களாக 250 நெல் மூட்டைகளை தடுத்து வைத்துள்ள ரவுடிகள்… விவசாயி பரபரப்பு புகாரால் வாக்குவாதம்.!

செங்கல்பட்டு அடுத்த படாளம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் கேட்டு மிரட்டும் ரவுடிகள், தனக்கு சொந்தமான 250 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய விடாமல் தடுத்து வைத்திருப்பதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் புகார் தெரிவித்தார். எப்படி புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் முன்னிலையில் நெல் கொள்முதல் நிலைய புரோக்கர்கள் விவசாயிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..   செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. … Read more

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள்: விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 5 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் அலுவலர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், 5 காவல் நிலையங்களில் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் … Read more

தஞ்சை மாணவனை தூக்கிய பிரதமரின் சிறப்பு அதிகாரிகள்; நடந்தது என்ன.?

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். அவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா.தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். 35 வயதான விக்டர் ஜேம்ஸ் ராஜா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு இ-மெயில்களை, தனது தந்தையின் மெயில் ஐடியில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த இ-மெயில்கள் எங்கிருந்து வந்தது என்று டெல்லியில் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவை தஞ்சை மாவட்டம் பூண்டியிலிருந்து … Read more

சத்தியமங்கலம் அருகே சாலையோரத்தில் சிறுத்தை நடமாட்டம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் கடம்பூர் மலை பாதை வழியாக சத்தியமங்கலத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்வதற்காக சரக்கு வேனில் கடம்பூர் மலை பகுதியைச் சேர்ந்த இருவர் சென்று கொண்டிருந்தனர். கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் மல்லியம்மன் கோவில் அருகே சென்றபோது சாலையோரத்தில் சிறுத்தை நடமாடுவதை வாகனத்தில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து … Read more

”கடற்பகுதிகளில் அகழாய்வு என்பது சாத்தியமா?” – அமர்நாத் ராமகிருஷ்ணன் சொல்லும் அரிய தகவல்கள்

கீழடியில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கையை மத்திய தொல்லியல்த்துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருக்கிறார். அவரிடம் புதிய தலைமுறை செய்தியாளர் பாலவெற்றிவேல் நடத்திய நேர்காணலைப் பார்க்கலாம்.. தொல்லியல் மீதான ஒரு விழிப்புணர்வு தமிழ்நாடு முழுவதுமே பெருகி இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக தான் தொல்லியல் துறை சார்பாக ஆய்வினை தமிழ்நாடு முழுதும் மயிலாடும் பாறையில் ஆரம்பித்து நிறைய இடங்களில் நடந்து வருகிறது. இந்திய தொல்லியல் துறையை பொருத்த வரையில் தமிழ்நாட்டின் கவனம் எப்படி … Read more

சிதம்பரம் : கல்லூரி பேராசிரியரைத் தாக்கிய முன்னாள் மாணவர்கள்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் ஆயிர கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கல்லூரியில் கடந்த எட்டாம் தேதி மகளிர் தினத்தன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.  இந்த நிகழ்சிக்கு கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களும் வந்து கலந்துள்ளனர். அப்போது முன்னாள் மாணவர்கள் சிலர் விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இதனால், கல்லூரி பேராசிரியர் ஒருவர் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் கல்லூரியை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளார்.  இதில், ஆத்திரமடைந்த முன்னாள் … Read more

நாளை முதல் பால் கிடைக்காது!!

நாளை காலை முதல் தமிழகம் முழுவதும் ஆவினுக்கு வழங்கக்கூடிய பால் நிறுத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டலினை சந்தித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் நாசருடன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் … Read more

மகளிர் கல்லூரி அருகே ஓடும் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தேடுகிறது காவல்துறை..!

புதுக்கோட்டையில் மகளிர் கல்லூரி அருகே, அச்சுறுத்தும் வண்ணம் பைக் சாகசத்தில் ஈடுபட்டு, வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இரு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல், ஓடும் பைக்கில் இடம் மாறி அமருவது போலவும், இரண்டு பைக்குகள் ஒன்றோடொன்று உரசுவது போலவும் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பின்னணி இசையுடன் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, வாகன பதிவெண்ணைக் கொண்டு இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். Source link

தஞ்சாவூர் | ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் சோதனையில் ரூ.52,430 பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு இடங்களில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.52,430 ரொக்கம் சிக்கியது. தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் திடீர் சோதனை இன்று மேற்கொண்டனர். இதேபோல், தஞ்சாவூர் – புதுக்கோட்டை சாலையிலுள்ள பிள்ளையார்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு அலுவலகத்தில் தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில், … Read more